MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • தப்பு கணக்கு போட்ட விஜயகாந்த்..! ஓடவே ஓடாதுனு நடிச்ச படம்; சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த கதை தெரியுமா?

தப்பு கணக்கு போட்ட விஜயகாந்த்..! ஓடவே ஓடாதுனு நடிச்ச படம்; சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த கதை தெரியுமா?

கேப்டன் விஜயகாந்த் தமிழ் சினிமாவில் ஏராளமான ஹிட் படங்களை கொடுத்திருக்கிறார். அவர் ஓடவே ஓடாது என நினைத்து நடித்த படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆகி இருக்கிறது. அதைப்பற்றி பார்க்கலாம்.

2 Min read
Author : Ganesh A
Published : Aug 25 2025, 11:25 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Vijayakanth Movie Secret
Image Credit : Facebook

Vijayakanth Movie Secret

சினிமாவில் என்ன நடக்கும் என்பதை யாராலும் கணிக்க முடியாது. ஒரு படத்தை கதை கேட்டு தேர்வு செய்யும் ஹீரோக்களினாலேயே அதன் வெற்றியை யூகிக்க முடியாது. சிலர் இந்த படம் கன்பார்ம் ஹிட் ஆகும் என கணித்து இங்கு பிளாப் ஆன படங்கள் ஏராளம். அதேபோல் ஒரு சில நடிகர்கள் நடிக்கும் போதே இந்த படம் தேறுமா தேறாதா என யூகிப்பார்கள். அப்படி கேப்டன் விஜயகாந்த், ஒரு படத்தில் நடிக்கும் போதே இது ஓடாது என கூறி நடித்த படம் ஒன்று பின்னாளில் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்திருக்கிறது. அந்த மாஸ்டர் பீஸ் திரைப்படம் என்ன என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

24
விஜயகாந்த் தப்பு கணக்கு போட்ட படம் என்ன?
Image Credit : Facebook

விஜயகாந்த் தப்பு கணக்கு போட்ட படம் என்ன?

அந்த படம் வேறெதுவுமில்லை... ஆர்.வி.உதயகுமார் இயக்கத்தில் அவர் நடித்த சின்ன கவுண்டர் தான். விஜயகாந்த் என்றாலே அதிரடி, ஆக்‌ஷன் தான் என்று இருந்த காலகட்டத்தில், அவருக்கு வந்த படம் தான் சின்ன கவுண்டர். இப்படத்தின் கதை கேட்டபோதே விஜயகாந்துக்கு அதில் நடிக்க விருப்பமில்லையாம். ஆனால் அவரின் நண்பர் ராவுத்தர் சொன்னதால் தான் அதில் நடிக்கவே ஒப்புக்கொண்டாராம் கேப்டன். வழக்கமாக விஜயகாந்த் தன் படங்களில் பக்கம் பக்கமாக வசனம் பேசுவார். ஆனால் சின்ன கவுண்டர் படத்தில் அவருக்கு அதிகளவில் வசனம் இடம்பெற்று இருக்காது.

Related Articles

Related image1
'கேப்டன்' விஜயகாந்த் படத்தை இனி யாரும் யூஸ் பண்ணக்கூடாது! ஒரே போடாக போட்ட பிரேமலதா! காரணம் இதுதான்!
Related image2
Now Playing
விஜயகாந்தை குருவாக ஏற்றுக் கொள்வாரா? பிரேமலதா விஜயகாந்த் கேள்வி அடுத்து என்ன நடக்கும்?
34
படம் ஓடாதுனு சொன்ன விஜயகாந்த்
Image Credit : Facebook

படம் ஓடாதுனு சொன்ன விஜயகாந்த்

சின்ன கவுண்டர் படத்தில் அவரை சுற்றி நடித்த பலரும் ஏராளமான வசனம் பேசி நடிக்க, அவரோ அமைதியாக நிற்கும்படியான காட்சிகள் முதலில் எடுக்கப்பட்டு இருக்கிறார். இதனால் ஒரு கட்டத்தில் கோபமடைந்த விஜயகாந்த், ஆர்.வி.உதயகுமாரின் உதவி இயக்குனர்களிடம், என்னயா எல்லாரும் வசனம் பேசுறாங்க. எனக்கு மட்டும் உதயகுமார் வசனம் எழுத மாட்டானா என கேட்டதோடு, என்னை சும்மாவே நிக்க வச்சிட்டு இருந்தா இந்த படம் ஓடாது எனவும் கூறி இருக்கிறார். இதை இயக்குனர் ஆர்.வி உதயகுமாரே ஒரு பேட்டியில் கூறி இருந்தார்.

44
கேப்டனின் கெரியரில் மிகப்பெரிய வெற்றிப்படம்
Image Credit : Facebook

கேப்டனின் கெரியரில் மிகப்பெரிய வெற்றிப்படம்

பின்னர் இந்த தகவல் உதயகுமார் காதுக்கு சென்றதும், அவர் கேப்டனை அமரவைத்து, இந்த கேரக்டர் அதிகம் பேசமாட்டான். ஆனால் அவனைப் பற்றி ஊரே பேசும். அப்படி இருக்கும் ஒரு கம்பீரமான கதாபாத்திரம் ஏன் அதிகம் பேச வேண்டும் என சொல்லி இருக்கிறார். இதைப் புரிந்துகொண்டு விஜயகாந்தும் அப்படத்தில் நடித்து முடித்திருக்கிறார். ஆனால் படத்தின் ரிசல்ட் அவருக்கு மிகப்பெரிய ஆச்சர்யமாக அமைந்தது. விஜயகாந்தின் கெரியரில் மிகப்பெரிய வசூல் சாதனை நிகழ்த்திய படங்களில் சின்ன கவுண்டரும் ஒன்று. அப்படத்திற்கு கூடுதல் பலம், சேர்த்தது இசைஞானி இளையராஜாவின் இசை. அப்படத்தின் பாடல்கள் காலம் கடந்து கொண்டாடப்பட்டு வருகிறது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
சினிமா
தமிழ் சினிமா
Latest Videos
Recommended Stories
Recommended image1
சந்திரகலாவை லெப்ட்-ரைட் வாங்கிய சாமுண்டீஸ்வரி! ஆதாரத்துடன் சிக்கிய வில்லி - இனி கலாவுக்கு இந்த வீட்டில் இடமில்லையா?
Recommended image2
அச்சு அசல் மாதம்பட்டி ரங்கராஜ் போலவே இருக்கும் மகன்! ஜாய் கிரிசில்டா பகிர்ந்த "ஜூனியர் மாதம்பட்டி" வைரல் போட்டோ!
Recommended image3
Now Playing
Movie Review | Kadhal Reset Repeat திரைப்படம் எப்படி இருக்கு ? முழு விவரம் | VJ Viswa
Related Stories
Recommended image1
'கேப்டன்' விஜயகாந்த் படத்தை இனி யாரும் யூஸ் பண்ணக்கூடாது! ஒரே போடாக போட்ட பிரேமலதா! காரணம் இதுதான்!
Recommended image2
Now Playing
விஜயகாந்தை குருவாக ஏற்றுக் கொள்வாரா? பிரேமலதா விஜயகாந்த் கேள்வி அடுத்து என்ன நடக்கும்?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved