Shanmuga Pandian : மறைந்த நடிகர் விஜயகாந்த் அவர்களின் இளைய மகன் சண்முக பாண்டியன் நடிப்பில் படை தலைவன் என்ற படம் உருவாகி வருகின்றது. அந்த படத்தில் இருந்து ஸ்பெஷல் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான "சகாப்தம்" என்கின்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் தான் சண்முக பாண்டியன். இவர் மறைந்த அரசியல் தலைவரும், மூத்த நடிகருமான கேப்டன் விஜயகாந்த் அவர்களின் இளைய மகன் என்பது அனைவரும் அறிந்தது. சகாப்தம் படத்தில் கேமியோ கதாபாத்திரத்தில் கேப்டன் விஜயகாந்த் நடித்திருந்தார். 

இந்நிலையில் தற்போது சண்முக பாண்டியன் நடிப்பில் "படைத்தலைவன்" என்கின்ற திரைப்படம் உருவாகி வருகிறது. நேற்று ஏப்ரல் 6ம் தேதி தன்னுடைய பிறந்தநாளை அவர் கொண்டாடிய நிலையில், மறைந்த தனது தந்தை விஜயகாந்த் அவர்களுடைய நினைவிடத்திற்கு சென்று ஆசி பெற்று கண்ணீர் மல்க தனது தந்தையை நினைவு கூர்ந்தார். 

Amala Love : உருகி உருகி காதலித்த வில்லனுக்கு நோ சொல்லிவிட்டு... ஹீரோவுக்கு 2ம் தாரமாக வாக்கப்பட்ட நடிகை அமலா!

மேலும் தனது தந்தை இல்லாமல் தான் கொண்டாடும் முதல் பிறந்தநாள் இதுவென்றும் அவர் கூறினார். மேலும் அவருடைய பிறந்த நாளில் அவரது அண்ணனும், தேமுதிக கட்சி உறுப்பினருமான விஜய பிரபாகரன் அவர்கள் தனது தம்பி சண்முக பாண்டியனுக்கு சொகுசு கார் ஒன்றை பரிசளித்துள்ளார். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது. 

Scroll to load tweet…

மேலும் நேற்று ஏப்ரல் 6ம் தேதி தற்பொழுது சண்முக பாண்டியன் நடித்து வரும் படைத்தலைவன் படத்திலிருந்து ஒரு சிறப்பு வீடியோ ஒன்றையும் படக்குழு, அவருடைய பிறந்தநாள் ட்ரீட்டாக வெளியிட்டுள்ளது. இந்த திரைப்படத்தில் பிரபல நடிகர் ராகவா லாரன்ஸ் அவர்கள் சிறப்பு தோற்றத்தில் நடிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

Sobhita : முத்து பதித்த ஆடையில் ஹாட் போஸ்.. கொள்ளை அழகில் மின்னும் பூவாக சோபிதா துலிபாலா - ஹாட் பிக்ஸ்!