விக்ரமை காண திருச்சியில் கூடிய ரசிகர்கள்..! போலீசார் லத்தியால் அடித்து துரத்தியதால் பரபரப்பு..! வைரல் வீடியோ..
சீயான் விக்ரம் நடித்துள்ள 'கோப்ரா' படத்தின் செய்தியாளர் சந்திப்பு இன்று திருச்சியில் நடைபெற உள்ள நிலையில், விமான நிலையம் வந்த நடிகர் விக்ரமை காண ரசிகர்கள் கூடியபோது அவர்களை போலீசார் லத்தியால் அடித்து கூட்டத்தை கலைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
நடிகர் சீயான் விக்ரம் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் 'கோப்ரா' இந்த படத்தை 'டிமான்டி காலனி', 'இமைக்கா நொடிகள்', போன்ற வெற்றி படங்களை இயக்கிய, இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கி உள்ளார். இந்த படத்தில் நடிகர் விக்ரமுக்கு ஜோடியாக கேஜிஎப் படத்தின் நாயகி ஸ்ரீநிதி ஷெட்டி நடித்துள்ளார். இந்த படத்தை 7 ஸ்கிரீன் நிறுவனம் சார்பில், லலித் குமார் தயாரித்துள்ளார்.
இந்த படத்தின் மூலம் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் நடிகராக அவதாரம் எடுத்துள்ளார். குறிப்பாக இந்த படத்தில் விக்ரமுக்கு வில்லனாக அவர் நடித்துள்ளார். 'கோப்ரா' படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்த நிலையில் விக்ரம் உட்பட பட குழுவினர் அனைவருமே இதில் கலந்து கொண்டனர். இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் இசையில் வெளியான 'கோப்ரா' பட பாடல்கள் அனைத்துமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. குறிப்பாக தும்பி துள்ளல் மற்றும் அதிரா ஆகிய பாடல்கள் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது.
எப்போதுமே வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடிக்கும் விக்ரம், இந்த படத்தில் சுமார் ஏழு கெட்டப்புகளில் நடித்துள்ளது மட்டுமின்றி, ஏழு கெட்டப்பிற்கும் அவரே வித்தியாசம் காட்டி டப்பிங் பேசியுள்ளார். இந்த படத்தின் அனைத்து பணிகளும் முடிவடைந்து வரும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஆகஸ்ட் 31ஆம் தேதி இப்படம் ரிலீஸ் ஆக உள்ள நிலையில், 'கோப்ரா' பட பிரமோஷன் பணிகள் முழு வீச்சியில் நடந்து வருகிறது.
அந்த வகையில் பல்வேறு இடங்களில் ப்ரமோஷன் பணிகளை பட குழு மேற்கொள்ள உள்ள நிலையில், இன்று முதல் கட்டமாக திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்தனர். இதற்காக இன்று காலை நடிகர் விக்ரம், ஸ்ரீநிதி ஷெட்டி, நடிகை மறுநாளினி, இயக்குனர் அஜித்தின் ஞானமுத்து, உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரும் திருச்சி ஏர்போர்ட் வந்தனர். அப்போது விக்ரமைக்கான பல ரசிகர்கள் ஏர்போர்ட்டில் கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது. ரசிகர்களின் கூட்டத்தை கட்டுப்படுத்த போலீசார் லத்தியால் அடித்து துரத்தினர் . இது குறித்த சில வீடியோக்கள் மற்றும் விக்ரமின் காண ரசிகர்கள் முண்டியடித்த வீடியோக்கள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.