- Home
- Cinema
- Beast movie :பீஸ்ட்டுக்கு ஆப்பு வைக்கும் அரபு நாடுகள்... குவைத்தை தொடர்ந்து மேலும் ஒரு நாட்டிலும் தடை விதிப்பு
Beast movie :பீஸ்ட்டுக்கு ஆப்பு வைக்கும் அரபு நாடுகள்... குவைத்தை தொடர்ந்து மேலும் ஒரு நாட்டிலும் தடை விதிப்பு
Beast movie : விஷ்ணு விஷால் நடிப்பில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான எஃப்.ஐ.ஆர் படத்துக்கும் கத்தார் மற்றும் குவைத் போன்ற நாடுகள் தடை விதித்திருந்த நிலையில், தற்போது பீஸ்ட் படத்துக்கும் அங்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.

மாஸ்டர் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பின்னர் நடிகர் விஜய் நடிப்பில் தற்போது தயாராகி உள்ள படம் பீஸ்ட். நெல்சன் இயக்கியுள்ள இப்படத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டேவும், வில்லனாக மலையாள நடிகர் ஷான் டாம் சாக்கோவும் நடித்துள்ளனர். மேலும் செல்வராகவன், அபர்ணா தாஸ், சதீஷ், விடிவி கணேஷ், யோகிபாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
தமிழில் தயாராகி உள்ள பீஸ்ட் திரைப்படம் தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் ஆகிய நான்கு மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு பான் இந்தியா படமாக வெளியாக உள்ளது. பீஸ்ட் திரைப்படம் வருகிற ஏப்ரல் 13-ந் தேதி திரைகாண உள்ளது. பீஸ்ட் படத்தின் ரிலீஸுக்கு இன்னும் ஒரு சில தினங்களே உள்ளதால் அப்படத்தின் புரமோஷன் பணிகளும் வேகமெடுத்துள்ளன.
அதன்படி இப்படத்தை தமிழ் மக்களிடையே புரமோட் செய்யும் விதமாக நடிகர் விஜய், நேர்காணல் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுள்ளார். சுமார் 10 ஆண்டுகளுக்கு பின்னர் நடிகர் விஜய் பங்கேற்றுள்ள இந்த சிறப்பு நேர்காணல் நிகழ்ச்சியை பீஸ்ட் படத்தின் இயக்குனர் நெல்சன் தொகுத்து வழங்கி உள்ளார். இந்நிகழ்ச்சி இன்று (ஏப்ரல் 10) இரவு 9 மணிக்கு ஒளிபரப்பப்பட உள்ளது.
பீஸ்ட் படத்தில் இஸ்லாமியர்களை பயங்கரவாதிகள் போல் சித்தரிக்கும் காட்சிகள் உள்ளதாக கூறி இப்படத்தை குவைத்தில் வெளியிட அந்நாட்டு அரசு தடை விதித்திருந்த நிலையில், தற்போது மேலும் ஒரு அரபு நாடு பீஸ்ட் படத்துக்கு தடை விதித்துள்ளது. அதன்படி கத்தார் நாட்டில் இப்படம் ரிலீஸ் செய்யப்படாது என அறிவிக்கப்பட்டு உள்ளது.
முன்னதாக விஷ்ணு விஷால் நடிப்பில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான எஃப்.ஐ.ஆர் படத்துக்கும் கத்தார் மற்றும் குவைத் போன்ற நாடுகள் தடை விதித்திருந்த நிலையில், தற்போது விஜய் நடித்துள்ள பீஸ்ட் படத்துக்கும் அங்கு தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் அரபு நாடுகளில் பீஸ்ட் படத்தின் வசூல் பாதிக்கும் சூழல் உருவாகி உள்ளது
இதையும் படியுங்கள்... Beast Vs KGF 2 : டிக்கெட் புக்கிங்கில் மாஸ் காட்டும் KGF 2... விஜய்யின் பிடிவாதத்தால் சரிவை சந்திக்கும் பீஸ்ட்