உச்சகட்ட அதிர்ச்சியில் படக்குழு... 'வாரிசு' படப்பிடிப்பில் இருந்து வெளியான விஜய் - ராஷ்மிகா ரொமான்ஸ் போட்டோ!
படக்குழுவின் பாதுகாப்பு நடவடிக்கைகளை மீறி... மீண்டும் 'வாரிசு' படத்தின், ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம் வெளியாகியுள்ளது படக்குழுவினரை, உச்சகட்ட அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தளபதி விஜய் தற்போது இயக்குனர் வம்சி இயக்கத்தில் உருவாகி வரும் ‘வாரிசு’ படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், படக்குழுவின் உச்சகட்ட பாதுகாப்பை மீறி, அவ்வப்போது ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தொடர்ந்து வெளியாகி வருகிறது.
விஜய் போன்ற பெரிய நடிகர்களின் படங்களின் காட்சிகள் வெளியாகாமல் பாதுகாப்பது மிகப்பெரிய சவாலாக இருக்கும் நிலையில், இயக்குனர் 'வம்சி'... இனி படப்பிடிப்பில் இருந்து ஒரு புகைப்படம் கூட வெளியாக கூடாது என, படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் துணை இயக்குனர்கள் முதல்... தொழில்நுட்ப கலைஞர்கள் வரை யாரும், செல்போன் பயன்படுத்த கூடாது என கண்டிஷன் போட்டதாக தகவல் வெளியானது.
மேலும் செய்திகள்: 'கபாலி' படத்தால் மன உளைச்சலுக்கு ஆளானேன்! முதல் முறையாக பா.ரஞ்சித் வெளியிட்ட தகவல்!
எனவே இனி 'வாரிசு' படம் சம்மந்தப்பட்ட காட்சிகள், மற்றும் புகைப்படங்கள் வெளியாக வாய்ப்பே இல்லை என கூறப்பட்ட நிலையில், படக்குழுவினருக்கு அதிர்ச்சி கொடுக்கும் விதமாக தற்போது, விஜய் மற்றும் ராஷ்மிகா கியூடாக ரொமான்ஸ் செய்யும் புகைப்படம் இணையதளங்களில் வெளியாகி, படக்குழுவினருக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளது.
இது எப்படி நடக்கிறது? யார் படப்பிடிப்பு தளத்தின் புகைப்படங்களை லீக் செய்து வருகிறார்கள் என நடிகர் விஜய் முதல்... இயக்குனர், தயாரிப்பாளர் என அனைவருமே கோவத்தில் உள்ளதாக கூறப்படுகிறது. இதுவரை 10க்கும் மேற்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது வெளியாகியுள்ள இந்த புகைப்படம், சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
மேலும் செய்திகள்: விக்ரமை காண திருச்சியில் கூடிய ரசிகர்கள்..! போலீசார் லத்தியால் அடித்து துரத்தியதால் பரபரப்பு..! வைரல் வீடியோ..