‘போஸ்டர் அடி.. அண்ணன் ரெடி’ பனையூரில் மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் மீட்டிங் - மாஸ் எண்ட்ரி கொடுத்த விஜய்
சென்னை பனையூரில் உள்ள இல்லத்தில் நடைபெறும் மாவட்ட பொறுப்பாளர்களுடனான மீட்டிங்கில் கலந்துகொள்ள நடிகர் விஜய் வருகை தந்துள்ளார்.
vijay
நடிகர் விஜய் நடித்து வந்த லியோ படத்தின் படப்பிடிப்பு நேற்றுடன் முடிவடைந்தது. விஜய் சம்பந்தப்பட்ட காட்சிகள் முடிவடைந்ததை அடுத்து அவருடன் கடைசி நாள் ஷூட்டிங்கின் போது எடுத்த புகைப்படத்தை பதிவிட்டு இருந்தார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். லியோ பட பணிகள் முடிந்ததும், உடனடியாக தனது மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் மீட்டிங்கிற்கு ஏற்பாடு செய்தார் விஜய்.
vijay
இதையடுத்து இன்று பனையூரில் உள்ள இல்லத்தில் மாவட்ட வாரியாக உள்ள மக்கள் இயக்க நிர்வாகிகளை சந்தித்து அவர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளதாக கூறப்பட்டது. இதற்காக மாவட்ட பொறுப்பாளர்கள் பனையூர் இல்லம் முன்பு குவிந்த நிலையில், அவர்களை சந்திக்க கருப்பு பேண்ட் மற்றும் ஊதா நிற ஷர்ட் அணிந்தபடி யங் லுக்கில் மாஸ் எண்ட்ரி கொடுத்தார் நடிகர் விஜய்.
இதையும் படியுங்கள்... அஜித் ஒரு ஃபிராடு... காசு வாங்கிட்டு ஏமாத்திட்டான் - கமல் பட தயாரிப்பாளர் ஆவேசம்
vijay
நடிகர் விஜய் காரில் இருந்து இறங்கியதும் அங்கு தன்னை காண குவிந்திருந்த ரசிகர்களை பார்த்து கையசைத்து அவர்களுக்கு நன்றி தெரிவித்தார் விஜய். பின்னர் விஜய்யின் அருகே சென்று அவருடன் புகைப்படம் எடுக்க சில ரசிகர்கள் ஓடிவந்ததால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. இதையடுத்து பவுன்சர்கள் பத்திரமாக விஜய்யை உள்ளே அழைத்து சென்றனர்.
vijay
இந்த ஆலோசனை கூட்டத்தில் கல்வி உதவித் தொகை வழங்கும் விழாவை சிறப்பாக நடத்தியதற்காக மாவட்ட பொறுப்பாளர்களுக்கு நன்றி தெரிவிக்க உள்ள விஜய, அவர்களுடன் தனித்தனியே புகைப்படமும் எடுத்துக்கொள்ள உள்ளாராம். இதில் அரசியல் குறித்து ஆலோசிக்கவும் வாய்ப்புள்ளதாக தெரிகிறது. இந்த கூட்டத்தின் முடிவில் தான் என்ன நடந்தது என்பது தெரியவரும்.
இதையும் படியுங்கள்... டாம் குரூஸ் உடன் மோதும் சிவகார்த்திகேயன்... ஆக்ஷன் விருந்துக்கு ரெடியா! இந்த வாரம் திரைக்கு வரும் படங்கள் இதோ