தள்ளிப்போகும் ‘துருவ நட்சத்திரம்’..! விக்ரம் பிறந்தநாள் ஸ்பெஷலாக.. மாஸ் போஸ்டருடன் வந்த மெர்சல் அப்டேட்
கவுதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள துருவ நட்சத்திரம் திரைப்படத்தின் ஸ்பெஷல் போஸ்டருடன் முக்கிய அப்டேட்டையும் படக்குழு வெளியிட்டுள்ளது.
நடிகர் விக்ரம் இன்று தனது 57-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு சமூக வலைதளங்களில் பிரபலங்களும், ரசிகர்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதுமட்டுமின்றி அவரது பிறந்தநாள் ஸ்பெஷலாக அவர் நடிப்பில் உருவாகி வரும் படங்களில் இருந்து முக்கிய அப்டேட்டுகளும் வெளியிடப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இன்று காலை அவர் நடிக்கும் தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டு இருந்தது.
இந்நிலையில், தற்போது அவர் நடிப்பில் உருவாகி பல ஆண்டுகளாக கிடப்பில் கிடக்கும் துருவ நட்சத்திரம் படத்தின் அப்டேட்டும் தற்போது வெளியாகி உள்ளது. அதன்படி துருவ நட்சத்திரம் படத்தின் ஸ்பெஷல் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அதில் ஹாப்பி பர்த்டே சீஃப் என குறிப்பிட்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். மேலும் அந்த போஸ்டரில் துருவ நட்சத்திரம் சாப்டர் 1 - யுத்த காண்டம் எனவும் குறிப்பிடப்பட்டு உள்ளது.
இதையும் படியுங்கள்... Thangalaan : இதுதான்டா ஒரிஜினல் கே.ஜி.எஃப்...! மிரள வைக்கும் சீயான் விக்ரமின் ‘தங்கலான்’ மேக்கிங் வீடியோ இதோ
இதன்மூலம் இப்படத்தை இரண்டு பாகங்களாக ரிலீஸ் செய்ய உள்ளனர் என்பது உறுதியாகி உள்ளது. இதற்கு முன்னதாக விக்ரம் நடித்த சாமி திரைப்படம் இரண்டு பாகங்களாக ரிலீஸ் ஆகி உள்ளது. இதையடுத்து மணிரத்னம் இயக்கத்தில் அவர் நடித்த பொன்னியின் செல்வன் படமும் இரண்டு பாகங்களாக ரிலீஸ் செய்யப்பட உள்ள நிலையில், தற்போது துருவ நட்சத்திரம் படமும் அதேபாணியில் ரிலீசாக உள்ளதை படக்குழு உறுதி செய்துள்ளது.
துருவ நட்சத்திரம் படத்தை மே மாதம் திரைக்கு கொண்டு வர படக்குழு திட்டமிட்டு இருந்த நிலையில், தற்போது அப்படத்தின் பணிகள் இன்னும் முடிவடையாததால் படத்தின் ரிலீசை மே மாதத்தில் இருந்து ஜூலை மாதத்துக்கு தள்ளி வைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்படத்தில் விக்ரம் உடன் டிடி, ரித்து வர்மா, ஐஸ்வர்யா ராஜேஷ், சிம்ரன் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... திரையுலகின் சீயானுக்கு இன்று பிறந்தநாள்... ‘கென்னி’ விக்ரம் பற்றி பலரும் அறிந்திடாத 10 ஆச்சர்ய தகவல்கள் இதோ