விஜயை 26 வருசமா காதலிக்கிறேன்..! வெறித்தனமான ரசிகையின் அதிர வைக்கும் பேட்டி
நடிகர் விஜய்யை 26 வருடமாக காதலிப்பதாகவும், திருமணம் ஆன பின்னரும் இன்னும் அவரை காதலித்துக் கொண்டுதான் இருக்கிறேன் என்றும் அவரது ரசிகை ஒருவர் பேசி இருக்கிறார்.

Lady Who Love Vijay for 26 Years
நடிகர் விஜய் சினிமாவில் ஒரு உச்ச நட்சத்திரமாக உயர்ந்ததற்கு அவருக்கு இருக்கும் ரசிகர் கூட்டமே காரணம். சிரியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விஜய்யை ரசிக்கிறார்கள். அவரின் படங்களை விரும்பிப் பார்க்கிறார்கள். விஜய் சினிமாவில் நடிப்பதை நிறுத்துவிட்டு அரசியலுக்கு வர உள்ளது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக இருந்தாலும், மறுபுறம் அவர் மக்களுக்கு சேவை செய்ய வருகிறார் என்கிற சந்தோஷமும் மக்கள் மத்தியில் உள்ளது. நடிகர் விஜய்க்கு நிறைய ரசிகைகளும் உண்டு என்பது அனைவரும் அறிந்ததே, அந்த வகையில் விஜய்யின் தீவிர ரசிகை ஒருவர் அவரை 26 ஆண்டுகளாக காதலிப்பதாக கூறி இருப்பது இணையத்தில் வைரலாகி வருகிறது.
விஜய்யை காதலிக்கும் ரசிகை
நடிகர் விஜய் தவெக சார்பில் சனிக்கிழமை தோறும் ஒவ்வொரு ஊராக சென்று பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் கடந்த செப்டம்பர் 27-ந் தேதி நாமக்கல்லில் பிரச்சாரம் மேற்கொண்டார் விஜய். அங்கு விஜய்யை காண காலை முதலே ஏராளமான ரசிகர்களும், பெண்களும் கூடி இருந்தனர். அதில் ஒரு பெண் கொடுத்த பேட்டி தான் தற்போது இணையத்தில் செம வைரலாகி வருகிறது. அவர் நடிகர் விஜய்யை 26 ஆண்டுகளாக காதலிப்பதாக கூறி இருக்கிறார். திருமணத்துக்கு பின்னரும் அவரை காதலித்து வருவதாக அவர் கூறியது தான் ஹைலைட்.
நிறைய லவ் லெட்டர் எழுதிருக்கேன்
அந்த பேட்டியில் அவர் கூறியதாவது : நான் 26 வருஷமா தளபதியை லவ் பண்ணிட்டு இருக்கேன். அவரைமாதிரி ஒரு நபரை பார்க்க முடியாது. அவருக்கு நிறைய லவ் லெட்டர் எழுதி இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரிடமே உங்க பையனை லவ் பண்றேன்னு சொல்லிருக்காராம். நான் ஏன் அவர் மேல ஆசைப்படக் கூடாதா... அவரை இப்போ வரைக்கும் லவ் பண்ணிகிட்டு இருக்கேன். அவருக்கான மாற்றம் ஸ்டார்ட் ஆகிவிட்டது. அவர் நல்லபடியாக அரசியலில் வருவார். அவருக்கு தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாகவும் அந்த பெண் கூறி உள்ளார்.
விஜய்க்காக உயிரைக் கூட கொடுப்பேன்
தொடர்ந்து பேசிய அவர், 26 லட்சமா அவரை லவ் பண்ணிகிட்டு இருக்க நான் ஒருத்தியே ஒரு லட்சம் பேருக்கு சமம். தளபதியை விமர்சித்து பேசும் யாருமே அவருடைய கால் தூசிக்கு கூட சமமில்லை. இவரை மாதிரி ஒரு தலைமை வந்தால் ரொம்ப நல்லா இருக்கும். அந்த தலைமைக்காக தான் இத்தனை பேர் இங்கு கூடி இருக்கிறார்கள். அவர் வந்துவிட்டார். இனி அவரை கரம்பிடிச்சு தாங்க வேண்டியது எங்களுடைய கடமை. அவருடைய அழகு தான் என்னை அவர் மீது காதலில் விழ வைத்தது. என் காதல் என்னைக்கு இந்தாலும் அவருடன் கொண்டு சேர்க்கும். என்னை அவரை அண்ணானகவோ, தம்பியாகவோ ஏத்துக்கவே முடியாது. அவருக்காக என் உயிரைக் கூட கொடுப்பேன் என அந்தப் பெண் பேசியிருக்கும் வீடியோ செம வைரலாகி வருகிறது.