Prithviraj Sukumaran birthday special : பிருத்விராஜ் பிறந்தநாளில் வெளியான மாஸ் போஸ்டர்..சலார் போஸ்டர் இதோ
பிறந்த நாளை முன்னிட்டு இவரது போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. இதில் மாஸ் லுக் கொடுக்கிறார் பிருத்விராஜ்.
Image: Prithviraj Sukumaran/Instagram
தென்னிந்திய மொழிகளில் நடிகர் பிரித்திவிராஜ் மிகப் பிரபலம். இயக்குனர், தயாரிப்பாளர், பின்னணி பாடகர் என தனது பன்முகங்களையும் காட்டி வருகிறார். இவர் முக்கியமாக மலையாள திரை உலகில் தான் அதிகம் பணியாற்றியுள்ளார்.
இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மற்ற மொழிகளிலும் ரசிகர்களை பெற்றுள்ளார். நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள இவர் தேசிய திரைப்பட விருதுகளையும் வென்றுள்ளார். அதோடு கேரள மாநில திரைப்பட விருதுகள், தமிழ்நாடு மாநில திரைப்பட விருதுகள் உள்ளிட்ட பல பாராட்டுகளை தன் வசம் வைத்துள்ளார் பிருத்விராஜ் சுகுமார்.
prithviraj sukumaran birthday
நந்தனம் என்னும் படத்தின் மூலம் திரையுலகுக்கு அறிமுகமான இவர், கனா கண்டேன் படம் மூலம் தமிழுக்கு அறிமுகமானார். பின்னர் 2006 ஆம் ஆண்டு பாக்யராஜின் மகள் சரண்யா பாக்கியராஜ் உடன் பாரிஜாதம் படத்தில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். தொடர்ந்து சத்தம் போடாதே, கண்ணாமூச்சி ஏனடா, ராவணன், காவியத்தலைவன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
மேலும் செய்திகளுக்கு...Vaishali Takkar : தற்கொலை செய்து கொண்ட பிரபல நடிகை வசமாக சிக்கிய முன்னாள் காதலன்
Prithviraj
இவருக்கு சுப்ரியா மேனன் என்ற மனைவியும் ஒரு மகளும் உள்ளனர். இன்று பிருத்விராஜ் 39 ஆவது பிறந்தநாள் ஆகும். பிறந்தநாள் பரிசாக தற்போது பிருத்விராஜ் நடித்து வரும் சலார் படத்தின் போஸ்டர் வெளியாகியுள்ளது. போஸ்டரை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். கேஜிஎப் இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் பாகுபலி நாயகன் பிரபாஸ் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். நாயகியாக ஸ்ருதிஹாசன் நடித்திருக்கிறார்.
இந்த படத்தில் வரதராஜ மன்னர் வேடத்தில் பிரிதிவிராஜ் தோன்றியுள்ளார். இவர் பிறந்த நாளை முன்னிட்டு இவரது போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. இதில் மாஸ் லுக் கொடுக்கிறார் பிருத்விராஜ். விஜய் கிராண்டு தயாரிக்க பான் இந்தியா மூவியாக இது தயாராகியுள்ளது. முன்னதாக படம் குறித்து பேசி இருந்த இயக்குனர், பிருத்விராஜ் போன்ற ஒரு சூப்பர் ஸ்டார் படத்தில் இருப்பது முழு மகிழ்ச்சி அளிக்கிறது. இதைவிட சிறந்த வரதராஜ மன்னரை நாங்கள் பெற்றிருக்க முடியாது. அவர் படத்தில் இவ்வளவு அற்புதமான நடிப்பால் ஈர்ப்பை ஏற்படுத்தி உள்ளார் என குறிப்பிட்டு இருந்தார்.
மேலும் செய்திகளுக்கு...அன்பைப் பொழிந்த மகன்... ‘ஆனந்த யாழை’ பாட்டை போட்டு ஃபீல் பண்ணிய விக்கி