'மாவீரன்' படத்திற்காக விஜய் சேதுபதி வாங்கிய சம்பளம்? வெளியான ஆச்சர்ய தகவல்..!
'மாவீரன்' திரைப்படத்தில் அசரீரி குரலில் பேசுவதற்காக, விஜய் சேதுபதி வாங்கிய சம்பளம் குறித்த தகவல் தற்போது வெளியாகி அனைவரையும் ஆச்சர்யப்படுத்தி உள்ளது.
சிவகார்த்திகேயன் நடிப்பில் இன்று வெளியாகியுள்ள 'மாவீரன்' திரைப்படம் தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இன்று காலையிலேயே ரசிகர்களுடன் சேர்ந்து FDFS பார்த்த சிவகார்த்திகேயன், ரசிகர்கள் மத்தியில் இப்படத்திற்கு கிடைத்து வரும் ரெஸ்பான்ஸை கண்டு மிகவும் மகிழ்ச்சியில் உள்ளார். முதல் பகுதி, சிவகார்த்திகேயன் - யோகிபாபு காம்பினேஷனில் மிகவும் காமெடியாக உள்ளதாகவும், இரண்டாம் பாகம் ரோலர் கோஸ்டர் எமோஷனுடன் இருப்பதாகவும் கூறி வருகிறார்கள் ரசிகர்கள்.
அதே போல் அதிதி ஷங்கரும், அடுத்தடுத்து தன்னுடைய படங்கள் ஹிட் அடித்து வருவதால், விரைவில் விஜய், சூர்யா, தனுஷ் போன்ற நடிகர்களுக்கு ஜோடி போடுவார் என எதிர்பார்க்க படுகிறது. மேலும் முதல் படத்துக்கே இரண்டு தேசிய விருதுகளை வாங்கிய இயக்குனர் மடோன் அஸ்வின்... 'மாவீரன்' படத்திற்கு கிடைத்து வரும் பாசிட்டிவ் விமர்சனங்களால் உச்சாகம் அடைந்துள்ளார்.
'லியோ' படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் நிறைவடைந்தது! புகைப்படத்துடன் அறிவித்த லோகேஷ் கனகராஜ்!
இந்த படத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்காவிட்டாலும், அவரின் பங்கு 'மாவீரன்' படத்திற்கு மிகவும் முக்கியமானது. சிவகார்த்திகேயன் டக்கு டக்குனு வானத்தை பார்த்து விட்டு ருத்ர தாண்டவம் ஆடுவார் இல்லையா, அது விஜய் சேதுபதியின் குரலை கேட்ட பிறகு தான். இந்த படத்தில் குரல் கொடுப்பதற்காக விஜய் சேதுபதி பெற்ற சம்பளம் குறித்த தகவலை படக்குழு தற்போது அறிவித்துள்ளது.
அதாவது இந்த குரல் கொடுப்பதற்காக விஜய் சேதுபதி காசு வாங்க மறுத்து விட்டாராம். இயக்குனர் மடோன் அஷ்வினுடன் உள்ள நட்புக்காக இதை செய்வதாக பெருந்தன்மையுடன் கூறியுள்ளார். இதே போல் பல படங்களில் கேமியோ கதாபாத்திரங்களில் நடிக்க கூட விஜய் சேதுபதி சம்பளம் வாங்காமல் நட்புக்காக நடித்து கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த தகவல் தற்போது வெளியாகி அனைவரையும் ஆச்சர்யப்படவைத்துள்ளது.
அச்சச்சோ... மருத்துவமனையில் அனிதா சம்பத்! என்ன ஆச்சு? பதறிய ரசிகர்களுக்கு அவரே கொடுத்த விளக்கம்!