- Home
- Cinema
- தனி விமானம் மூலம் மும்பை பறந்த விஜய்.. பின்னணி என்ன? அரசியல் வியூகமா? ஜன நாயகன் அப்டேட்டா?
தனி விமானம் மூலம் மும்பை பறந்த விஜய்.. பின்னணி என்ன? அரசியல் வியூகமா? ஜன நாயகன் அப்டேட்டா?
Vijay Flies to Mumbai in Private Jet: நடிகர் விஜய் தனி விமானம் மூலம் மும்பை சென்றுள்ள செய்தி வைரலாகி வருகிறது. அவரது அரசியல் கட்சியின் தேர்தல் வியூகம் அல்லது கடைசிப் படமான ஜன நாயகன் படத்தின் பின்னணி வேலைகளுக்காக இந்தப் பயணம் அமைந்துள்ளதா? முழு விவரம்

TVK Vijay Mumbai Visit
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய், மும்பைக்கு செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தனது நெருங்கிய நண்பரின் குடும்ப நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக அவர் தனி விமானம் மூலம் மும்பை பயணம் மேற்கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. இந்த பயணம் அரசியல் மற்றும் சினிமா வட்டாரங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது. இதே பயணத்தின் போது, விஜய் நடித்துவரும், ஜனநாயகன் திரைப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளையும் மும்பையில் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அண்ணா நகர் சொத்தை ரூ. 35 கோடிக்கு விற்றார் விஜய்? அரசியலுக்காகத் திரட்டப்படும் பிரம்மாண்ட நிதி?
Vijay Mumbai visit 2026
படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வரும் நிலையில், சில தொழில்நுட்ப அம்சங்களை மேம்படுத்தும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும், இந்த படத்திற்கான சென்சார் சான்றிதழ் பெறுவதில் சில சிக்கல்கள் நீடித்து வருகிறது. இதனால், படத்தில் தேவையான மாற்றங்களைச் செய்ய படக்குழு ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. குறிப்பாக, சில காட்சிகளை மாற்றுவது அல்லது புதிதாக சேர்ப்பது போன்ற முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
TVK Vijay political tour
இதன் காரணமாக, புதிய காட்சிகளை படமாக்க மும்பையில் ஷூட்டிங் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காகவே விஜய் மும்பைக்கு பயணம் மேற்கொள்வதாகவும் கூறப்படுகிறது. இந்த மாற்றங்கள் படத்தின் வெளியீட்டை தாமதப்படுத்துமா என்ற கேள்வியும் ரசிகர்களிடையே எழுந்துள்ளது. விஜய் தரப்பில் இருந்து இதுகுறித்து எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. எனவே, தற்போது வெளியாவது அனைத்துமே தகவல்களாகவே பார்க்கப்படுகின்றன. எதுவாக இருந்தாலும், விஜய்யின் மும்பை பயணம் மற்றும் ஜனநாயகன் பட அப்டேட்கள் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
விஜய் மும்பை பயணம்
இந்த படத்தில் விஜய் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்று கூறப்படுகிறது. மாஸ் அம்சங்களுடன் கூடிய வலுவான மெசேஜ் கொண்ட கதையால் இது ஒரு முக்கியமான படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில், படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், சில காட்சிகளில் மாற்றம் செய்யப்படலாம் என்றும், புதிய காட்சிகளை படமாக்கும் திட்டமும் இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
An all important election for Mr. Vijay is happening and time is very less.
Since the time is very less and last date for nomination will arrive in a jiffy. All experienced political parties are conducting hectic negotiations and finalising candidates. Political parties are… https://t.co/3iHDLW33Xd— Savukku Shankar (@SavukkuOfficial) March 20, 2026
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.