ஏ.ஆர்.ரகுமான் இல்லை; ரோஜா படத்திற்கு இசையமைக்க மணிரத்னத்தின் முதல் சாய்ஸ் இவரா?
ரோஜா படத்தின் மூலம் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் அறிமுகமானார் என்பது அனைவரும் அறிந்ததே, ஆனால் அப்படத்திற்கு இசையமைக்க மணிரத்னம் மைண்டில் இருந்தது வேறு ஒருவராம்.
Roja movie
மணிரத்னம் இயக்கிய மாஸ்டர் பீஸ் படங்களில் ஒன்று ரோஜா. கடந்த 1992-ம் ஆண்டு வெளிவந்த இப்படத்தை கே.பாலச்சந்தர் தயாரித்திருந்தார். தமிழ் சினிமாவுக்கே இப்படம் ஒரு திருப்புமுனையாக அமைந்தது என்றே சொல்லலாம். ஏனெனில் இப்படத்திற்கு முன்னர் வரை இளையராஜா தான் கோலிவுட்டில் ஆதிக்கம் செலுத்தி வந்தார். அவர் கை ஓங்கி இருந்தது. அந்த சமயத்தில் தான் ஏ.ஆர்.ரகுமான் எனும் புதுமுகத்தை அறிமுகப்படுத்தினார் ரோஜா படத்தின் தயாரிப்பாளர் கே.பாலச்சந்தர்.
AR Rahman, Ilaiyaraaja
கே.பாலச்சந்தர் எடுத்த இந்த முடிவு தமிழ் சினிமாவின் தலையெழுத்தையே மாற்றியது. அதற்கு முன்னர் வரை இளையராஜாவையே நம்பி இருந்தவர்களுக்கு ஏ.ஆர்.ரகுமான் எனும் புது இசை நாயகனை கொடுத்தது ரோஜா படம் தான். முதல் படத்திலேயே தான் கத்துக்கிட்ட மொத்த வித்தையையும் இறக்கிய ரகுமான், அப்படத்தின் பாடல்களால் ஒரு மேஜிக்கை நிகழ்த்தினார். அதற்கு அவருக்கு கிடைத்த பரிசு தான் தேசிய விருது. அதுவும் இளையராஜாவை ஒரு ஓட்டு வித்தியாசத்தில் வீழ்த்தி தேசிய விருதை தட்டிச் சென்றார் ரகுமான்.
இதையும் படியுங்கள்... மூன்றே மணிநேரம்; 3 படங்களுக்கு 21 டியூன் போட்டு மிரட்டிய இளையராஜா - என்னென்ன படங்கள் தெரியுமா?
AR Rahman, Maniratnam
இப்படி ரோஜா படம் ஏ.ஆர்.ரகுமானுக்கு ஒரு அடையாளமாகவே மாறியது. ஆனால் ரோஜா படத்திற்கு இசையமைக்க இயக்குனர் மணிரத்னத்தின் பர்ஸ்ட் சாய்ஸாக இருந்தது ரகுமான் இல்லை என்று சொன்னால் நம்ப முடிகிறதா. ஆனால் அதுதான் உண்மை. ரோஜா படத்திற்கு முன்னர் வரை இளையராஜா உடன் பயணித்து வந்த மணிரத்னம், ரோஜா படத்திற்கு இசையமைக்க மகேஷ் மகாதேவன் என்பவரை தான் முதன்முதலில் அணுகினாராம். ஆனால் அவர் அந்த சமயத்தில் பிசியாக இருந்ததால் அந்த வாய்ப்பு ரகுமானுக்கு சென்றுவிட்டது.
AR Rahman
அதுவும் மணிரத்னத்தின் சகோதரி மூலம் தான் ஏ.ஆர்.ரகுமானுக்கு ரோஜா பட வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அவர்தான் மணிரத்னத்திடம் ரகுமானை அறிமுகம் செய்துவைத்திருக்கிறார். அப்போது ரகுமானை அவரது ஸ்டூடியோவில் சந்தித்த மணிரத்னம், அவர் கம்போஸ் செய்து வைத்திருந்த ட்யூனை கேட்டு இம்பிரஸ் ஆகி ரோஜா பட வாய்ப்பை கொடுத்திருக்கிறார். மேலும் மகேஷ் மகாதேவன் வேறுயாருமில்லை, நடிகர் கமல்ஹாசனின் நெருங்கிய நண்பர் ஆவார். கடந்த 1994-ம் ஆண்டு வெளிவந்த கமலின் நம்மவர் படத்திற்கு இசையமைத்ததும் இந்த மகேஷ் மகாதேவன் தான்.
இதையும் படியுங்கள்... எம்.ஜி.ஆரை முதல் முறையாக கண் கலங்கி அழ வைத்த கண்ணதாசன் பாடல்! எது தெரியுமா?