- Home
- Cinema
- படம் சுமாரு... ஆனால் வசூல் படு ஜோரு! முதல் நாளில் அமீர்கான் படத்தைவிட அதிக கலெக்ஷனை அள்ளிய லைகர்
படம் சுமாரு... ஆனால் வசூல் படு ஜோரு! முதல் நாளில் அமீர்கான் படத்தைவிட அதிக கலெக்ஷனை அள்ளிய லைகர்
Liger : விஜய் தேவரகொண்டா நடித்த லைகர் திரைப்படம் மோசமான விமர்சனங்களை பெற்றாலும் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷனில் மாஸ் காட்டி உள்ளது.

நடிகர் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான திரைப்படம் லைகர். தெலுங்கில் பிசினஸ்மேன், போக்கிரி, ஐ ஸ்மார்ட் ஷங்கர் என பல்வேறு பிளாக்பஸ்டர் படங்களை இயக்கிய பூரி ஜெகன்நாத் தான் இப்படத்தை இயக்கி உள்ளார். ஒரே நேரத்தில் தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய இரு மொழிகளில் வெளியான இப்படத்தை நடிகை சார்மி மற்றும் பாலிவுட் பிரபலம் கரண் ஜோகர் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.
இப்படத்தில் நடிகர் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை அனன்யா பாண்டே நடித்துள்ளார். மேலும் ரம்யா கிருஷ்ணன், மைக் டைசன் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். பான் இந்தியா படமாக நேற்று உலகமெங்கும் இப்படம் ரிலீசானது. இப்படத்தை தமிழகத்தில் நடிகர் ஆர்.கே.சுரேஷின் ஸ்டூடியோ 9 நிறுவனம் வெளியிட்டிருந்தது.
லைகர் படம் ரிலீசானதில் இருந்து அப்படத்திற்கு மோசமான விமர்சனங்களே கிடைத்து வருகின்றனர். படத்தின் கதை சுவாரஸ்யம் இல்லாமல் இருப்பதாக ஏராளமான விமர்சனங்கள் எழுந்தன. சிலரோ முதல் பாதிவரை கூட தியேட்டரில் உட்கார முடியவில்லை என்றெல்லாம் ட்ரோல் செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தனர்.
இதையும் படியுங்கள்... உடலில் ஏகப்பட்ட காயங்கள்... பிக்பாஸ் பிரபலத்தின் பிரேத பரிசோதனையில் வெளியான பகீர் தகவல் ! இருவர் அதிரடி கைது!
இந்நிலையில், இப்படத்தின் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் நிலவரம் வெளியாகி உள்ளது. லைகர் திரைப்படம் மோசமான விமர்சனங்களை பெற்றாலும் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷனில் மாஸ் காட்டி உள்ளது. இப்படம் அதிகபட்சமாக ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் ரூ.14 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது. அதேபோல் இதன் இந்தி பதிப்பும் முதல் நாளில் ரூ.5 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது.
இதர மொழிகளெல்லாம் சேர்த்து இப்படம் முதல் நாளில் உலகம் முழுவதும் ரூ.20-ல் இருந்து ரூ.22 கோடி வரை வசூலித்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது கடந்த சில வாரங்களுக்கு முன் வெளியான அமீர்கானின் லால் சிங் சத்தா படத்தை விட அதிக வசூல் ஆகும். அப்படம் முதல் நாளில் ரூ.14 முதல் ரூ.16 கோடி வரை மட்டுமே வசூல் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் இனி வரும் நாட்களில் லைகர் படத்தின் வசூல் குறைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படியுங்கள்... விறுவிறுக்கும் ‘பிக்பாஸ் சீசன் 6’ பணிகள்.. இதுவரை 10 போட்டியாளர்களை தட்டி தூக்கிய பிக்பாஸ் குழு- அவர்கள் யார்?
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.