- Home
- Cinema
- ரெஜினா கசாண்ட்ரா இந்த ஹீரோவை காதலிக்கிறாரா.? பிறந்தநாள் வாழ்ந்தால் வெடித்த புது சர்ச்சை..!
ரெஜினா கசாண்ட்ரா இந்த ஹீரோவை காதலிக்கிறாரா.? பிறந்தநாள் வாழ்ந்தால் வெடித்த புது சர்ச்சை..!
பிரபல நடிகை ரெஜினா கசாண்ட்ரா பிரபல ஹீரோ ஒருவரை காதலித்து வருவதாக வெளியாகியுள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

2005 ஆம் ஆண்டு தமிழில் வெளியான 'கண்ட நாள் முதல்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ரெஜினா. இந்த படத்தை தொடர்ந்து, தெலுங்கு மற்றும் கன்னட மொழி படங்களிலும் கவனம் செலுத்த துவங்கினார். தமிழில் இவர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்த, 'கேடி பில்லா கில்லாடி ரங்கா' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றாலும், இவருக்கு எதிர்பார்த்த அளவுக்கு தமிழ் பட வாய்ப்புகள் கிடைக்காமல் போனது.
எனவே முழு நேர தெலுங்கு நடிகையாக மாறிய இவர், தொடர்ந்து வளர்ந்து வரும் இளம் ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்தார். இவர் நடித்த படங்களும் நல்ல வரவேற்பை பெற்றது. பின்னர் தமிழில் தரமான கதையை தேர்வு செய்து இவர் கம் பேக் கொடுத்த 'மாநகரம்' திரைப்படம் வெற்றிப்படமாக அமைந்தது. தொடர்ந்து சிறந்த கதைகளை மட்டுமே தேர்வு செய்து நடித்து வரும் ரெஜினா தற்போது 'மாநகரம்' பட நடிகரின் காதல் வலையில் வீழ்ந்து விட்டதாக சில கிசுகிசு எழ துவங்கியுள்ளது.
Sundeep Kishan
இதற்க்கு காரணம், நடிகர் சந்தீப் கிஷன் இவரை வாழ்த்தி போட்டிருந்த பிறந்தநாள் வாழ்த்து தான். இது தான் இவர்கள் டேட்டிங் செய்து கொண்டிருக்கிறார்களா? என்கிற சந்தேகத்தை எழ வைத்துள்ளது. சந்தீப் கிஷன் தன்னுடைய வாழ்த்தில் "ஹாப்பி பர்த்டே பாப்பா... லவ் யூ நீ எப்போதும் எல்லாவற்றிலும் சிறந்ததாக இருக்க விரும்புகிறேன். மகிழ்ச்சியாக இரு கடவுள் உன்னை ஆசீர்வதிப்பார் என கூறி இருந்தார்.
மேலும் இருவரும் சந்தோஷமாக இருக்கும் தருணத்தில் எடுத்து கொண்ட புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டிருந்தார். இருவருக்குமே தெலுங்கு மற்றும் தமிழ் மொழி படங்களில் இணைந்து நடித்துள்ள நிலையில், தற்போது வரை காதல் குறித்து வாய் திறந்தது இல்லை என்றாலும், இந்த தகவல் வைரலாகி வருகிறது.
தெலுங்கு திரைப்பட நடிகரான சந்தீப், தமிழில் சில படங்களில் நடித்துள்ளதால்... தமிழ் திரையுலகிலும் வளர்ந்து வரும் நடிகர்கள் பட்டியலில் உள்ளார். அந்த வகையில் தற்போது தனுஷ் நடிக்கும் 'மைக்கேல்' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.