MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • Nayanthara : கல்யாணத்துக்கு பின் முதன்முறையாக சிம்பு உடன் ஜோடி சேரும் நயன்தாரா? டைரக்ட் பண்ணப்போவது யார் தெரியுமா?

Nayanthara : கல்யாணத்துக்கு பின் முதன்முறையாக சிம்பு உடன் ஜோடி சேரும் நயன்தாரா? டைரக்ட் பண்ணப்போவது யார் தெரியுமா?

Simbu Pair With Nayanthara : அரசன் படத்தில் பிசியாக நடித்து வரும் சிம்பு, அடுத்ததாக நடிக்க உள்ள படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க உள்ளதாக தகவல் பரவி வருகிறது.

2 Min read
Author : Ganesh A
Published : Oct 31 2026, 08:43 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
சிம்புவின் அடுத்த படம்
Image Credit : Asianet News

சிம்புவின் அடுத்த படம்

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, பின்னர் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக உயர்ந்தவர் நடிகர் சிலம்பரசன். தனது தந்தை டி.ராஜேந்தர் இயக்கிய திரைப்படங்கள் மூலம் திரையுலகில் தடம் பதித்த சிம்பு, கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழ் சினிமாவில் கதாநாயகனாகப் பயணித்து வருகிறார்.

கடந்த 2025ஆம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசனுடன் இணைந்து சிலம்பரசன் நடித்த 'தக் லைஃப்' திரைப்படம் வெளியானது. மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் திரைக்கு வந்த இப்படம், எதிர்பார்த்த அளவிலான வரவேற்பைப் பெறவில்லை. இதைத் தொடர்ந்து சிம்புவின் அடுத்த திரைப்படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

தற்போது இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகிவரும் 'அரசன்' திரைப்படத்தில் சிலம்பரசன் நடித்து வருவதாகவும், அதன் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், அவரது அடுத்த திரைப்படம் மற்றும் அதில் இணையவுள்ள கதாநாயகி குறித்த சுவாரஸ்யமான தகவல்கள் கோலிவுட் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளன.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
டியூட் பட இயக்குநருடன் இணையும் சிம்பு!
Image Credit : X

டியூட் பட இயக்குநருடன் இணையும் சிம்பு!

'அரசன்' திரைப்படத்தைத் தொடர்ந்து, 'டியூட்' படத்தின் இயக்குநர் கீர்த்திஸ்வரன் இயக்கத்தில் உருவாகும் புதிய திரைப்படத்தில் சிலம்பரசன் நடிக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இப்படம் முழுக்க முழுக்க அதிரடி ஆக்ஷன் கதைக்களத்தில் உருவாகவுள்ளதாகவும், அதற்கான ஆரம்பக்கட்ட பணிகள் ஏற்கெனவே தொடங்கிவிட்டதாகவும் கூறப்படுகிறது.

குறிப்பாக, இதுவரை ரசிகர்கள் பார்த்திராத வித்தியாசமான தோற்றத்தில், தர லோக்கலான அதிரடி போலீஸ் அதிகாரியாகச் சிலம்பரசன் நடிக்கவுள்ளதாக சினிமா வட்டாரங்களில் தகவல் பரவி வருகிறது. இந்தப் படத்திற்கு இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைக்கவுள்ளதாகவும், படத்திற்கான ஒரு பாடல் ஏற்கெனவே தயாராகிவிட்டதாகவும் சொல்லப்படுகிறது. இருப்பினும், படக்குழுவிடமிருந்து இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.

34
சிம்புவுக்கு ஜோடியாக நயன்தாரா?
Image Credit : X

சிம்புவுக்கு ஜோடியாக நயன்தாரா?

இந்தப் புதிய திரைப்படம் குறித்த தகவல்கள் ஒருபுறம் வெளியாகிவரும் நிலையில், இதில் சிலம்பரசனுக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடிக்கவுள்ளதாகக் கூறப்படும் தகவல் ரசிகர்கள் மத்தியில் கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் சினிமாவில் அதிகம் பேசப்பட்ட ரீல் ஜோடிகளில் சிம்பு - நயன்தாரா கூட்டணியும் ஒன்று. இவர்கள் இருவரும் இணைந்து நடித்த திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றிருந்தன.

குறிப்பாக, கடந்த 2016ஆம் ஆண்டு வெளியான 'இது நம்ம ஆளு' திரைப்படத்தில் இருவரும் கடைசியாக ஜோடியாக நடித்திருந்தனர். பாண்டிராஜ் இயக்கிய அந்தப் படத்தில் சிம்பு - நயன்தாராவின் கெமிஸ்ட்ரி ரசிகர்களால் ரசிக்கப்பட்டது. இந்நிலையில், கீர்த்திஸ்வரன் இயக்கவுள்ள புதிய திரைப்படத்தில் நயன்தாரா நடிப்பது உறுதியானால், சுமார் 10 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தப் பிரபலமான திரை ஜோடி மீண்டும் ஒன்றிணையும் வாய்ப்பு உருவாகும்.

44
அஸ்வத் மாரிமுத்து படத்திற்கு முன்பே புதிய கூட்டணி?
Image Credit : X

அஸ்வத் மாரிமுத்து படத்திற்கு முன்பே புதிய கூட்டணி?

முன்னதாக, 'டிராகன்' பட இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் சிலம்பரசன் நடிக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியிருந்தன. ஆனால், தற்போது அஸ்வத் மாரிமுத்து ரஜினிகாந்தின் 'தர்மன்' திரைப்படம் தொடர்பான பணிகளில் கவனம் செலுத்தி வருவதாகக் கூறப்படுகிறது. அந்தப் படத்தின் பணிகளை முடித்த பிறகே சிலம்பரசனுடன் அவர் இணைய வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.

இதற்கிடையில் ஏற்படும் கால இடைவெளியைப் பயன்படுத்தி, கீர்த்திஸ்வரன் இயக்கத்தில் உருவாகும் அதிரடி திரைப்படத்தில் சிம்பு நடிக்கத் திட்டமிட்டுள்ளதாகக் கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதன்படி, வெற்றிமாறனின் 'அரசன்' படப்பிடிப்பை முடித்த கையோடு கீர்த்திஸ்வரன் இயக்கும் புதிய படத்தில் சிலம்பரசன் இணையக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
சிலம்பரசன்
நயன்தாரா
 
3rd TEST • SA vs AUS
Stumps
SASA
329 & 387
AUSAUS
429
Day 4
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Enemy Of The Smuggler Review : எனிமி ஆஃப் தி ஸ்மக்ளர் மிரட்டலா? சொதப்பலா? முழு விமர்சனம் இதோ
Recommended image2
Akshitha : பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறுகிறாரா அக்‌ஷிதா? டாஸ்கின் போது திடீரென மயங்கி விழுந்ததால் பரபரப்பு
Recommended image3
Food: அனிருத் இளமையாக இருப்பதற்கு இதுதான் காரணமா? சைவ உணவின் ரகசியம் என்ன? 10 வயது குறைவாக தோற்றமளிக்க உதவும் உணவுகள்.!
Related Stories
Recommended image1
Arasan : வெற்றிமாறன் பிறந்தநாள் அதுவுமா அரசன் படம் பற்றி புது குண்டை தூக்கிப்போட்ட சிம்பு - ஷாக் ஆன ரசிகர்கள்
Recommended image2
சூப்பர் ஸ்டார் - லேடி சூப்பர் ஸ்டார் மீண்டும் கூட்டணி? ரஜினியுடன் கைகோர்க்கும் நயன்தாரா!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved