MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • வேட்டையனை காலி செய்ய இந்த வாரம் தியேட்டர் & ஓடிடியில் ரிலீஸ் ஆகும் மூவீஸ் லிஸ்ட் இதோ!!

வேட்டையனை காலி செய்ய இந்த வாரம் தியேட்டர் & ஓடிடியில் ரிலீஸ் ஆகும் மூவீஸ் லிஸ்ட் இதோ!!

Theatre and OTT release Movies : ரஜினிகாந்த் நடித்த வேட்டையன் திரைப்படம் இந்த வாரம் ரிலீஸ் ஆக உள்ள நிலையில் அதற்கு போட்டியாக தியேட்டர் மற்றும் ஓடிடியில் ரிலீஸ் ஆகும் படங்களின் பட்டியலை பார்க்கலாம்.

2 Min read
Author : Ganesh A
| Updated : Oct 08 2024, 11:39 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Vettaiyan

Vettaiyan

தியேட்டர் ரிலீஸ்

கோலிவுட்டில் கடந்த வாரம் சிறு பட்ஜெட் படங்கள் வரிசைகட்டி ரிலீஸ் ஆன நிலையில், இந்த வாரம் பிரம்மாண்ட படங்கள் ரிலீசுக்காக காத்திருக்கின்றன. அது என்னென்ன படங்கள் என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

வேட்டையன்

ரஜினிகாந்த் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி இருக்கும் வேட்டையன் திரைப்படம் இந்த வாரம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது. இப்படத்தை ஜெய் பீம் படத்தின் இயக்குனர் த.செ.ஞானவேல் இயக்கி உள்ளார். இப்படத்தில் ரஜினிகாந்த் உடன் பகத் பாசில், அமிதாப் பச்சன், ரித்திகா சிங், துஷாரா விஜயன் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. அனிருத் இப்படத்திற்கு இசையமைத்து உள்ளார். லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் வருகிற அக்டோபர் 10-ந் தேதி உலகமெங்கும் பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆக உள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
Black Movie

Black Movie

பிளாக்

ரஜினியின் வேட்டையன் படத்துக்கு போட்டியாக ஜீவா நடித்துள்ள பிளாக் திரைப்படம் ரிலீஸ் ஆக உள்ளது. இது கோஹெரன்ஸ் என்கிற ஹாலிவுட் படத்தின் ரீமேக் ஆகும். இப்படத்தில் நடிகர் ஜீவாவுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்திருக்கிறார். இப்படத்தை பாலசுப்ரமணி இயக்கி உள்ளார். இப்படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைத்து உள்ளார். இப்படத்தின் படத்தொகுப்பு பணிகளை பிலோமின் ராஜ் மேற்கொண்டு இருக்கிறார். இப்படம் வருகிற அக்டோபர் 11-ந் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது.

இதையும் படியுங்கள்... இருக்கு; கண்டிப்பா செம Fun இருக்கு; நெல்சன் தயாரிப்பில் கவின் அசத்தும் Bloody Beggar - டீசர் இதோ!

35
Vaazhai

Vaazhai

ஓடிடியில் ரிலீசாகும் தமிழ் படங்கள்

வாழை

மாரி செல்வராஜ் இயக்கத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் திரைக்கு வந்து அமோக வரவேற்பை பெற்ற திரைப்படம் வாழை. இப்படத்தில் கலையரசன், திவ்யா துரைசாமி, நிகிலா விமல் ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். தன் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவத்தை மையமாக வைத்து வாழை திரைப்படம் உருவாகி இருந்தது. தியேட்டரில் வசூல் வேட்டை நடத்திய வாழை திரைப்படம் தற்போது ஓடிடிக்கு வந்துள்ளது. இப்படம் வருகிற அக்டோபர் 11-ந் தேதி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆக உள்ளது.

45
Andhagan

Andhagan

அந்தகன்

பிரசாந்தின் கம்பேக் திரைப்படமான அந்தகனும் இந்த வாரம் ஓடிடியில் ரிலீஸ் ஆக உள்ளது. இப்படத்தை தியாகராஜன் இயக்கி உள்ளார். இப்படத்தில் பிரசாந்த் உடன் சிம்ரன், பிரியா ஆனந்த், கார்த்திக், ஊர்வசி, கே.எஸ்.ரவிக்குமார், வனிதா என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது. இது அந்தாதூண் என்கிற பாலிவுட் படத்தின் ரீமேக் ஆகும். சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைத்து இருந்தார். இப்படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆக உள்ளது.

55
Stree 2

Stree 2

ஓடிடியில் ரிலீஸ் ஆகும் மற்ற மொழி படங்கள்

அமலா பால் நடிப்பில் மலையாளத்தில் வெளிவந்த லெவல் கிராஸ் திரைப்படம் ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் தமிழ் டப்பிங் உடன் அக்டோபர் 11-ந் தேதி ரிலீஸ் ஆகிறது. சூரரைப் போற்று படத்தின் இந்தி ரீமேக் ஆன சர்பிரா ஹாட்ஸ்டாரில் அக்டோபர் 11-ல் ரிலீஸ் ஆகிறது. இதுதவிர பாலிவுட்டில் கம்மி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு பாக்ஸ் ஆபிஸில் 850 கோடிக்கு மேல் வசூலித்த ஸ்ட்ரீ 2 திரைப்படம் அக்டோபர் 10ந் தேதி தமிழ் டப்பிங்கில் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆகிறது.

இதையும் படியுங்கள்... சாச்சனாவை தொடர்ந்து பிக்பாஸில் அடுத்த எலிமினேஷன் - சிக்கியது யார்; யார் தெரியுமா?

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
 
3rd TEST • SA vs AUS
Stumps
SASA
329 & 387
AUSAUS
429
Day 4
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Enemy Of The Smuggler Review : எனிமி ஆஃப் தி ஸ்மக்ளர் மிரட்டலா? சொதப்பலா? முழு விமர்சனம் இதோ
Recommended image2
Akshitha : பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறுகிறாரா அக்‌ஷிதா? டாஸ்கின் போது திடீரென மயங்கி விழுந்ததால் பரபரப்பு
Recommended image3
Food: அனிருத் இளமையாக இருப்பதற்கு இதுதான் காரணமா? சைவ உணவின் ரகசியம் என்ன? 10 வயது குறைவாக தோற்றமளிக்க உதவும் உணவுகள்.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved