திரையுலகிற்கு குட்பை சொல்லும் விஜய்? ரஜினி தயங்கிய விஷயத்தில் தடாலடியாக இறங்கும் தளபதி! தயாராகும் மெகா பிளான்!
தமிழ் சினிமாவின் வசூல் மன்னனாக இருக்கும், தளபதி விஜய் திரையுலகில் இருந்து விலக உள்ளதாக, வெளியாகி உள்ள தகவல் சமூக வலைத்தளத்திலும், ரசிகர்கள் மத்தியிலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தளபதி விஜய்யின் தந்தை, எஸ் கே சந்திரசேகர் இயக்குனர் என்பதால், தளபதி விஜய்க்கு நடிகராகும் வாய்ப்பு மிக எளிதாக கிடைத்திருந்தாலும், ரசிகர்கள் மனதில் குடிகொள்ள முக்கிய காரணம் அவரின் திறமை மட்டுமே. தமிழ் சினிமாவில் இளம் நடிகராக அறிமுகமான காலத்தில் பல்வேறு விமர்சனங்களுக்கு ஆளான விஜய், அதனால் பலமுறை மனம் நொந்து கண்ணீர் வடித்துள்ளதாக எஸ் எஸ் சி ஒரு சில பேட்டிகளில் வெளிப்படையாகவே கூறியுள்ளார்.
இப்படி தன் மீது வீசப்பட்ட விமர்சனங்களை வெற்றி படிகளாக மாற்றி, தற்போது யாரும் எட்ட முடியாத உயரத்தை திரையுலகில் அடைந்துள்ளார் விஜய். இவரின் நடிப்பு, டான்ஸ், ஆக்ஷன், ஸ்டைல், மற்றும் குசும்புத்தனமான காமெடி என அனைத்திற்குமே தனி ரசிகர்கள் கூட்டமே உள்ளது. மேலும் தளபதி படங்கள், உள்ளிட்ட எந்த தகவல் வந்தாலும், அதனை சமூக வலைதளத்தில் வைரலாக்கி விடுவதை வழக்கமாக வைத்துள்ளனர்.
அதிர்ச்சி... நடிகை நவ்யா நாயர் திடீரென மருத்துவமனையில் அனுமதி!
அந்த வகையில் தற்போது விஜய், ரசிகர்கள் அதிகம் எதிர்பாக்கும் திரைப்படம்... இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி நடித்து முடித்துள்ள 'லியோ' திரைப்படம் தான். இந்த படத்தை தொடர்ந்து தளபதி தன்னுடைய 68 ஆவது படத்தை, இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்க உள்ளதாக சமீபத்தில் அதிகார பூர்வ அறிவிப்பும் வெளியானது. இப்படம் அரசியல் கதையம்சம் கொண்ட படமாக உருவாக உள்ளதாக கூறப்படுகிறது.
இது ஒரு புறம் இருக்க தளபதி விஜய் தன்னுடைய 70 ஆவது படத்திற்கு பின்னர், முழுமையாக திரை உலகில் இருந்து விலகி அரசியலில் கவனம் செலுத்த உள்ளதாக ஒரு தகவல் சமூக வலைதளத்தில் தீயாக பரவி வருகிறது. ஏற்கனவே, விஜய் அரசியலுக்கு அடித்தளமிடுவது போல் தன்னுடைய ஆடியோ லான்ச் போன்றவற்றில் பேசி வந்த நிலையில், இதைத்தொடர்ந்து தன்னுடைய விஜய் மக்கள் இயக்கத்தைச் செய்தவர்களை, கடந்தாண்டு நடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் எந்த கட்சியுடனும் கூட்டணி இல்லாமல் நிற்கச் செய்த நிலையில், அதில் சுமார் 115 பேர் வெற்றியும் பெற்றனர். அவர்களை நேரில் சந்தித்து தன்னுடைய வாழ்த்துக்களையும் தெரிவித்தார் விஜய்.
அதுவரை மறைமுகமாகவே தன்னுடைய அரசியல் கவனத்தை செலுத்தி வந்த விஜய், சமீப காலமாக வெளிப்படையாக சில அதிரடி உத்தரவுகளையும், செயல்களையும் செயல்படுத்தி வருகிறார். அம்பேத்கர் ஜெயந்தி அன்று, அவருடைய சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யச் சொன்ன விஜய், பின்னர் பட்டினி தினத்தை முன்னிட்டு, நேற்று தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கும் இலவசமாக (ஒரு வேளை) மதிய உணவை, ரசிகர்கள் மூலம் வழங்கச் செய்தார். அதேபோல் புதுச்சேரி, ஆந்திரா, கர்நாடகா, போன்ற மாநிலங்களிலும் தளபதியின் ரசிகர்கள் ஏழை, எளிய, மக்களுக்கு உணவு வழங்கியது குறிப்பிடத்தக்கது.
இதை தொடர்ந்து, விரைவில் பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வுதலில், மாநில அளவில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளுக்கு உதவித்தொகை வழங்க விஜய் மக்கள் இயக்கம் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த நிகழ்ச்சி வரும் ஜூன் மாதம் 17ஆம் தேதி மதுரவாயிலில் உள்ள திருமண மண்டபத்தில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் இதில் விஜய் நேரடியாக கலந்து கொண்டு மாணவ மாணவிகளிடம் உரையாடுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இப்படி அடுத்தடுத்து தன்னுடைய அரசியல் நகர்வுகள் குறித்து வெளிப்படையாகவே, காய் நகர்த்திவரும் விஜய், தன்னுடைய 70 வது படத்திற்கு பின்னர் சினிமாவை விட்டு முழுமையாக விலகி, அரசியலில் ஈடுபட உள்ளாராம். தளபதியின் 70 வது படம் முழுக்க முழுக்க அரசியல் களத்தை மையமாக கொண்டு உருவாக உள்ளதாகவும், இந்த படத்தை இயக்குனர் வெற்றிமாறன் இயக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதன் பின்னர் 2026 சட்டமன்றத் தேர்தலில் தளபதி விஜய் களம் இறங்க உள்ளதாகவும், இதற்கு முன்னதாக மதுரையில் அரசியல் மாநாட்டை நடத்தவும் மெகா பிளான் ஒன்றை போட்டுள்ளாராம். தலைவர் ரஜினிகாந்த், பல வருடங்களாக அரசியலில் குதிக்க தயக்கம் காட்டிய நிலையில், அதிரடியாக விஜய் அரசியலில் இறங்க உள்ளதாக வெளியாகும் தகவல் எந்த அளவுக்கு உண்மை என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
விஜய்யுடன் 'லியோ' படத்தில் நடிக்கும் நாசரின் சகோதரர் ஜவஹர்! அச்சு அசல் அவரை போலவே இருக்காரே..!