விஜய் டிவி சர்ச்சை பிரபலம் நாஞ்சில் விஜயனுக்கு நிச்சயதார்த்தம் முடிந்தது! வைரலாகும் புகைப்படம்!
விஜய் டிவி பிரபலமான நாஞ்சில் விஜயன் அவ்வப்போது பல சர்ச்சைகளில் சிக்கி வரும் நிலையில், இன்று அவருக்கு திருமண நிச்சயதார்த்தம் முடிந்துள்ளது. இதுகுறித்த புகைப்படங்கள் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.
விஜய் டிவியில் ஒளிபரப்பான 'அது இது எது', 'கலக்கப்போவது யாரு' போன்ற காமெடி நிகழ்ச்சிகளில் பங்கேற்று, தன்னுடைய காமெடியான பேச்சாலும், உடல்மொழியாலும் பல ரசிகர்களை சிரிக்க வைத்தவர் நாஞ்சில் விஜயன்.
இதை தொடர்ந்து சொந்தமாக யூடியூப் சேனல் ஒன்றையும் நடத்தி வருகிறார். கன்டென்ட் கொடுக்க வேண்டும் என்பதற்காக சர்ச்சைக்கு பஞ்சம் இல்லாத விதத்தில் பேசி... பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி பின் மீண்டுள்ளார். குறிப்பாக லாக் டவுன் சமையத்தில், வனிதா விஜயகுமார்... பீட்டர் பால் என்பவரை மூன்றாவதாக திருமணம் செய்து கொண்டபோது, வனிதாவுக்கு எதிராக... சூர்யா தேவி என்பவரை தூண்டி விட்டு வீடியோ வெளியிட்ட சர்ச்சையில் சிக்கி காவல் நிலையம் வரை சென்று வந்தார்.
'மாவீரன்' படத்திற்காக விஜய் சேதுபதி வாங்கிய சம்பளம்? வெளியான ஆச்சர்ய தகவல்..!
சமீபத்தில் கூட, IPL டிக்கெட் விவகாரத்தில் சிக்கினார். பிரபல நடிகை ஒருவருடன் சேர்ந்து 1500 ரூபாய் மதிப்புள்ள உள்ள டிக்கெட்டை, டிக்கெட் கிடைக்காத கிரிக்கெட் ரசிகர்களிடம் 6000, 7000 என பெரிய தொகைக்கு விற்பனை செய்ததாக கூறப்பட்டது.
இப்படி அடிக்கடி ஏதேனும் சர்ச்சையில் சிக்கி வரும் இவருக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளது. குடும்பத்தினர் மத்தியில் மிகவும் எளிமையாக நாஞ்சில் விஜயனுக்கு திருமண நிச்சயதார்த்தம் முடிவடைந்துள்ளது. இதுகுறித்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. மேலும் ரசிகர்கள் பலரும் தங்களின் வாழ்த்துக்களை இவருக்கு தெரிவித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.