ஒவ்வொரு நொடியும் நயன்தாராவை நெகிழ வைத்த விஜய் டிவி..! சிறப்பு புகைப்பட தொகுப்பு..!
நடிகை நயன்தாரா, நேற்றைய தினம் 'ஹாட் ஸ்டார்' ஓடிடி தளத்தில் வெளியான 'நெற்றிக்கண்' பார்வை படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிக்காக டிடி தொகுத்து வழங்கிய சிறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இதில் அவரை உணர்வு பூர்வமாக சந்தோஷப்படும் தருணங்கள் பல இருந்தன... இதுகுறித்த சிறப்பு புகைப்பட தொகுப்பு இதோ..

தொடர்ந்து கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் எடுக்கப்பட்டு வரும் திரைப்படங்களை மட்டுமே, அதிகமாக தேர்வு செய்து நடித்த வரும் நயன்தாரா... அந்த வகையில் தற்போது நடித்துள்ள திரைப்படம் 'நெற்றிக்கண்'.
இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் முன்னணி ஹீரோக்களுக்கு சமமாக வசூலில் சாதனை படைத்து வருவதால், இவரை நாயகியாக வைத்து படம் இயக்க பல இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் போட்டி போட்டு வருகிறார்கள்.
ஆனால் தற்போது கொரோனா பிரச்சனை காரணமாக திரையரங்குகள் இன்னும் திறக்கப்டாமல் உள்ளதால், இந்தப்படம் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் நேற்று வெளியானது.
மில்லன் ராவ் இயக்கி உள்ள இந்த படத்தை , நயன்தாராவின் காதலர் விக்னேஷ் சிவன் தன்னுடைய 'ரவுடி பிச்சர்ஸ்' சார்பாக தயாரித்துள்ளார்.
பொதுவாக எந்த ஒரு புரொமோஷன் நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளாத நயன்தாரா, இந்த படம் தங்களுடைய சொந்த தயாரிப்பு நிறுவனத்தில் எடுக்க பட்டதால் கலந்து கொண்டுள்ளார்.
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா கலந்து கொண்டதால், வழக்கத்தை விட இந்த நிகழ்ச்சி படு தூளாக நடத்தியுள்ளனர்.
'நெற்றிக்கண்' திரைப்படம் ஒரு கண் தெரியாத பெண்ணின் கதை என்பதால்... இதில் ஸ்பெஷல் சைல்ட்ஸ், கலந்து கொண்டு நயன்தாராவை உணர்ச்சிவசப்படுத்தினர்.
nayanthara
மேலும் ஆட்டம் பாட்டம் என நிகழ்ச்சி முழுவதும்... கலகலப்பாக சென்றுள்ளதை புகைப்படங்களே தெரிவிக்கிறது.
அதே போல் டிடி எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கும் நயன்தாரா பதிலளித்துள்ளார்.
இப்படி கேட்கப்பட்ட கேள்விகளால் தான், நயன்தாராவிற்கு ஏற்கனவே நிச்சயதார்த்தம் முடிந்து விட்டதும், கடந்த 15 வருடங்களாக தன்னுடைய தந்தை உடல் நலம் இல்லாமல் இருக்கிறார் என்பதையும் கூறி நயன்தாரா தெரிவித்தார். இந்த நிகழ்ச்சி நாளை காலை ஒளிபரப்பாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.