நயன்தாராவுக்கு இரட்டை பெண் குழந்தைகள்; சர்ப்ரைஸ் கொடுத்த விக்னேஷ் சிவன்!
நடிகை நயன்தாராவுக்கு ஏற்கனவே இரட்டை ஆண் குழந்தைகள் இருக்கும் நிலையில், அவர் இரட்டை பெண் குழந்தைகளுடன் இருக்கும் வீடியோவை விக்னேஷ் சிவன் பதிவிட்டுள்ளார்.

இரட்டை குழந்தைகளுடன் நயன்தாரா
தமிழ் திரையுலகில் லேடி சூப்பர்ஸ்டாராக வலம் வருபவர் நயன்தாரா. தற்போது அவருக்கு வயது 40ஐ நெருங்கிவிட்டாலும் இன்றளவும் நம்பர் 1 நாயகியாக வலம் வருகிறார். தமிழ் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி என பான் இந்தியா அளவில் பிசியான நாயகியாக நடித்து வருகிறார் நயன்தாரா. திருமணத்துக்கு பின்னர் நடிகைகளின் மார்க்கெட் கம்மியாகும் என்கிற பிம்பம் உண்டு, ஆனால் அதையெல்லாம் தகர்த்தெறிந்து திருமணத்துக்கு பின்னர் தான் செம பிசியான நடிகையாக வலம் வருகிறார் நயன்.
லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா
நடிகை நயன்தாராவுக்கு கடந்த 2022-ம் ஆண்டு திருமணம் ஆனது. இவர் தன்னுடைய நீண்ட நாள் காதலனான விக்னேஷ் சிவனை கரம்பிடித்தார். திருமணமான நான்கே மாதத்தில் இரட்டை குழந்தைகளுக்கு தாயாகிவிட்டதாக அறிவித்து அதிர்ச்சி கொடுத்தார் நயன்தாரா. அது மிகப்பெரிய சர்ச்சையாக வெடித்தது. பின்னர் தான் அவர் வாடகைத் தாய் மூலம் இரட்டை ஆண் குழந்தைகளை பெற்றெடுத்த தகவல் தெரியவந்தது.
இதையும் படியுங்கள்... சிம்பு பிறந்தநாளன்று முக்கிய அறிவிப்பை வெளியிடும் நயன்தாரா; அடடே இதுதான் விஷயமா?
நயன்தாராவின் வைரல் புகைப்படம்
தன்னுடைய இரட்டை ஆண் குழந்தைகளுக்கு உயிர், உலக் என பெயரிட்ட நயன்தாரா, அவர்கள் மீது அதீத அன்பு வைத்திருப்பதை பல மேடைகளில் கூறி இருக்கிறார். தற்போது நயன்தாராவின் மகன்மளுக்கு இரண்டு வயது ஆகிறது. மகன்கள் நடக்கத் தொடங்கியுள்ள இந்த நேரத்தில் நயன்தாராவின் கணவர் விக்னேஷ் சிவன், ஒரு வீடியோவை பதிவிட்டு ரசிகர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறார். அந்த வீடியோவில் நயன்தாரா இரட்டை பெண் குழந்தைகளுடன் இருக்கிறார்.
நயன்தாராவுக்கு இரட்டை பெண் குழந்தைகளா?
இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் மறுபடியும் இரட்டைக் குழந்தைகளா என ஷாக் ஆகிப்போய் உள்ளனர். ஆனால் உண்மையில், அந்த வீடியோ ஏஐ தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட ஒரு வீடியோவாகும். அது அப்படியே ஒரிஜினல் போல தத்ரூபமாக இருப்பதால் ரசிகர்கள் கன்பியூஸ் ஆகிப்போய் உள்ளனர். அந்த வீடியோவில் உள்ள இரட்டை பெண் குழந்தைகளும் நயனின் முக ஜாடையுடன் செம க்யூட்டாக இருக்கின்றனர்.
நயன்தாராவின் ஏஐ புகைப்படம்
இதை இன்ஸ்டா ஸ்டோரியில் ஷேர் செய்துள்ள விக்னேஷ் சிவன், சில நேரங்களில் ஏஐ-யும் ரொம்ப க்யூட்டாக உள்ளது என குறிப்பிட்டு அந்த வீடியோவுக்கு ஹார்ட்டை பறக்கவிட்டுள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள் அந்த வீடியோவில் விக்னேஷ் சிவனையும் சேர்த்திருந்தால் அழகாக இருந்திருக்கும் என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.
இதையும் படியுங்கள்... ரூ.100 கோடி செலவில் நயன்தாரா கட்டிய வீட்டை பார்த்திருக்கிறீர்களா?