எந்த ட்யூன் போட்டாலும் நோ சொன்ன இயக்குனர்! இளையராஜா செய்த சம்பவம்! எவர்க்ரீன் ஹிட்டான பாடல்!
கேப்டன் பிரபாகரன் படத்தின் 'ஆட்டமா தேரோட்டமா' பாடலின் பின்னணியில் உள்ள சுவாரஸ்ய தகவல் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
Ilayaraja Music
இசைஞானி, இசை கடவுள், இசை அரசன் என பல பெயர்களால் அழைக்கப்படும் இளையராஜாவுக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் இருக்கின்றனர். இளையராஜா திறமையான இசையமைப்பாளர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் அவர் மிகவும் வேகமாக வேலை செய்பவர் கூட, ஒரு படத்தில் இடம்பெறும் 5 பாடல்களுக்கு இசையமைக்க எடுத்துக் கொள்ளும் நேரம் எவ்வளவு தெரியுமா? ஒரு மணி நேரம் அல்லது 2 மணி நேரத்திற்குள் ஒரு படத்தின் அனைத்து பாடல்களுக்கும் இசையமைத்துவிடுவாராம்.
Music Director Ilayaraja
டியூன் ஓ.கே ஆன பின் மாலைக்குள் பாடலை ரெக்கார்டிங் செய்து கொடுத்துவிடுவார். அதே போல் ஒரு படத்திற்கு இசையமைக்க இளையராஜா எடுத்துக் கொள்ளும் நேரமும் மிகவும் குறைவு தான். இளையராஜாவின் எண்ணற்ற பாடல்கள் காலம் கடந்து கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்படும் குணா படத்தின் பாடல்களுக்கு வெறும் 2 மணி நேரத்தில் இசையமைத்து கொடுத்துள்ளார் இளையராஜா.
குணா மட்டுமின்றி ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கும் பல சூப்பர் ஹிட் பாடல்களுக்கும் இசையமைக்க இளையராஜா எடுத்துக் கொண்ட நேரம் மிகவும் குறைவு தான்.
ஏ.ஆர்.ரகுமான் இல்லை; ரோஜா படத்திற்கு இசையமைக்க மணிரத்னத்தின் முதல் சாய்ஸ் இவரா?
Ilayaraja Songs
அந்த வகையில் மதிய உணவு வருவதற்கு தாமதமான இடைவெளியில், ஒரு படத்திற்கு 9 பாடல்களுக்கும் இசையமைத்துக் கொடுத்துள்ளார். அந்த படத்தின் பாடல்களும் பட்டி தொட்டி எங்கும் ஹிட்டானது. அது வேறு எந்த படமும் இல்லை. சின்னத்தம்பி தான். சின்னத்தம்பி படத்தின் மாபெரும் வெற்றிக்கு இளையராஜாவின் பாடல்கள் முக்கிய காரணமாக அமைந்தது.
அந்த வகையில் ஆர்.கே. செல்வமணி இயக்கத்தில் இளையராஜா இசையில் உருவான கேப்டன் பிரபாகரன் படத்தில் இடம்பெற்ற ஒரு எவர்க்ரீன் ஹிட் பாடல் குறித்த சுவாரஸ்ய தகவல் வெளியாகி உள்ளது. புலன் விசாரணை படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு பிறகு ஆர்.கே.செல்வமணி இயக்கிய படம் தான் கேப்டன் பிரபாகரன். விஜயகாந்தின் 100-வது படமாக வெளியான இந்த படம் அந்த காலக்கட்டத்தில் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் படமாக அமைந்தது.
Music Director Ilayaraja
இந்த படத்தில் 2 பாடல்கள் மட்டுமே இருக்கும். படத்தின் ஒரு காட்சிக்கு ஒரு பாடல் வேண்டும் என்று இளையராஜாவிடம் சொல்லி இருக்கிறார் ஆர்.கே. செல்வமணி இளையராஜா 20 டியூன்களை போட்டு காண்பிக்க ஆர்.கே. செல்வமணிக்கு எந்த டியூனிலுமே திருப்தி வரவில்லை.
பின்னர், இளையாராவிடம், நான் ஷோலே மாதிரி ஒரு படம் எடுக்கிறேன். எனக்கு மெகபூபா மாதிரி ஒரு பாடல் வேண்டும் என்று அவர் கூறியிருக்கிறார்.
அதன்பின்னர் இளையராஜா டியூன் போட்ட பாடல் தான் ஆட்டமா தேரோட்டமா பாடல். மறைந்த பிரபல பாடகி ஸ்வர்ணலதா குரலில் வெளியான இந்த பாடல் எவர்க்ரீன் ஹிட் பாடலாக அமைந்தது. இன்றும் பலரின் பிளேஸ்ஸ்டுகளில் ஆக்கிரமித்திருக்கிறது என்றே சொல்ல வேண்டும்.
ஆனால் தன்னுடைய தொழில் மீது கொண்ட பக்தியின் காரணமாக, எந்தவித மறுப்பும் சொல்லாமல் அந்த முழு திரைப்படத்திற்கும் திறன்பட இசையமைத்து முடித்திருக்கிறார். அந்த திரைப்படத்தில் சிறியதும் பெரியதுமாய் மொத்தம் ஒன்பது பாடல்கள். ஆனால் இந்த ஒன்பது பாடல்களையும் ஒரே பாடகர், இரண்டே இரண்டு பாடகிகளை வைத்து ஒட்டுமொத்த திரைப்படத்தையும் முடித்திருப்பார் இளையராஜா.