சகித்துக் கொள்ளவே முடியாத ஒரு இருள்; தந்தை பற்றி இதனால் தான் பேசவில்லை! ஏ.ஆர்.ரஹ்மான் ஓப்பன் டாக்!
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் தன்னுடைய தாயார் கரீமா பேகம் பற்றி பல பேட்டிகளில் பேசி இருந்தாலும், தன்னுடைய தந்தை பற்றிய பேசாதது ஏன் என்றும், தந்தை எப்படி பட்டவர் என்பதையும் தன்னுடைய சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
AR Rahman
திலீப் குமார் என்கிற இயற்பெயருடன் பிறந்து, இசை மீதான ஆர்வத்தால்... சிறு வயதில் இருந்தே இசை பயிற்சி எடுத்து வந்த ஏ.ஆர்.ரஹ்மான், ஒரு கட்டத்தில் விளம்பரப்படங்களுக்கு இசையமைக்கும் அளவுக்கு வளர்ந்தார். பின்னர், இயக்குனர் மணிரத்தினம் ஏ.ஆர்.ரஹ்மானின் இசை மீதும், அவர் மீதும் உள்ள நம்பிக்கை காரணமாக, 'ரோஜா' திரைப்படத்தில் இசையமைக்கும் வாய்ப்பை கொடுத்தார்.
இசையமைப்பாளராக அறிமுகமான தன்னுடைய முதல் படத்திலேயே... இனிமையான இசையால் ரசிகர்கள் மனதை உருகச் செய்தார் ஏ ஆர் ரஹ்மான். மேலும், எத்தனையோ புதிய இசையமைப்பாளர்கள் வந்த போதும் இளையராஜாவின் இசையை அசைத்துப் பார்க்க முடியாத நிலையில், ஏ ஆர் ரகுமானின் இசைக்கு பாராட்டுக்கள் குவிந்தன.
AR Rahman, Ilaiyaraaja
இசைஞானிக்கு போட்டியாகவும் பார்க்கப்பட்டார் ஏ.ஆர்.ரகுமான். மேலும். 'ரோஜா' படத்தில் இடம்பெற்ற, ஒவ்வொரு பாடல்களும் தற்போது வரை அதிகப்படியான ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. அதே போல் இந்த படத்திற்காக ஏ ஆர் ரகுமான், சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதையும் வென்றார்.
மிகக் குறுகிய காலத்தில் தமிழ் மட்டும் இன்றி, தெலுங்கு, கன்னடம், மலையாளம், உள்ளிட்ட பிற மொழி தென்னிந்திய படங்களிலும் இசையமைத்த ஏ.ஆர்.ரஹ்மான்... 2009 ஆம் ஆண்டு வெளியான ஹாலிவுட் படமான 'ஸ்லம் டாக் மில்லியனர்' எங்கிற ஹாலிவுட் படத்திற்கு இசையமைத்ததற்காக இரண்டு ஆஸ்கர் விருதுகளையும் வென்றார்.
தலைவர் மாடுலேஷனில் மாநாட்டை தெறிக்க விட்ட தளபதி! விஜய்க்கு இருந்த தைரியம் ஏன் ரஜினிக்கு இல்லை?
AR Rahman Music
30 ஆண்டுகளைக் கடந்தும்... 300-க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்து ஒவ்வொரு படங்களுக்கும் தனித்துவமான இசையை வாரி வழங்கி வரும் இசை புயல் ஏ.ஆர்.ரஹ்மான் தன்னுடைய தாயார் பற்றி பல பேட்டிகளில் பேசி இருந்தாலும், தன்னுடைய தந்தை பற்றி அதிகம் பேசியது இல்லை.
முதல்முறையாக ஏ ஆர் ரகுமானிடம் , நீங்கள் ஏன் உங்கள் தந்தை பற்றி அதிகம் பேசியதில்லை என கேள்வி எழுப்பியதற்கு, தன்னுடைய விளக்கத்தை கொடுத்துள்ளார். அப்பா பற்றி ஏ.ஆர்.ரஹ்மான் பேசியுள்ளதாவது, "எனது அப்பாவின் மரணம், சகித்துக் கொள்ளவே முடியாத ஒரு இருள் போல இருந்தது. இறுதி காலத்தில் என் தந்தை அதிக சிரமங்களை அனுபவித்தார். அதனால் தான் அவரைப் பற்றி நான் அதிகம் பேசியதே இல்லை".
AR Rahman About Father and Mother
கருணை, தாராள மனப்பான்மை, ஊக்கம் தரும்படியான உத்வேகம், இவற்றையெல்லாம் எனது தந்தையிடம் இருந்துதான் கற்றுக் கொண்டேன் என ஏ ஆர் ரகுமான் இந்த பேட்டியில் பேசியுள்ளார்".
சில வருடங்களுக்கு முன்னர் இவர் கொடுத்த பேட்டி ஒன்றில், தன்னுடைய அப்பா இறந்த பின்னர் அம்மா அதிக கஷ்டங்களை எதிர்கொண்டதாகவும், அந்த நேரத்தில் தனது தாயார் இஸ்லாம் மதத்தால் கவரப்பட்டு குடும்பத்தோடு நாங்கள் இஸ்லாம் மதத்திற்கு மாறிய பின்னர், ஏ.ஆர்.ரகுமான் தன்னை முழு இஸ்லாமியராக மாற்றி கொள்ள சுமார் 10 வருடம் ஆனதாக தெரிவித்துள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் சாப்பிட மறந்தாலும், ஐந்து நேர தொழுகையை மட்டும் எங்கு சென்றாலும் தவற விடமாட்டார்.
'அண்ணா' சீரியல் நடிகருக்கு 'லப்பர் பந்து' பட நடிகையுடன் நடந்த நிச்சயதார்த்தம்! குவியும் வாழ்த்து!