MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • Amala Love : உருகி உருகி காதலித்த வில்லனுக்கு நோ சொல்லிவிட்டு... ஹீரோவுக்கு 2ம் தாரமாக வாக்கப்பட்ட நடிகை அமலா!

Amala Love : உருகி உருகி காதலித்த வில்லனுக்கு நோ சொல்லிவிட்டு... ஹீரோவுக்கு 2ம் தாரமாக வாக்கப்பட்ட நடிகை அமலா!

நடிகை அமலா தன்னை உருகி உருகி காதலித்த வில்லன் நடிகருக்கு நோ சொல்லிவிட்டு பிரபல ஹீரோவை திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆகிவிட்டார்.

2 Min read
Author : Ganesh A
Published : Apr 07 2024, 06:09 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

1980-களில் தமிழ் திரையுலகில் டாப் ஹீரோயினாக கொடிகட்டிப் பறந்தவர் நடிகை அமலா. டி.ராஜேந்தர் இயக்கிய மைதிலி என்னை காதலி திரைப்படத்தின் மூலம் கோலிவுட்டில் காலடி எடுத்து வைத்த இவர், அடுத்தடுத்து ரஜினிகாந்த், கமல்ஹாசன், மோகன் போன்ற டாப் ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்தார். குறிப்பாக கமலுக்கு ஜோடியாக அவர் நடித்த சத்யா திரைப்படம் இன்றளவும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.

24

தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் என பான் இந்தியா நடிகையாக வலம் வந்த அமலா கடந்த 1992-ம் ஆண்டு தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவை காதலித்து கரம்பிடித்தார். திருமணத்துக்கு பின்னர் சினிமாவை விட்டு விலகிய அமலா, தமிழ் திரையுலகில் சுமார் 30 ஆண்டுகளாக நடிக்காமல் இருந்து வந்தார். இதையடுத்து கடந்த 2022-ம் ஆண்டு வெளிவந்த கணம் என்கிற படம் மூலம் மீண்டும் ரீ-எண்ட்ரி கொடுத்த அவர், அதன் பின்னர் எந்த படத்திலும் நடிக்கவில்லை.

இதையும் படியுங்கள்... Rajinikanth : வேட்டையன் பராக்.. ஞானவேல் இயக்கத்தில் "தலைவர் 170" - ரிலீஸ் எப்போது? Lyca கொடுத்த மாஸ் அப்டேட்!

34

நாகார்ஜுனாவை திருமணம் செய்யும் முன்னர் வில்லன் நடிகர் ஒருவரின் காதலை நிராகரித்துள்ளார் அமலா. அந்த நடிகர் வேறுயாருமில்லை, 90ஸில் டாப் வில்லனாக வலம் வந்த ரகுவரன் தான். அவர் நடிகை அமலா உடன் கூட்டுப்புளுக்கள் என்கிற திரைப்படத்தில் கடந்த 1987-ம் ஆண்டு நடித்தார். அப்போது அமலா மீது காதல் ஏற்பட்டு அவரிடம் தன்னுடைய காதலை வெளிப்படுத்தி இருக்கிறார் நடிகர் ரகுவரன். ஆனால் அவரின் காதலுக்கு நோ சொல்லிவிட்டாராம் அமலா. அது தனக்கு மிகுந்த மன வேதனையை தந்ததாக ரகுவரனே பேட்டி ஒன்றில் கூறி இருந்தார்.

44

நடிகர் நாகார்ஜுனாவின் இரண்டாவது மனைவி தான் அமலா. அதற்கு முன்னரே லட்சுமி என்பவரை திருமணம் செய்துகொண்டு அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை விவாகரத்து செய்து பிரிந்துவிட்டார் நாகார்ஜுனா. இவர்களுக்கு பிறந்தவர் தான் நடிகர் நாக சைதன்யா. நடிகர் நாகார்ஜுனா - நடிகை அமலா ஜோடிக்கு அகில் என்கிற ஒரே ஒரு ஆண் குழந்தை மட்டும் உள்ளார். இவரும் தற்போது தெலுங்கு திரையுலகில் ஹீரோவாக நடித்து வருகிறார்.

இதையும் படியுங்கள்... Romeo : "ஓட்டுக்கு காசு குடுத்தா வாங்கிக்கோங்க".. ஆனா.. "ரோமியோ" பிரஸ் மீட்டில் ஓப்பனாக பேசிய விஜய் ஆண்டனி!

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved