bigg boss tamil : பிக் பாஸ் 6 இருக்கட்டும்..முந்தைய வின்னர்ஸ் இப்ப என்ன பன்றாங்க தெரியுமா?
முந்தைய சீசன்களில் பங்கேற்று வெற்றி பெற்ற வெற்றியாளர்கள் தற்போது என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்பது குறித்த இங்கு பார்க்கலாம்...
Kamal
தென்னிந்திய மொழிகளில் மிகப் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி தற்போது தமிழில் ஆறாவது சீசனை தொட்டுள்ளது. எல்லா சீசன்களையும் கமலஹாசன் தான் தொகுத்து வழங்கி வருகிறார். அதேபோல மற்ற மொழிகளிலும் முன்னணி ஸ்டார்கள் தான் தொகுப்பாளர்களாக பணியாற்றி வருகின்றனர். தற்போது 20 போட்டியாளர்களுடன் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது பிக் பாஸ் சீசன் 6. இந்த நிலையில் முந்தைய சீசன்களில் பங்கேற்று வெற்றி பெற்ற வெற்றியாளர்கள் தற்போது என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்பது குறித்த இங்கு பார்க்கலாம்...
aarav
முதல் சீசனில் வெற்றி பெற்ற ஆரவ் மார்க்கெட் ராஜா எம்பிபிஎஸ் என்னும் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அத பிறகு இவருக்கு வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை. சமீபத்தில் ராஜ பிமா, மீண்டும் வா அருகில் வா ஆகிய இரண்டு படங்களில் நடித்து முடித்துள்ளார். இவருக்கு கடந்த 2020 ஆம் ஆண்டு திருமணம்நடைபெற்றது. சமீபத்தில் தான் இந்த தம்பதி பெற்றோர்களாகினர்.
மேலும் செய்திகளுக்கு...vijay : அரசியலுக்கு வரும் விஜய்?..துணை முதல்வரை கன்பார்ம் செய்த ரசிகர்கள் ...
Riythvika
இரண்டாவது சீசனில் வின்னரான தேர்ந்தெடுக்கப்பட்டவர் ரித்விகா. சின்னத்திரையிலிருந்து வெள்ளி திரைக்கு சென்ற இவர் பிக்பாஸ் தமிழ் சீசன் இரண்டிற்கு பிறகு பொருள் இரண்டாம் உலகப்போரில் கடைசி குண்டு, வால்டர், சில நேரங்களில் சில மனிதர்கள், சடலம், ஆதார் உள்ளிட்ட படங்களில் தோன்றியிருந்தார். தற்போது எம்ஜிஆர்,, மாது ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது, யாதும் ஊரே யாவரும் கேளிர், தீபாவளி போனஸ் உள்ளிட்ட படங்களில் கமிட் ஆகியுள்ளார். சமீபத்தில் கனிமொழியுடன் இவர் இருந்த புகைப்படங்களில் சமூக வலைதளத்தில் ட்ரெண்டாகி இருந்தது.
2019 ஆம் ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் 3 மூலம் பிரபலமானவர் முகின் ராவ். மலேசியாவை சேர்ந்த இவர் மியூசிக் ஆல்பங்கள் மூலம் ரசிகர்களை பெற்றிருந்தார். பிக் பாஸ்க்கு பிறகு வேலன் என்ற படத்தில் நடித்திருந்தார். இதை அடுத்து இவர் கைவசம் மதில் மேல் காதல், வெற்றி என இரு படங்கள் உள்ளன.
மேலும் செய்திகளுக்கு...Prithviraj Sukumaran birthday special : பிருத்விராஜ் பிறந்தநாளில் வெளியான மாஸ் போஸ்டர்..சலார் போஸ்டர் இதோ
Aari
2020 ஆம் ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 4 வெற்றியாளரானவர் நடிகர் ஆரி. நெடுஞ்சாலை படத்தின் மூலமா அறிமுகமான இவர் பிக் பாஸ்க்கு பிறகு நெஞ்சுக்கு நீதி படத்தில் முக்கி வேடத்தில் நடித்திருந்தார் இதையடுத்து பகவான், அலேக்கா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
raju jayamohan
இந்த ஆண்டு துவக்கத்தில் கொரோனா காலகட்டத்தில் ஒளிபரப்பாகி இருந்த சீசன் 5 தொகுப்பாளர் ராஜூ ஜெயமோகன் வெற்றியாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். விஜய் டிவியில் சீரியல்கள் மூலம் பிரபலமான இவர் தற்போது ஸ்டார் விஜய் தனது பெயரில் ஒரு ஷோவை நடத்தி வருகிறார். சமீபத்தில் தனது மனைவியுடன் வெளிநாடு சென்ற புகைப்படங்களையும் சமூக வலைதளத்தில் வெளியிட்டு இருந்தார்.