Sneha: 4-வது பெண்ணாக பிறந்ததால்... பிறந்த வீட்டில் கொடுமைகளை அனுபவித்த சினேகா! கண்ணீரோடு பகிர்ந்த மறுபக்கம்!
நடிகை சினேகா நான்காவது பெண் குழந்தையாக பிறந்ததால், பிறந்த வீட்டில் அனுபவித்த கஷ்டங்களை கண்ணீரோடு பகிர்ந்து கொண்டுள்ளார். இந்த தகவல் கேட்பவர்கள் நெஞ்சங்களையே உருக வைத்துள்ளது.
90ஸ் கிட்ஸ்சின் கனவு கன்னியாக வலம் வந்த நடிகை சினேகா, நான்காவது பெண் குழந்தையாக பிறந்ததால், எப்படிப்பட்ட கஷ்டங்களை எதிர்கொண்டேன் என்பது குறித்து பேட்டி ஒன்றில் கண்ணீரோடு கூறி உள்ளது, சமூக வலைதளத்தில் பேசும் பொருளாக மாறி உள்ளது.
தமிழ் சினிமாவில் புன்னகை அரசி என ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் சினேகா. மலையாள படத்தின் மூலம், நடிகையாக கடந்த 2000 ஆம் ஆண்டு அறிமுகமான சினேகா அதே ஆண்டு தமிழில் 'என்னவளே' என்கிற படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில், சினேகாவுக்கு ஜோடியாக மாதவன் நடித்திருந்தார். இதைத்தொடர்ந்து 2001 ஆம் ஆண்டு. நடிகர் அப்பாஸுக்கு ஜோடியாக சினேகா நடித்த 'ஆனந்தம்' திரைப்படம் 200 நாட்களுக்கு மேல் ஓடி சாதனை படைத்தது.
விஜய்யுடன் 'லியோ' படத்தில் நடிக்கும் நாசரின் சகோதரர் ஜவஹர்! அச்சு அசல் அவரை போலவே இருக்காரே..!
மேலும் இப்படம் சினேகா திரையுலக வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்பு முனையாகவும் அமைந்தது. இப்படத்தை தொடர்ந்து அடுத்தடுத்து முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக பல சூப்பர் ஹிட் படங்களில் நடிக்கும் வாய்ப்பை கைப்பற்றினார் சினேகா. குறிப்பாக கமலுக்கு ஜோடியாக 'பம்மல் கே சம்பந்தம்', தருணுக்கு ஜோடியாக 'புன்னகை தேசம்', சூர்யாவுக்கு ஜோடியாக 'உன்னை நினைத்து', தளபதி விஜய்க்கு ஜோடியாக 'வசீகரா' போன்ற படங்களில் நடித்து ரசிகர்களின் கனவு கன்னியாகவே மாறினார்.
அதேபோல் இவர் நடிப்பில் வெளியான ஆட்டோகிராப், புதுப்பேட்டை, பள்ளிக்கூடம் போன்ற படங்கள் எப்போதுமே ரசிகர்கள் மனதை விட்டு மிக சிறந்த படைப்புகளாகும்.
முன்னணி நடிகையாக இருக்கும் போதே, ஒரு சில காதல் சர்ச்சைகளில் நடிகை சினேகா சிக்கிய நிலையில், தொழிலதிபர் ஒருவருடன் நிச்சயதார்த்தம் வரை சென்று இவருடைய திருமணம் நின்றதாகவும் கூறப்பட்டது. இதன் பின்னர், பிரபல நடிகர் ஒருவரை சினேகா காதலித்ததாகவும் அந்த நடிகரின் குடும்பத்தில், இவர்களின் காதலுக்கு சம்மதம் தெரிவிக்காததால் இருவரும் பரஸ்பரமாக பேசி பிரேக் அப் செய்து கொண்ட தகவல்களும் வெளியாகின.
இதன் பின்னர் 'அச்சமின்றி அச்சமின்றி' படத்தில் நடிகர் பிரசன்னாவுடன் இணைந்து சினேகா நடித்த போது, இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. பின்னர் இருவரும் பெற்றோர் சம்பந்தத்துடன் கடந்த 2012 ஆம் ஆண்டு மிகப் பிரம்மாண்டமாக திருமணம் செய்து கொண்டனர். தற்போது தமிழ் சினிமாவில் க்யூட் நட்சத்திர ஜோடிகளாக வலம் வந்து கொண்டிருக்கும் சினேகா பிரசன்னா ஜோடிக்கு அழகிய ஆண் குழந்தை மற்றும் ஒரு பெண் குழந்தையும் உள்ளது.
பக்கா பொருக்கி மாதிரி இருக்க? அனிதா சம்பத்தை அசிங்கப்படுத்திய நெட்டிசன்! வேற லெவல் பதிலடி!
திருமணமாகி குழந்தை பெற்ற பின்னும், தொடர்ந்து திரைப்படங்கள் மற்றும் டிவி நிகழ்ச்சிகளில் கவனம் செலுத்தி வருகிறார் சினேகா. அதேபோல் சமூக வலைதளத்தில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் இவர், அடிக்கடி தன்னுடைய போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு, ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்து வருகிறார்.
நடிகை சினேகாவின் திரையுலக வாழ்க்கை, திருமணம் வாழ்க்கை போன்றவை அனைவரும் அறிந்தது தான். ஆனால் அவரின் பிறந்த வீட்டை பற்றிய தகவல்கள் பலருக்கும் தெரியாது. சினேகாவும் இது குறித்து எந்த ஒரு பேட்டியிலும் பெரிதாக வாய் திறந்தது இல்லை. இந்நிலையில் முதல்முறையாக நடிகை சினேகா தன்னுடைய பிறந்த வீடு குறித்தும், சிறு வயதில் பட்ட கஷ்டங்கள் பற்றியும் தெரிவித்துள்ளார்.
தோனி தயாரிப்பில் 'ஹரிஷ் கல்யாண்' நடிக்கும் எல்.ஜி.எம். செகண்ட் லுக் போஸ்டர் வெளியானது!
நடிகை சினேகா பிறந்தது மிகவும் பெரிய குடும்பத்தில். அதாவது இவருக்கு மூன்று சகோதரிகள் மற்றும் இரண்டு சகோதரர்கள் உள்ளனர். சினேகா தான் கடைசியாக பிறந்த பெண் குழந்தை. ஆண் குழந்தை பிறக்க வேண்டும் என்கிற ஆசைகள் இருந்த அவரது பாட்டிக்கு, பெண் குழந்தை பிறந்த தகவல் தெரிந்ததும் அவர் மூன்று நாட்கள் சினேகா முகத்தைக் கூட வந்து பார்க்க வில்லையாம்.
Sneha
அதேபோல் ஆண் குழந்தைகளுக்கு மட்டுமே அதிக முக்கியத்துவம் கொடுப்பார்களாம். வீட்டில் எந்த வேலையாக இருந்தாலும் பெண் பிள்ளைகள் தான் செய்ய வேண்டும் என நினைப்பார்களாம். பக்கத்திலேயே தண்ணீர் இருந்தால் கூட, அதை சிநேகாவின் சகோதரர்கள் எடுத்து குடிக்க மாட்டார்களாம், கையில் எடுத்து கொண்டுதான் தான் கொடுப்பார்களாம். இதை எதிர்த்து கேள்வி கேட்டால், நான் ஆம்பள பைய, என்னால் எடுக்க முடியாது... நீ பொண்ணு அதனால் நீ தான் செய்யணும் என பேசுவர்களால்.
சினிமா நடிகைகளை மிஞ்சும் அளவிற்கு கவர்ச்சி காட்டி... விஜே அஞ்சனா நடத்திய செம்ம ஹாட் போட்டோஷூட் வைரல்
குறிப்பாக சினேகாவின் இரண்டாவது அண்ணன் இவரை படாத படு படுத்தியுள்ளாராம். சினேகாவையே அனைத்து வேலைகளையும் செய்யச் சொல்லி கொடுமை கூட படுத்துவாராம். இதனை முதல்முறையாக சினேகா சமீபத்தில் கொடுத்த பேட்டி ஒன்றில் கண்ணீரோடு தெரிவித்துள்ளார்.