விஜய் ராஷ்மிகாவின் வாரிசு...வெளியானது புதிய அப்டேட்
அக்டோபர் இறுதிக்குள் படபிடிப்பு முடிந்து விட்டால் 2023 பொங்கலுக்கு படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
varisu
பீஸ்ட் படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் தற்போது வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தில் ராஜு தயாரிக்கும் இந்த படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகி வருகிறது. சென்னை, ஹைதராபாத், விசாகப்பட்டினம் என இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. படப்பிடிப்புத்தள புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியதோடு படம் குறித்து மூன்று லுக்குகளும் வெளியாகி இருந்தது.
varisu
தற்போது விஜய் , ரஷ்மிகா இடம்பெறும் பாடல் படமாக்கப்பட்டு வருகிறது. மேலும் முழு படப்பிடிப்பையும் அக்டோபர் இறுதியில் முடிக்க பட குழு திட்டமிட்டுள்ளதாம். இப்படத்தின் பாடலுக்கு பிரபல நடன இயக்குனர் ஜான் மாஸ்டர் நடன ம் செய்துள்ளார் ஜானி மாஸ்டர் கம்பீரமான நடன மெட்டுகளை வழங்குவதில் பிரபலமானவர். இவர் தான் தளபதி விஜயின் மாஸ்டர் மற்றும் பீஸ்ட் ஆகிய படங்களில் நடன இணயக்குநராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளுக்கு...படகில் பிகினியுடன் தண்ணீரில் அனல் பறக்கவிட்ட லைகர் பட நாயகி அனன்யா பாண்டே
varisu
இப்படம் குடும்ப செண்டிமன்டை மையமாகக் கொண்டு உருவாவதால் நல்ல பாடல்கள் அடங்கிய குடும்ப பொழுதுபோக்கு படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரகாஷ்ராஜ் மற்றும் சரத்குமார் குஷ்பூ பிரபு ஜெயசுதா ஷியாம் தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்த் மற்றும் யோகி பாபு உள்ளிட்ட துணை வேடங்களில் நடிக்கின்றனர். அக்டோபர் இறுதிக்குள் படபிடிப்பு முடிந்து விட்டால் 2023 பொங்கலுக்கு படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஓணம் ஸ்பெஷலாக உடை மாற்றும் வீடியோவை வெளியிட்டு அதிர்ச்சி கொடுத்த பிக்பாஸ் ஷெரின்