மூளை மாற்று அறுவை சிகிச்சையா? பிச்சைக்காரன் 2 ஸ்னீக் பீக் வெளியீடு!
விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகி வரும் பிச்சைக்காரன் 2 படத்தின் ஸ்னீக் பீக் வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.

<p>pichaikkaran 2 vijay antony image</p>
இசையமைப்பாளரான விஜய் ஆன்டனி, தமிழில் கடந்த 2006 ஆம் ஆண்டு வெளியான 'கிழக்கு கடற்கரை சாலை' படத்தின் மூலம் தன்னுடைய நடிப்பு பயணத்தைதுவங்கியவர் . இதைதொடர்ந்து, இவர் முழு நீல ஹீரோவாக 'நான்' என்கிற படத்தின் மூலம் நடித்தார். பின்னர் சலீம், இந்தியா பாகிஸ்தான், என அடுத்தடுத்து ஹீரோ சப்ஜெட் படங்களை தேர்வு செய்து நடிக்க துவங்கினார்.
<p>pichaikkaran 2 vijay antony image</p>
அந்த வகையில், இவர் இயக்குனர் சசி இயக்கத்தில்... கடந்த 2015 ஆம் ஆண்டு நடித்த திரைப்படம் 'பிச்சைக்காரன்'. வெளிநாட்டில் படித்து விட்டு, வரும் ஒரு மிகப்பெரிய பணக்காரன்... சில நாட்கள் தன்னுடைய அம்மாவுக்காக தன்னுடைய அடையாளத்தை மறைத்து கொண்டு, எதற்காக பிச்சைக்காரனாக வாழ்கிறான். என அம்மா சென்டிமென் கதைக்களத்தோடு வெளியான இந்த படம், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட் வெற்றிப்படமாக மாறியது.
இப்படம் விஜய் ஆண்டனி திரையுலக வாழ்க்கையிலும் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்த நிலையில், இப்படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கப்படுமா என்கிற கேள்வியையும் ரசிகர்கள் முன்வைத்து வந்த நிலையில், தற்போது பிச்சைக்காரன் 2 படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பில் இருந்த போது, விஜய் ஆண்டனிக்கு திடீர் என ஏற்பட்ட விபத்தில் விஜய் ஆண்டனியின் தாடை மற்றும் மூக்கு பகுதி சேதமடைந்தது.
<p>vijay antony</p>
ஒருவழியாக இந்த விபத்தில் இருந்து மீண்டுள்ள விஜய் ஆண்டனி நன்கு உடல்நலம் தெரிவித்ததாகவும் விரைவில் உங்களை சந்திக்கிறேன் என தெரிவித்திருந்தார். இதை தொடர்ந்து, விஜய் ஆன்டனி தற்போது இந்த படம் குறித்த முக்கிய அப்டேட் ஒன்றை, தன்னுடைய சமூக வலைதள பக்கத்தின் மூலம் பகிர்ந்துள்ளார். அதாவது "பணம் உலகை காலி பண்ணிடும்' என்கிற கேப்ஷனுடன்... நாளை மாலை 5 மணிக்கு இந்த படத்தில் இடம்பெற்றுள்ள ஸ்னீக் பீக் காட்சி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டது.
அதன்படி, இன்று மாலை ஆண்டி பிகிலி பிச்சைக்காரன் 2 படத்தின் ஸ்னீக் பீக் வீடியோ வெளியானது. இதில், பேச்சிக்குப்பம் கம்பெனியின் முக்கிய நிர்வாகி ஒருவர் கடன் தொல்லையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்வது போன்றும், தொங்குவது போன்றும், ஒரு சிறுவன் பார்த்து அழுவது போன்றும் உள்ள காட்சி இடம் பெற்றது. அதோடு, அறிவியல் கண்டுபிடிப்பு மற்றும் மூளை மாற்று அறுவை சிகிச்சை ஆகியவை குறித்து மருத்துவரிடம் விவாதம் நடக்கும் காட்சி இடம் பெறுள்ளது. இறுதியில் மண்டை ஓட்டுடன் கூடிய ருத்திரமாக இருக்கும் காளி தேவியின் படம் இடம் பெற்றுள்ளது.
பிச்சைக்காரன் 2 படத்தை, விஜய் ஆண்டனி இயக்கி, இசையமைத்து, நடித்து வருவதோடு இப்படத்தை தனது தயாரிப்பு நிறுவனமான "விஜய் ஆண்டனி பிக்சர்ஸ்" மூலம் அவனது மனைவி பாத்திமா விஜய் ஆண்டனி தயாரித்து வருகிறார். இப்படம் மார்ச் மாதம் வெளியாக திட்டமிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.