பாக்கிய லட்சுமி சீரியல் நடிகர் விஷாலுக்கு பிரபல சீரியல் ஹீரோயினுடன் காதல் தோல்வி? தீயாய் பரவும் தகவல்!
சீரியல் பிரபலங்கள் அடிக்கடி காதல் சிக்குகிசுவில் சிக்குவது வழக்கமாகி வருகிறது. அந்த வகையில் 'பாக்கிய லட்சுமி' சீரியல் நடிகர் விஷால், 'ராஜா ராணி' சீரியல் ஹீரோயினை காதலிப்பதாக சில தகவல் அவ்வப்போது வெளியான நிலையில், தற்போது இருவரும் காதலை முறித்து கொண்டதாக கூறப்படுகிறது.
Baakiyalakshmi
விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும், சீரியல்களை - ரியாலிட்டி ஷோக்களும் எந்த அளவிற்கு மிகவும் பிரபலமோ... அதே போல் விஜய் டிவி பிரபலங்கள் குறித்து வெளியாகும் கிசுகிசுக்களும் மிகவும் பிரபலம்.
ஆலியா மானசா - சஞ்சீவ், போன்று இந்த சீரியலில் சேர்ந்து நடித்த போது... உண்மையாகவே சிலர் காதலித்து திருமணமும் செய்து கொண்டுள்ளனர். ரியாலிட்டி ஷோ மூலமாகவும் பல காதல் பிறந்து திருமணத்தில் முடிந்துள்ளது.
மேலும் செய்திகள்: திடீர் என நடந்த 90'ஸ் நாயகிகள் கெட் டூ கெதர் பார்ட்டி... சிங்கிளாக கலந்து கொண்டு ஜமாய்த்த பிரபல நடிகர்! போட்டோ
அந்த வகையில் கடந்த சில மாதங்களாக காதல் கிசுகிசுவில் சிக்கியது இரண்டு ஜோடிகள். பாரதி கண்ணம்மா சீரியல் நாயகன் அருண் மற்றும் ராஜா ராணி சீரியல் வில்லி அர்ச்சனாவும் காதலித்து வருவதாக கூறப்பட்டு வந்த நிலையில், அதில் உண்மை இல்லை என்பதை அர்ச்சனா சமீபத்தில் வீடியோ மூலம் தெரிவித்திருந்தார்.
இதை தொடர்ந்து பாக்கிய லட்சுமி சீரியலில் நடித்து வரும் எழில் மற்றும் ராஜா ராணி சீரியல் நடிகை ரியா ஆகியோர் காதலித்து வருவதாக சில தகவல்கள் வெளியானது. ஆனால் இருவருமே இது குறித்து எந்த ஒரு அதிகார பூர்வ தகவலையும் வெளியிடாமல் இருந்த நிலையில் இவர்களுக்குள் காதல் முறிவு ஏற்பட்டு விட்டதாக நிகழ்ச்சி ஒன்றில் கூறியுள்ளார் எழில்.
மேலும் செய்திகள்: 20 வருடங்களுக்கு பின் மீண்டும் ரஜினிகாந்துடன் 'ஜெயிலர்' படத்தில் இணைந்த ரம்யா கிருஷ்ணன்!
சமீபத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் புதிய நிகழ்ச்சியான ராஜு வூட்ல பார்ட்டி நிகழ்ச்சியில் விஷால் கலந்துகொண்டார். அப்போது அவருடைய காதல் குறித்து கேள்விகள் எழுப்ப பட்டது. இதற்க்கு விஷால் சில வாரங்களுக்கு முன்பு தான் தனக்கு காதல் தோல்வி ஏற்பட்டதாக கூறியுள்ளார். எனவே நெட்டிசன்கள் பலரும் ரியாவை தான் விஷால் பிரேக் அப் செய்துவிட்டதாக கூறி வருகிறார்கள்.