அதிர்ச்சி... நடிகை நவ்யா நாயர் திடீரென மருத்துவமனையில் அனுமதி!

தமிழ் மற்றும் மலையாள படங்களில் நடித்து பிரபலமான நடிகை நவ்யா நாயர், திடீர் என மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தகவல் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 

Hospitalization of actress Navya Nair


மலையாள பைங்கிளியான நவ்யா நாயர், 2001 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற 'இஷ்டம்' திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர். இதை தொடர்ந்து, மலையாள திரை உலகை சேர்ந்த பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து முன்னணி நடிகைகள் லிஸ்டில் இடம்பிடித்தார்.

மலையாளத்தை தொடர்ந்து, தமிழிலும் ஒரு சில படங்களில் நவ்யா நாயர் நடித்துள்ளார். 2004 ஆம் ஆண்டு நடிகர் பிரசன்னா நடிப்பில் வெளியான, 'அழகிய தீயே' திரைப்படத்தின் மூலம் தமிழில் கதாநாயகி அவதாரம் எடுத்த நவ்யா, இதைத் தொடர்ந்து சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி, அமிர்தம், சில நேரங்களில், ராமன் தேடிய சீதை, போன்ற படங்களில் நடித்துள்ளார்.

Sneha: 4-வது பெண்ணாக பிறந்ததால்... பிறந்த வீட்டில் கொடுமைகளை அனுபவித்த சினேகா! கண்ணீரோடு பகிர்ந்த மறுபக்கம்!

Hospitalization of actress Navya Nair

முன்னணி நடிகையாக இருக்கும் போதே, சந்தோஷ் மேனன் என்பவரை திருமணம் செய்து கொண்ட நவ்யா.. பின்னர் திரையுலகில் இருந்து முழுமையாக விலகினார். இவருக்கு மகன் ஒருவரும் உள்ளார்.  இந்நிலையில் நீண்ட இடைவெளிக்கு பின்னர், மீண்டும் மலையாள திரை உலகில் ரீஎன்ட்ரி கொடுக்க தயாராகியுள்ளார். அதன்படி இவர் நடித்துள்ள ‘ஜானகி ஜானே’ திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது.  எனவே விரைவில் தமிழிலும் நல்ல கதைகள் அமைந்தால் நவ்யா நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

விஜய்யுடன் 'லியோ' படத்தில் நடிக்கும் நாசரின் சகோதரர் ஜவஹர்! அச்சு அசல் அவரை போலவே இருக்காரே..!

Hospitalization of actress Navya Nair

இவர் நடித்து முடித்துள்ள ‘ஜானகி ஜானே’ படத்தின் புரோமோஷன் பணிகளுக்காக, பல்வேறு இடங்களுக்கு சென்று வந்த இவர், தற்போது உணவு ஒவ்வாமை பிரச்சனையால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது. இவர் மருத்துவமனையில் படுத்திருக்கும் புகைப்படம் ஒன்றும், வெளியாகி வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. இதை தொடர்ந்து ரசிகர்கள், விரைவில் நவ்யா நலம் பெற தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.


 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios