பக்கா பொருக்கி மாதிரி இருக்க? அனிதா சம்பத்தை அசிங்கப்படுத்திய நெட்டிசன்! வேற லெவல் பதிலடி!
அனிதா சம்பத் தன்னுடைய தோழி ஒருவருடன் இணைந்து ரிலீஸ் செய்த வீடியோவை சமூக வலைதளத்தில் வெளியிட்ட நிலையில், இதை பார்த்த நெட்டிசன் ஒருவர் அவரை அசிங்கப்படுத்துவது போல் பதிவு ஒன்றை போட்டு திட்டு வாங்கி கட்டிக் கொண்டுள்ளது பரபரப்பாக பார்க்கப்பட்டு வருகிறது.
பிரபல தனியார் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருந்ததன் மூலம் மிகவும் பிரபலமானவர் அனிதா சம்பத். செய்தி வாசிப்பாளராக இருந்தபோதே ஒரு சில படங்களில் வாசிப்பாளராகவே நடித்திருந்தார்.
அதிலும் குறிப்பாக விஜய்யின் 'சர்க்கார்' ரஜினிகாந்த் நடித்த '2.0' போன்ற படங்களில் செய்தி வாசிப்பாளராக வந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். இதைத்தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த, பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, ஒரு கலக்கு கலக்கினார்.
விஜய்யுடன் 'லியோ' படத்தில் நடிக்கும் நாசரின் சகோதரர் ஜவஹர்! அச்சு அசல் அவரை போலவே இருக்காரே..!
பிக்பாஸ் வீட்டிற்குள் ஆரம்பத்தில் இருந்தே சண்டை கோழியாகவே வலம் வந்த அனிதா சம்பத், பின்னர் கொஞ்சம் அமைதியாக தன்னுடைய விளையாட்டை சாமர்த்தியமாக விளையாடினார். ஒவ்வொரு டாஸ்கிலும், இவர் நேர்மையாக விளையாடி வந்தது மக்களை கவர்ந்தது. இதுவே இவருக்கு அதிகமான ஓட்டுகளையும் பெற்று தந்தது.
பிக்பாஸ் நிகழ்ச்சி பரபரப்பாக சென்று கொண்டு இருந்த நிலையில், தேவையில்லாமல் பிக்பாஸ் சீசன் 4 டைட்டில் வின்னரான ஆரியுடன் சண்டை போட்டு ஒருமையில், அவரை கொஞ்சம் ஓவராக பேசியதால் மக்கள் மத்தியில் வாக்குகள் குறைந்து பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார்.
50 வயதை நெருங்கும் ஐஸ்வர்யா ராய் முகத்தில் இவ்வளவு சுருக்கமா? ஷாக்கிங் கிளோஸ் அப் போட்டோ!
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர், அனிதா சம்பத் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் ஜோடி நிகழ்ச்சியில் ஷாரிக்குக்கு ஜோடியாக நடனமாடி, டைட்டில் பட்டதையும் தட்டி சென்றார். தற்போது நடிகையாக அவதாரம் எடுத்துள்ள பிக்பாஸ் அனிதா, சமீபத்தில் விமலுக்கு தங்கையாக தெய்வ மச்சான் படத்தில் நடித்திருந்தார். இந்த படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறாமல் போனது.
எனினும் இதைத் தவிர ஒரு சில சீரியல்களிலும், தான் நடத்தி வரும் யூடியூப்பிலும் முழு கவனத்தை செலுத்தி வருகிறார். அவ்வபோது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரீல்ஸ் மற்றும் போட்டோ ஷூட் நடத்தி அதன் புகைப்படங்களை வெளியிடுவதையும் வழக்கமாக வைத்துள்ளார்.
அந்த வகையில் அனிதா சம்பத் தன்னுடைய தோழி ஒருவருடன் செய்து வெளியிட்ட ரீல் தான் தற்போது சர்ச்சையில் மாறி உள்ளது. அனிதா சம்பத் மிகவும் சாதாரணமான ரீல்ஸ் ஒன்றை வெளியிட்ட நிலையில், அதை கண்டு நெட்டிசன் ஒருவர் "பக்கா பொறுக்கி மாதிரி இருக்க" என்று கமெண்ட் போடு அசிங்கப்படுத்தியுள்ளார்.
இதை கண்டு பொங்கி எழுந்துள்ள அனிதா, மிகவும் கூலாக... "உன்னை யாரோ இப்படி சொல்லி இருப்பாங்க போல, அதனால் தான் இன்னொருத்தருக்கு சொல்லி ஆறுதல் படுத்துகிற. உனக்கு லைக் போட்டவனும் எங்கேயோ செம்மையை அடி வாங்கி இருப்பான் போல, என தெரிவித்துள்ளார். இந்த பதிவு பரபரப்பாக பார்க்கப்பட்டு வருகிறது.
சம்யுக்தாவிடம் தவறாக நடந்தேனா? விளக்கம் கொடுத்த வி.ஜே.ரவி.. வரிந்து கட்டிய சக நடிகை! செம்ம ட்விஸ்ட்!