Ajithkumar: ஆரம்பமாகும் 'விடாமுயற்சி' படப்பிடிப்பு.. கேரளா ட்ரிப்பை முடித்து கொண்டு சென்னை திரும்பும் அஜித்!
அஜித் தற்போது கேரளாவில் பைக் ரெய்டிங் செய்து வரும் நிலையில், அதனை முடித்து கொண்டு... சென்னை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தென்னிந்திய திரையுலகில், தளபதி விஜய், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமல்ஹாசன் ஆகியோருக்கு நிகராக அதிக ரசிகர்கள் பட்டாளத்தை வைத்துள்ளவர் அஜித். பொதுவாக திரையுலகை சேர்ந்த பிரபலங்கள், தான் சார்ந்த துறை சம்பந்தப்பட்ட வெவ்வேறு பணிகளில் கவனம் செலுத்துவது வழக்கம். ஆனால் அஜித் மிகவும் வித்தியாசமான ஒருவராகவே பார்க்கப்படுகிறார்.
நடிப்பு, தாண்டி... போட்டோகிராஃபி, கார் ரேஸ், பைக் ரேஸ், சமையல், ரிப்பில் ஷூட்டிங், ஏரோ மாடலிங் போன்ற சாகசம் நிறைந்த விஷயங்களில் கவனம் செலுத்துவதை வழக்கமாக வைத்துள்ளார்.
தற்போது உலகசுற்றுலா பயணத்தை, இந்தியாவில் இருந்து தொடங்கிய அஜித், இந்தியாவின் அனைத்து மாநிலங்களையும் பைக்கிலேயே சுற்றி வந்தார். இந்தியாவில் வெற்றிகரமாக தனது பயணத்தை முடித்த பின்னர், தன்னுடைய அடுத்த கட்ட பயணத்திற்கு தயாராகிவிட்டார்.
அந்த வகையில் சமீபத்தில் நேபாளம் மற்றும் பூடானுக்கு பைக்கில் பயணம் செய்த அஜித், இதை தொடர்ந்து, மகிழ் திருமேனி இயக்கத்தில், நடிக்கும் 'விடாமுயற்சி' படத்தின் ஆரம்ப கட்ட பணிகள் தொடர்ந்து தாமதமாகி வருவதால், கேரள மாநிலத்தில் தனது சுற்று பயணத்தை மேற்கொண்டு வருகிறார். வயநாட்டில் தற்போது அஜித் சுற்றுப்பயணம் செய்து வருவதாகவும், இதை தொடர்ந்து இன்னும் சில நாட்கள் கேரளாவின் வடமாவட்டங்களில் பயணம் செய்யவுள்ளார் என கூறப்படுகிறது.
மேலும் அஜித் நடிக்கும், விடாமுயற்சி படத்தின்... படப்பிடிப்பு ஜூன் 2 ஆவது வாரத்தில் இருந்து துவங்க உள்ளதாக கூறப்படும் நிலையில், தன்னுடைய சுற்றுப்பயணத்தை முடித்து கொண்டு இந்த வாரத்தில் அஜித் சென்னை திரும்ப உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அஜித்தின் 'விடாமுயற்சி' படத்தில், அவருக்கு ஜோடியாக நடிகை த்ரிஷா ஹீரோயினாக நடிக்கிறார்.
ஏற்கனவே அஜித் த்ரிஷா இனைத்து, ஜி, கிரீடம், என்னை அறிந்தால், மங்காத்தா போன்ற படங்களில் நடித்துள்ள நிலையில் 'விடாமுயற்சி' படத்திலும் 5-வது முறையாக ஜோடி சேர உள்ளார்களாம்.
பிச்சைக்காரன் 2 திரைப்படம் இதுவரை எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா? லாபம் மட்டும் இத்தனை கோடியா?
'விடமுயற்சி' படப்பிடிப்பை ஜூன் முதல் அக்டோபர் வரை ஒரே ஷெட்யூலில் முதல் கட்ட படப்பிடிப்பை முடிக்க திட்டமிட்டுளார்களாம். ஆக்ஷன் த்ரில்லராக உருவாகும் இப்படம் 2024 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் வெளியாக உள்ளது. இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.