ஓணம் பண்டிகையின் ஸ்பெஷலாக கேரளத்து சேலை அணியும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.

தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு என பல மொழிகளிலும் அறியப்பட்ட நாயகியாக இருப்பவர் ஷெரின் இவர் தனுஷ் நடிப்பில் வெளியான துள்ளுவதோ இளமை படம் மூலம் சினிமாத்துறைக்கு என்ட்ரி கொடுத்தார். ஜெயா, ஸ்டூடண்ட் நம்பர் ஒன், கோவில்பட்டி வீரலட்சுமி, உற்சாகம், பீமா, விசில் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்த ஷெரினுக்கு பின்னர் பட வாய்ப்புகள் எதும் பெரிதாக அமையவில்லை. மீண்டும் ரசிகர்கள் முன்னிலையில் தோன்றியிருந்தார். ஆனால் அன்று பார்த்த நாயகியாக இல்லாமல்உடல் எடை கூடி பார்ப்பதற்கே கன்ட்றாவியாக இருந்த இவரை பார்த்த ரசிகர்கள் மிகுந்த சோகத்தில் ஆழ்ந்திருந்தனர்.

View post on Instagram

மேலும் செய்திகளுக்கு...டாப் 6 இடங்களை ஆக்கிரமித்த சன் டிவி...சீரியல்களை காப்பாற்றுமா விஜய் டிவி ?

கடந்த 2019 ஆம் ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் மூன்றில் தான் இவர் பங்கேற்று இருந்தார். 100 நாட்கள் தொடர்ச்சியாக இந்த வீட்டில் பங்கேற்றதன் மூலம் மூன்றாவது ரன்னர் அப்பாக வந்திருந்தார். இதன் பின்னர் முன்பை விட பிரபலமாகிவிட்ட ஷெரின் பிக்பாஸ் நிகழ்ச்சியிலேயே வெகுவாக உடல் எடையை குறைத்து விட்டார். வெளியில் வந்த பிறகு அடுக்கடுக்கான கிளாமர் புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டு வந்தார். தற்போது இவர் ரஜினி என்னும் படத்தில் நடித்து வருகிறார். 

View post on Instagram

மேலும் செய்திகளுக்கு...இதற்காக தான் பாரதிகண்ணம்மாவில் இருந்து விலகினேன்... பல நாள்கழித்து உண்மையை உடைத்த அஞ்சலி

பிக் பாஸ் தொடர்ந்து ரியாலிட்டி ஷோகளை பங்கேற்று வந்த இவர் பிக் பாஸ் தமிழ் சீசன் 4-ல் விருந்தாளியாகவும் பங்கேற்று இருந்தார். தற்போது சமூக வலைத்தளத்தில் பிசியாக இருக்கும் ஷெரின் நேற்று கொண்டாடப்பட்ட ஓணம் பண்டிகையின் ஸ்பெஷலாக கேரளத்து சேலை அணியும் வீடியோவை வெளியிட்டுள்ளார். மற்ற நடிகைகள் கேரளத்து சேலையுடன் போட்டோ சூட் நடத்த இவர் மட்டும் சற்று வித்தியாசமாக உடை அணியும் வீடியோவை வெளியிட்டு அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளார். 

View post on Instagram