MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • பிசினஸில் அம்பானி வாரிசுடன் கை கோர்த்த நயன்தாரா! பக்கா பிளானுடன் போட்ட புது டீலிங்?

பிசினஸில் அம்பானி வாரிசுடன் கை கோர்த்த நயன்தாரா! பக்கா பிளானுடன் போட்ட புது டீலிங்?

நடிகை நயன்தாரா தன்னுடைய 9 ஸ்கின் அழகு சாதன பொருட்களின் விற்பனைக்காக, அம்பானி மகள் இஷா அம்பானியுடன் புதிய பங்கு தாரராக மாறியுள்ள தகவல் தற்போது வெளியாகியுள்ளது. 

2 Min read
manimegalai a
Published : Oct 28 2024, 07:31 PM IST| Updated : Oct 28 2024, 07:35 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Nayanthara

Nayanthara

நடிகை நயன்தாரா நடிப்பில் மட்டுமின்றி, பல்வேறு பிஸினஸிலும் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் இவர் ஏற்கனவே ஸ்டார்ட் அப் நிறுவனம், லிப் பாம், ரியல் எஸ்டேட், திரைப்பட தயாரிப்பு, பெண்களுக்கான நாப்கின் நிறுவனம், ஆகியவற்றில் முதலீடு செய்துள்ள நிலையில்... கடந்த ஆண்டு 9 ஸ்கின் என்கிற அழகு பொருட்கள் தயாரிப்பிலும் களமிறங்கினார்.
 

25
Isha Ambani

Isha Ambani

தன்னுடைய 9Skin நிறுவனத்தின் மூலம் தயாரிக்கப்படும், Skintillate Booster Oil, Rejuvenate Night Cream, Eternelle Anti-Aging Serum, Illuminate Glow Serum மற்றும் Revive Day Cream உள்ளிட்ட பொருட்களை, மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் பிரமாண்ட நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்து, அதில் தன்னுடைய கணவருடன் கலந்து கொண்டு விற்பனைக்கு கொண்டு வந்தார். 

சகித்துக் கொள்ளவே முடியாத ஒரு இருள்; தந்தை பற்றி இதனால் தான் பேசவில்லை! ஏ.ஆர்.ரஹ்மான் ஓப்பன் டாக்!
 

35
Nayanthara 9Skin Product

Nayanthara 9Skin Product

சிங்கப்பூரை சேர்ந்த, தொழிலதிபர் ஒருவரும் இந்த நிறுவனத்தில் நயன்தாராவின் பங்குதாரராக இருந்தார். 9skin நிறுவனம் மூலம் விற்பனை செய்யப்படும் பொருட்கள், ரூபாய் 999 முதல் அதிகபட்சமாக ரூபாய்.1899 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் நயன்தாராவின் 9skin  நிறுவனம் மூலம் தயாரிக்கப்படும் ஸ்கின் கேர் பொருட்கள் மிகவும் கவனமுடன் தயாரிக்கப்படுவதாகுவும், சருமத்திற்கு பாதுகாப்பு கொடுக்க கூடிய இயற்கை மூலிகைகளின் எக்ஸ்ட்ராக்ஸ் தான் அதிகம் உள்ளதாக கூறப்பட்டது.

45
Nayanthara and Isha Ambani

Nayanthara and Isha Ambani

மிக குறுகிய காலத்திலேயே, 9skin அழகு சாதன பொருட்கள் நல்ல வரவேற்பை பெற்றது தொடர்ந்து... தன்னுடைய பிஸினஸை அடுத்த லெவலுக்கு கொண்டு செல்ல பக்கா பிளானுடன், அம்பானியின் வாரிசான இஷா அம்பானியுடன் கைகோர்த்துள்ளார் நயன்தாரா. 

அதாவது முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானியின் ரிலையன்ஸ் ரீடெய்ல் நிறுவனத்துடன் நயன்தாரா பங்குதாரராக மாறியுள்ளார். இஷா அம்பானி தலைமையிலான இயக்கும் (Tira ) தீராவுடன் இணைந்து பணியாற்றியுள்ளார் நயன்தாரா. எனவே இனி 9ஸ்கினின் தயாரிப்புகள் ரிலையன்ஸ் ரீடெய்ல்ஸ் இணையதளத்திலும் கிடைக்கும்.

தலைவர் மாடுலேஷனில் மாநாட்டை தெறிக்க விட்ட தளபதி! விஜய்க்கு இருந்த தைரியம் ஏன் ரஜினிக்கு இல்லை?

55
Tamil cinema latest news

Tamil cinema latest news

கூடுதலாக, 9Skin நிறுவனம் “Skinderella” Hydrogel Mask என்கிற பொருளை அறிமுகப்படுத்தி உள்ளது. இது Tira மூலம் மட்டுமே கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவைத் தாண்டி, மலேசியா, சிங்கப்பூர், கனடா, இங்கிலாந்து, இலங்கை மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகளில் TIRA இணையதளம் மூலம் 9ஸ்கின் பொருட்களை வாங்க முடியும்.

நயன்தாரா டிராவுடன் இணைவது குறித்து கூறுகையில்... “டிராவுடன் கூட்டு சேர்ந்து இந்திய சந்தையில் எங்கள் வரம்பை விரிவுபடுத்துவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். அனைத்து வகையான தோல் வகைகளுக்கும் சுத்தமான, பயனுள்ள மற்றும் நெறிமுறைகளோடு தோல் பராமரிப்பு தீர்வுகளை வழங்குவதே எங்கள் நோக்கம், டிரா மூலம் அதிகப்படியான மக்களை எங்களின் பொருள் கவரும் என பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
நயன்தாரா
Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved