MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • அஜித் இல்லாமல் துவங்கியது 'விடாமுயற்சி' படத்தின் அடுத்தகட்ட பணி!

அஜித் இல்லாமல் துவங்கியது 'விடாமுயற்சி' படத்தின் அடுத்தகட்ட பணி!

அஜித் நடிப்பில் உருவாகியுள்ள 'விடாமுயற்சி' படத்தின் அடுத்தகட்ட பணிகள் பூஜையுடன் சிறப்பாக துவங்கியுள்ளது. இதுகுறித்த புகைப்படங்களை அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா வெளியிட அது வைரலாகி வருகிறது. 

2 Min read
Author : manimegalai a
Published : Oct 28 2024, 08:21 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Vidamuyarchi

Vidamuyarchi

இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில், அஜித் நடித்துள்ள 'விடாமுயற்சி' திரைப்படத்தின் டப்பிங் பணிகள் ஒரு வழியாக தற்போது துவங்கியுள்ள நிலையில், இது குறித்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

நடிகர் அஜித் நடிப்பில், கடைசியாக இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் நடித்த 'துணிவு' திரைப்படம் கடந்த ஆண்டு வெளியானது. இந்த திரைப்படம் வெளியாகி ஒரு வருடம் ஆக உள்ள நிலையில், தற்போது வரை அஜித்தின் அடுத்த படமான 'விடாமுயற்சி' படத்தின் அப்டேட்ஸ் வெளியாகாமல் இருந்ததால், ரசிகர்கள் தொடர்ந்து இப்படத்தில் அப்டேட் எப்போது வெளியாகும் என சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பி வந்த நிலையில், இன்று மாலை 6:30 மணி அளவில் விடாமுயற்சி திரைப்படத்தின் முக்கிய அப்டேட் வெளியாகும் என அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா தன்னுடைய சமூக வலைதளத்தில் தெரிவித்திருந்தார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
Vidamuyarchi Update

Vidamuyarchi Update

அதன்படி 'விடாமுயற்சி' திரைப்படத்தின் டப்பிங் பணிகள், பூஜையுடன் கோலாகலமாக துவங்கி உள்ளதை தன்னுடைய சமூக வலைதளத்தில் புகைப்படத்தோடு அறிவித்துள்ளார். இந்த புகைப்படங்களை சமூக வலைதளத்தில் ரசிகர்கள் படு வைரலாக்கி வருகிறார்கள்.

டப்பிங் பணிகள் துவங்கியதற்காக போடப்பட்ட பூஜையில் ஆரவ்,  மகிழ் திருமேனி உள்ளிட்ட சிலர்  மட்டுமே கலந்து கொண்ட நிலையில், அஜித், திரிஷா, அர்ஜூன், போன்ற முக்கிய பிரபலங்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை.

பிசினஸில் அம்பானி வாரிசுடன் கை கோர்த்த நயன்தாரா! பக்கா பிளானுடன் போட்ட புது டீலிங்?

34
Vidamuyarchi Dubbing Poojai

Vidamuyarchi Dubbing Poojai

மேலும் தீபாவளியை முன்னிட்டு, அஜித்தின் 'விடாமுயற்சி' திரைப்படம் வெளியாகும் என காத்திருந்த ரசிகர்களுக்கு, ஏமாற்றமே மிஞ்சியது. எனினும் தற்போது விடாமுயற்சி படத்தின் அடுத்த கட்ட பணிகள் விறுவிறுப்பாக துவங்கி உள்ளதால், பொங்கல் ரிலீசாக இப்படம் வெளியாவது உறுதியென ரசிகர்கள் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

44
Vidamuyarchi Next Work Started:

Vidamuyarchi Next Work Started:

அதேபோல், அஜித் ரசிகர்களுக்கு இரட்டை விருந்தாக... ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில், அஜித் நடித்து வரும் 'குட் பேட் அக்லீ' திரைப்படம், அஜித்தின் பிறந்த நாளை முன்னிட்டு மே ஒன்றாம் தேதி ரிலீசாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.  லைகா நிறுவனம் தயாரிப்பில், மிக பிரம்மாண்டமான பொருட்செலவில் ஒரு வருடத்திற்கு மேலாக எடுக்கப்பட்டு வரும் இந்த படத்தில், அஜித்துக்கு ஜோடியாக திரிஷா நடித்துள்ளார். மேலும் அர்ஜுன், ரெஜினா, ஆரவ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சகித்துக் கொள்ளவே முடியாத ஒரு இருள்; தந்தை பற்றி இதனால் தான் பேசவில்லை! ஏ.ஆர்.ரஹ்மான் ஓப்பன் டாக்!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
அஜித் குமார்
திரிஷா
Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
அய்யாச்சாமி முதல் பாடிசோடா வரை... 'விஜய் vs வடிவேலு' பிளாக்பஸ்டர் ஹிட் காமெடி கூட்டணி ஒரு பார்வை !
Recommended image2
Now Playing
Manorama: கணவர் இறந்த செய்தி கேட்டும் ஷூட்டிங்கை நிறுத்தாத மனோரமா... பி.வாசு பகிர்ந்த ஷாக் சம்பவம்!
Recommended image3
Karuppu Controversy: கருப்பு பட டைரக்டர் ஆர்.ஜே.பாலாஜியை வறுத்தெடுக்கும் சூர்யா ஃபேன்ஸ்.! இதுதான் காரணமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved