- Home
- Cinema
- விஜய் டிவிக்கு மிரட்டல் விடுக்கப்பட்டதா? நீயா நானா ‘மும்மொழிக் கொள்கை’ எபிசோடை நிறுத்தியது ஏன்?
விஜய் டிவிக்கு மிரட்டல் விடுக்கப்பட்டதா? நீயா நானா ‘மும்மொழிக் கொள்கை’ எபிசோடை நிறுத்தியது ஏன்?
விஜய் டிவியில் கோபிநாத் தலைமையில் நடத்தப்பட்ட மும்மொழிக் கொள்கை தொடர்பான நீயா நானா நிகழ்ச்சி கடைசி நேரத்தில் ஒளிபரப்பப்படவில்லை.

Vijay TV Neeya Naana Stopped : தமிழ்நாட்டில் புகழ்பெற்ற விவாத நிகழ்ச்சி என்றால் அது நீயா நானா தான். இந்நிகழ்ச்சியை 15 ஆண்டுகளுக்கு மேலாக கோபிநாத் தான் தொகுத்து வழங்கி வருகிறார். பல்வேறு சமூக பிரச்சனைகளை விவாதித்துள்ள இந்நிகழ்ச்சி, அண்மையில், தமிழ்நாட்டில் பற்றி எரியும் மும்மொழிக் கொள்கை விவகாரத்தை ஆதரிப்பவர்கள் வெர்சஸ் எதிர்ப்பவர்கள் என்கிற தலைப்பில் ஒரு விவாத நிகழ்ச்சியை நடத்த உள்ளதாக அறிவித்தது.
Netizens Reaction
இந்த அறிவிப்பு வெளியானபோதே இதன்மீதான எதிர்பார்ப்பு அதிகரித்தது. இந்த எபிசோடு ஷூட்டிங் முடிக்கப்பட்டு, அதன் எடிட்டிங் வேலைகளும் நிறைவடைந்து, இந்த வாரம் ஒளிபரப்பாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்த வாரம் அந்த எபிசோடு ஒளிபரப்பப்படவில்லை. அரசியல் அழுத்தம் காரணமாக மும்மொழிக் கொள்கை தொடர்பான விவாத நிகழ்ச்சியை ஒளிபரப்பும் முடிவை விஜய் டிவி கைவிட்டுவிட்டு, வேறொரு டாப்பிக்கில் விவாதம் நடத்தி அந்த எபிசோடை இந்த வாரம் ஒளிபரப்பி இருக்கிறார்கள்.
இதையும் படியுங்கள்... ஔிப்பரப்பான அரை மணிநேரத்தில் வீடு தேடி வந்துட்டாங்க... நீயா நானா பார்த்து விஜய் செய்த பேருதவி
X Post
மேலும் மும்மொழிக் கொள்கை தொடர்பான விவாத நிகழ்ச்சியின் போது அதனை எதிர்ப்பவர்கள் முன்வைத்த வாதத்திற்கு பதில் சொல்ல முடியாமல் மும்மொழிக் கொள்கையை ஆதரித்தவர்கள் திணறியதாகவும். தமிழ்நாட்டிற்கு இருமொழிக் கொள்கையே போதுமானது என்கிற குரல் ஓங்கி ஒலித்ததன் காரணமாகவும் இந்த நிகழ்ச்சியை ஒளிபரப்பினால் தமிழ்நாட்டில் புதிய கல்விக் கொள்கையை கொண்டுவருவதில் மேலும் சிக்கலாகும் என கருதி தொலைக்காட்சி நிர்வாகத்துக்கு அழுத்தம் கொடுத்து இந்நிகழ்ச்சியை ஒளிபரப்ப விடாமல் பாஜகவினர் தடுத்துவிட்டதாக சமூக வலைதளங்களில் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.
Twitter reaction
அண்மையில் மோடி எதிராக புகைப்படம் வெளியிட்ட ஆனந்த விகடன் தளம் முடக்கப்பட்டதை போல் தற்போது விஜய் டிவி நிகழ்ச்சியையும் தடுத்து நிறுத்தி உள்ளது கருத்து சுதந்திரத்தை கேள்விக்குறி ஆக்குவதாக கூறும் நெட்டிசன்கள் பாஜகவை விமர்சித்து பதிவுகளை போட்டு வருகிறார்கள். மேலும் மும்மொழிக் கொள்கை தொடர்பாக நடைபெற்ற நீயா நானா நிகழ்ச்சியை ஒளிபரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அரசுக்கு கோரிக்கை வைத்து வருகின்றனர்.
இதையும் படியுங்கள்... Neeya Naana Pranav : 25 தோசை சாப்பிடுவேன்... நீயா நானாவால் டிரெண்டான இளைஞர் ரயிலில் அடிபட்டு பரிதாப பலி