போஸ் கொடுத்து வாரிசுக்கு ப்ரோமோஷன் தேடும் தளபதி! அந்த சம்பவத்தை கூறி... விஜய்யின் வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்
தளபதி விஜய் இன்று பனையூரில் ரசிகர்களை சந்தித்தபோது எடுத்து கொண்ட புகைப்படம் வைரலானதை தொடர்ந்து, நெட்டிசன்கள் சிலர் விஜய் வாரிசு படத்திற்கு புரோமோஷன் தேடுவதாக கூறி வறுத்தெடுத்து வருகிறார்கள்.
கொரோனா அச்சம் ஓய்ந்த நிலையில், இரண்டு வருடங்களுக்கு பின், மக்கள் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளனர். தளபதி விஜய்யும் இரண்டு வருடங்களுக்கு பின்னர், மீண்டும் தன்னுடைய ரசிகர்களை மாவட்ட ரீதியாக, அவ்வப்போது சந்தித்து ரசிகர் மன்ற செயல்பாடுகள் குறித்து விவாதித்து வருகிறார்.
அந்த வகையில் சமீபத்தில் சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த ரசிகர்களை சந்தித்த விஜய், இரண்டாம் கட்டமாக இன்று செங்கல்பட்டு, அரியலூர், திண்டுக்கல், கடலூர், ஆகிய நான்கு மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் ரசிகர்களை சந்தித்தார். இந்த சந்திப்புக்கு முன்னதாக, விஜய் தன்னுடைய ரசிகர்களுக்கு தடபுடலாக பிரியாணி விருந்து வைத்து அசத்தினார்.
ரெஜினா கசாண்ட்ரா இந்த ஹீரோவை காதலிக்கிறாரா.? பிறந்தநாள் வாழ்ந்தால் வெடித்த புது சர்ச்சை..!
மிகவும் ஸ்டைலிஷான 'வாரிசு' பட லுக்கில் வந்திறங்கிய விஜய்... சுமார் மூன்று மணிநேரம் ரசிகர்களுடன் கலந்துரையாடினார். இந்த சந்திப்பிற்கு விஜய் வந்த போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் விஜய் ஒரு ரசிகரை கையில் ஏந்தியபடி எடுத்து கொண்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலானது.
இந்த புகைப்படத்தை விஜய் ரசிகர்கள் ஒரு பக்கம் அதிகம் ஷேர் செய்து ட்ரெண்ட் செய்து வந்த நிலையில்... மற்றொரு தரப்பில் கடும் விமர்சனங்களுக்கு ஆளாகி உள்ளது.
விஜய் படத்தின் ஷூட்டிங் சென்னை போன்ற இடங்களில் எடுக்கப்பட்டால், விஜயை சந்திக்க மாற்று திறனாளி ரசிகர்கள் முதல் குழந்தை ரசிகர்கள் வரை ஷூட்டிங் ஸ்பாட் கேட்டில் கூடி விடுவது உண்டு. அப்படி பட்ட நேரத்தில் கூட, ரசிகர்களுக்காக காரை விட்டு கீழே இறங்காமல், ரசிகர்களை பார்த்து கை அசைக்காமல் செல்லும் விஜய், தற்போது புரோமோஷனுக்காக இப்படி போஸ் கொடுத்து புகைப்படம் வெளியிடுவதாக கூறி விளாசி வருகிறார்கள்.
சமீபத்தில் 'வாரிசு' படத்தின் ஷூட்டிங் சென்னையில் எடுக்கப்பட்ட போது, இப்படி ஒரு பிரச்சனை எழுந்த பின்னர்... விஜய் ரசிகர்களை வந்து சந்தித்தது குறிப்பிடத்தக்கது.