விஜய்யின் பிறந்தநாளன்று ஜனநாயகன் படக்குழு கொடுக்க உள்ள செம ட்ரீட்
விஜய்யின் ஜனநாயகன் படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டி உள்ள நிலையில், அப்படத்தின் டீசர் ரிலீஸ் குறித்த முக்கிய அப்டேட் வெளியாகி உள்ளது.

Vijay's 'Jana nayagan': Shooting wraps up! Teaser release date!
நடிகர் விஜய்யின் 69-வது திரைப்படம் ஜனநாயகன். இப்படத்தை எச்.வினோத் இயக்குகிறார். இதில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். மேலும் பாபி தியோல், பிரகாஷ் ராஜ், பிரியாமணி, மமிதா பைஜு என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வரும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தை கேவிஎன் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்து உள்ளது. இப்படத்திற்காக நடிகர் விஜய் ரூ.275 கோடி சம்பளமாக வாங்கி உள்ளார். விஜய்யின் கடைசி படம் இதுவாகும்.
விஜய்யின் கடைசி படம் ஜனநாயகன்
ஜனநாயகன் திரைப்படத்தில் நடித்து முடித்த கையோடு நடிகர் விஜய் அரசியலில் நுழைய உள்ளார். ஜனநாயகன் படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. அண்மையில் கொடைக்கானலில் ஜனநாயகன் ஷூட்டிங் நடைபெற்றது. இதில் நடிகர் விஜய் கலந்துகொண்டார். இதையடுத்து சென்னை சென்ற படக்குழு, இந்த வார இறுதிக்குள் ஜனநாயகன் படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பையும் நிறைவு செய்ய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜனநாயகன் டீசர் எப்போ ரிலீஸ்?
ஜனநாயகன் ஷூட்டிங் முடிந்ததும் அதன் இறுதிக்கட்ட பணிகளை படக்குழு மேற்கொள்ள உள்ளது. இதுவரை ஜனநாயகன் படத்தில் இருந்து போஸ்டர்கள் மட்டுமே வெளியாகி உள்ள நிலையில், விரைவில் அப்படத்தின் டீசரை படக்குழு ரிலீஸ் செய்ய உள்ளதாம். அநேகமாக விஜய்யின் பிறந்தநாளான ஜூன் 22ந் தேதி ஜனநாயகன் படத்தின் டீசர் வெளியிடப்பட அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. ரசிகர்களுக்கு விஜய்யின் பிறந்தநாள் ட்ரீட் ஆக இந்த டீசர் ரிலீஸ் அமையும்.
ஜனநாயகன் பொங்கல் ரிலீஸ்
ஜனநாயகன் திரைப்படத்தை அடுத்த ஆண்டு பொங்கல் விடுமுறையை ஒட்டி ஜனவரி 9-ந் தேதி ரிலீஸ் செய்ய உள்ளதாக படக்குழு ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது. இப்படத்தில் விஜய்யின் TVK கட்சி ரெபரன்ஸ் இடம்பெறும் என்றும் கூறப்படுகிறது. இதில் நடிகர் விஜய் தமிழ் வெற்றி கொண்டான் என்கிற பெயரில் தான் நடிப்பதாக கூறப்படுகிறது. விஜய்யின் அரசியல் எண்ட்ரிக்கு முன் அவர் நடிக்கும் கடைசி படம் இது என்பதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.