நீயா நானா நிகழ்ச்சியில் 25 தோசை சாப்பிடுவேன் என சொல்லி பேமஸ் ஆன பிரணவ் என்பவர் ரயில் மோதி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பேமஸ் ஆன நிகழ்ச்சிகளில் நீயா நானாவும் ஒன்று. கோபிநாத் தொகுத்து வழங்கும் இந்நிகழ்ச்சி கடந்த 2006-ம் ஆண்டு தொடங்கப்பட்டு தற்போது வரை சக்சஸ்புல்லாக நடத்தப்பட்டு வருகிறது. இந்நிகழ்ச்சியில் வாரந்தோறும் ஒரு தலைப்பில் இருதரப்பினர் இடையே விவாதம் நடைபெறும். சமீப காலமாக நீயா நானா நிகழ்ச்சியில் பங்கேற்பவர்கள் சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வைரல் ஸ்டார் ஆகிவிடுகின்றனர்.

அந்த வகையில் கடந்த பிப்ரவரி மாதம் ஒளிபரப்பான நீயா நானா நிகழ்ச்சியில், தோசை கொண்டாடப்பட வேண்டிய உணவு என ஒரு தரப்பினரும், தோசை ஒரு சாதாரண உணவு தான் என சொல்பவர்கள் ஒருபுறமும் இருக்க இருதரப்பினருக்கும் இடையே ஒரு சுவாரஸ்யமான விவாத நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் இளம்பெண் ஒருவர் தனது அண்ணன் விதவிதமாக தோசை சாப்பிடுவதை பற்றி கடுப்புடன் பேச, அவரது தாய் எதிர்தரப்பில் இருந்து மகனுக்கு சப்போர்ட் பண்ணி பேசிய நிகழ்வு அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

இதையும் படியுங்கள்... தம்பியின் பிறந்தநாள்.. சொகுசு கார் பரிசளித்து வாழ்த்திய விஜய பிரபாகரன் - ரிலீசான படை தலைவன் ஸ்பெஷல் வீடியோ!

தன் மகன் 20 தோசைக்கு வெரைட்டி வெரைட்டியாக சாப்பிடுவான் என விவரமாக விளாக்கிக் கூறியதை கேட்ட உடன் கோபிநாத்தே, யாருப்பா அந்த மனுஷன் எனக்கே அவனை பார்க்கணும் போல இருக்கு என சொல்லியிருப்பார். அந்த ஷோவின் மூலம் டிரெண்டானவர் தான் பிரணவ். அந்நிகழ்ச்சிக்கு பின்னர் யூடியூப் சேனலுக்கும் அவர் தன் அம்மா மற்றும் தங்கையோடு பேட்டி அளித்திருந்தார். அதில் 25 தோசை சாப்பிட்டும் காட்டி இருந்தார்.

Scroll to load tweet…

நீயா நானா மூலம் பிரபலமான அந்த பிரணவ் தான் தற்போது இரயில் மோதி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். குரோம்பேட்டை இரயில் நிலையத்தில் கடந்த வாரம் புதன்கிழமை அன்று, இரவு 10.30 மணியளவில் தண்டவாளத்தை கடக்க முயன்றபோது 22 வயதாகும் பிரணவ் தின்சுகியா எக்ஸ்பிரஸ் ரயில் மோதி உயிரிழந்துள்ளார். மொபைல் போனில் பேசிக்கொண்டே தண்டவாளத்தை கடக்க முயன்றபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. அவரோடு தண்டவாளத்தை கடக்க முயன்ற சதீஷ் என்பவரும் இந்த விபத்தில் பலியானது குறிப்பிடத்தக்கது.

எவனோ நம்ம பையன் தான்.. 🤣Neeya Naana| Episode Preview

இதையும் படியுங்கள்... பிரைவேட் ஜெட்; ரூ.100 கோடிக்கு சொகுசு வீடு! கோடிகளில் புரளும் புஷ்பா நாயகன் அல்லு அர்ஜுனின் சொத்து மதிப்பு இதோ