பிக்பாஸ் வீட்டுக்கு சென்ற விஜய் டிவி பிரபலம்; அதிரடி டாஸ்க் - சரவெடியாய் வெடித்த பிரபலங்கள்!
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும், பிக்பாஸ் நிகழ்ச்சி கிட்டத்தட்ட தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், புதிய டாஸ்குக்காக பிரபல தொகுப்பாளர் மாகாபா உள்ளே வந்துள்ளார். இதுகுறித்த போட்டோஸ் தற்போது வைரலாகி வருகிறது.
Bigg Boss Tamil 8
பிக்பாஸ் நிகழ்ச்சி எலிமினேஷனை நெருங்க நெருங்க... பிக்பாஸ் பல எதிர்பாராத டாஸ்குகளை அடுத்தடுத்து அறிவித்து கொண்டிருக்கிறார். அந்த வகையில், இந்த முறை பண பெட்டியை எடுக்கும் போட்டியாளர்கள் கூட பிக்பாஸ் நிகழ்ச்சியில் தொடர வாய்ப்புள்ளது என கூறியதால், போட்டியாளர்களும் தில்லாக போட்டியில் இறுக்கி ஒரு கை பார்த்து வருகிறார்கள். நேற்றைய தினம் முத்துக்குமரன் 30 வினாடிக்குள் 50,000 ரூபாயை எடுத்து கொண்டு வீட்டுக்குள் வந்தார்.
Bigg Boss Tamil 8 New Entry
இவரை தொடர்ந்து இன்று 2 லட்சம் அறிவிக்கப்பட்ட நிலையில், ரயான் தில்லாக களமிறங்கினார். நேரம் முடிவதற்கு முன்பாக அவர் வீட்டுக்குள் வந்தாரா? இல்லையா? என்கிற ட்விஸ்டுடன் ப்ரோமோ முடிவடைந்த நிலையில், இன்று இரவே இதுகுறித்து தெரியவரும். இதை தொடர்ந்து இன்று வெளியான மூன்றாவது புரோமோவில், பிக்பாஸ் வீட்டுக்குள் அதிரடியாக விஜய் டிவி பிரபலம் வந்துள்ளது காட்டப்படுகிறது.
இது என்ன நயன்தாராவுக்கு வந்த சோதனை? OTT-யில் நேரடியாக ரிலீஸ் ஆகும் முக்கிய படம்!
Makapa enter in bigg boss house
அவர் வேறு யாரும் அல்ல விஜய் டிவியில் ஏராளமான நிகழ்ச்சிகளை கலகலப்பாக தொகுத்து வழங்கி வரும், விஜய் டிவி மெட்டீரியலான மாகாபா தான். அதாவது பிக்பாஸ் இவரை உள்ளே அனுப்பி புதிய டாஸ்க் ஒன்றை நடத்தியுள்ளார். அதாவது மாகாபா அவருடைய பாணியில் போட்டியாளர்களிடம் சில கேள்வியை எழுப்பியுள்ளார். இது தற்போது வெளியாகியுள்ள புரோமோ மூலம் தெரிகிறது.
tamil cinema latest news
பவித்ரா முத்துக்குமரன் விட்டு கொடுத்ததால் கேப்டன்சி பறிபோது பற்றி கூறியுள்ளார். அதே போல் அவர் விட்டு கொடுத்தேன் என சொல்லாமல் இருக்கலாம், அப்படி சொந்தது கஷ்டமாக இருந்ததாக தெரிவித்தார். சௌந்தர்யாவும் முத்து குமாரை டார்கெட் பண்ணி தான் பேசியுள்ளார். அதாவது, முத்து குமரன் தான் மிகவும் சேஃப் கேம் விளையாடுவதாக பேசியுள்ளார். மேலும் மாகாபா இந்த டாஸ்கில் அணைத்து போட்டியாளர்களிடமும் கேள்வி எழுப்பி உள்ள நிலையில் அவர்கள் சும்மா பட்டாசாக பொரிந்து தள்ளியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மீசை வளரவில்லை; தேவர் மகன் படத்தை மிஸ் பண்ணியதன் சீக்ரெட்டை உடைத்த மீனா!
kollywood
பிக்பாஸ் வீட்டுக்குள் அடுத்தடுத்து வெளியே சென்ற போட்டியாளர்கள் ஒருவர் பின் ஒருவராக உள்ளே வந்து கொண்டிருக்கின்றனர். எப்படியும் இந்த சீசனை கொஞ்சம் வித்தியாசமாக வெளியே அனுப்பிய அத்தனை போட்டியாளர்களையும் மீண்டும் உள்ளே வர வைத்து தான், பிக்பாஸ் வெற்றியாளரை அறிவிப்பாரா? இன்னும் சில நாட்கள் தானே உள்ளது பொறுத்திருந்து பார்ப்போம்.