MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • 'லியோ' படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் நிறைவடைந்தது! புகைப்படத்துடன் அறிவித்த லோகேஷ் கனகராஜ்!

'லியோ' படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் நிறைவடைந்தது! புகைப்படத்துடன் அறிவித்த லோகேஷ் கனகராஜ்!

சமீபத்தில் தளபதி விஜய், 'லியோ' படத்தின் படப்பிடிப்பை முடித்த நிலையில், தற்போது ஒட்டு மொத்த படப்பிடிப்பும் முடிவடைந்து விட்டதாக தன்னுடைய குழுவுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு அறிவித்துள்ளார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.

2 Min read
Author : manimegalai a
| Updated : Jul 14 2023, 11:10 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

இயக்குனர் லோகேஷ் கனகராஜ், உலக நாயகன் கமல்ஹாசனை வைத்து இயக்கி இருந்த 'விக்ரம்' திரைப்படம் ரூ.150 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு, சுமார் ரூ.450 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்தது. 100 நாட்களுக்கு மேல், திரையரங்கில் ஓடிய இந்த படத்தைத் தொடர்ந்து, 'மாஸ்டர்' படத்தின் வெற்றிக்கு பின்னர் மீண்டும் தளபதி விஜய்யை வைத்து 'லியோ' படத்தை இயக்க உள்ளதை உறுதி செய்தார் லோகேஷ் கனகராஜ்.
 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25

மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில், கடந்த ஜனவரி மாதம் 'லியோ' படத்தின் படப்பிடிப்பு துவங்கிய நிலையில், முதல் கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் சுமார் 50 நாட்களுக்கு மேல் எடுக்கப்பட்டது. இதில் லியோ படத்தில் விஜய்க்கு கதாநாயகியாக நடித்து வரும் திரிஷா, சஞ்சய் தத், மிஷ்கின், ஆக்சன் கிங் அர்ஜூன், கதிர், ஜனனி, ப்ரியா ஆனந்த் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அச்சச்சோ... மருத்துவமனையில் அனிதா சம்பத்! என்ன ஆச்சு? பதறிய ரசிகர்களுக்கு அவரே கொடுத்த விளக்கம்!
 

35

பல்வேறு இடங்களில் 'லியோ' படத்தின் படப்பிடிப்பு எடுக்கப்பட்ட நிலையில், இறுதி கட்ட படப்பிடிப்பு சென்னையில் உள்ள பிரபல ஸ்டுடியோ ஒன்றில் பிரம்மாண்ட செட் போட்டு எடுக்கப்பட்டு வந்தது. கடந்த வாரம் விஜய் தன்னுடைய படப்பிடிப்பை முடித்து விட்டார் என, விஜய்யுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு அறிவித்தார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். இதைத்தொடர்ந்து, இன்னும் சில தினங்களில் 'லியோ' படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் நிறைவடைய உள்ளதாகவும் தகவல் வெளியானது.
 

45

இந்நிலையில் 'லியோ' படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும், முடிவடைந்து விட்டதாக சற்று முன்னர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தன்னுடைய குழுவினருடன் எடுத்து கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு அறிவித்துள்ளார். 125 நாட்கள், 6 மாதம் என்னுடன் இந்த படத்தில் முழுமனதுடன் பணியாற்றிய தன்னுடைய குழுவினருக்கு நன்றி என உணர்வு பூர்வமாக பதிவிட்டுள்ளார் . இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

பிரபல தயாரிப்பாளர் - நடிகர் தேனப்பன் குடும்பத்தில் ஏற்பட்ட இழப்பு! சோகத்தில் குடும்பத்தினர்!
 

55

மிகப்பெரிய நட்சத்திர பட்டாளங்கள் நடிப்பில் உருவாகி உள்ள 'லியோ' திரைப்படம் அக்டோபர் மாதம் தீபாவளியை முன்னிட்டு வெளியாக உள்ளது. படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டதால் அடுத்ததாக பட குழுவினர் போஸ்ட் புரோடக்ஷம் பணிகளில் முழு கவனம் செலுத்த உள்ளனர். மேலும் படத்தின் படப்பிடிப்பு முடிவடைவதற்கு முன்பாகவே லியோ படத்தின் டிஜிட்டல் உரிமம், சாட்டிலைட் உரிமம், தமிழக ரிலீஸ் உரிமை, ஆகியவை பல கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு அனிருத் இசை அமைக்க மனோஜ் பரமசிம்கா ஒளிப்பதிவு செய்துள்ளார். பிலோமின் ராஜ் படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
லோகேஷ் கனகராஜ்
தளபதி விஜய்
திரிஷா
விஜய் (நடிகர்)
 
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
1st ODI • NZ vs IND 2026
NZNZ
Wed, 4 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
2nd ODI • NZ vs IND 2026
NZNZ
Sat, 7 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
1st TEST • SL vs PAK 2026
PAKPAK
Mon, 9 Nov, 2026
SLSL
10:30 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Pongal Releases : தீபாவளிக்கு முன் ஹவுஸ்ஃபுல் ஆன பொங்கல் ரேஸ்... கிளாடியேட்டர்ஸ் முதல் புருஷன் வரை இத்தனை படங்கள் ரிலீஸ் ஆகுதா?
Recommended image2
Ilaiyaraaja : இசைஞானி இளையராஜா தெரியும்... போட்டோகிராஃபர் இளையராஜா தெரியுமா? யாரும் அறிந்திடாத ராஜாவின் மறுபக்கம்
Recommended image3
Samantha : 8 மாசத்துல 120 கோடி வருமானம்... சினிமாவை விட பிசினஸில் கொடிகட்டிப்பறக்கும் சமந்தா
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved