MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • கோட் பட சாதனையை சல்லி சல்லியாய் நொறுக்கிய வேட்டையன் - 2ம் நாள் வசூல் நிலவரம் இதோ

கோட் பட சாதனையை சல்லி சல்லியாய் நொறுக்கிய வேட்டையன் - 2ம் நாள் வசூல் நிலவரம் இதோ

Vettaiyan Box Office Collection : த.செ.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் ஹீரோவாக நடித்து ரிலீஸ் ஆகி இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் இரண்டாம் நாள் வசூல் நிலவரம் பற்றி பார்க்கலாம்.

2 Min read
Author : Ganesh A
Published : Oct 12 2024, 09:01 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
GOAT vs Vettaiyan

GOAT vs Vettaiyan

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி உள்ள படம் வேட்டையன். இப்படத்தை த.செ.ஞானவேல் இயக்கி உள்ளார். இவர் இதற்கு முன்னர் ஜெய் பீம், கூட்டத்தில் ஒருவன் போன்ற படங்களை இயக்கி இருக்கிறார். வேட்டையன் படத்தை லைகா நிறுவனம் சார்பில் சுபாஸ்கரன் தயாரித்து உள்ளார். இப்படத்திற்கு சென்சேஷனல் மியூசிக் டைரக்டரான அனிருத் இசையமைத்து உள்ளார். வேட்டையன் திரைப்படம் கடந்த அக்டோபர் 10ந் தேதி தியேட்டர்களில் ரிலீஸ் ஆனது.

25
Vettaiyan Movie

Vettaiyan Movie

வேட்டையன் திரைப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடித்துள்ளார். மேலும் அமிதாப் பச்சன், பகத் பாசில், ரித்திகா சிங், ரக்‌ஷன், துஷாரா விஜயன் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே வேட்டையன் படத்தில் நடித்துள்ளது. இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பான் இந்தியா படமாக ரிலீஸ் ஆகி இருக்கிறது. பொதுவாக ரஜினி படம் என்றாலே பாக்ஸ் ஆபிஸில் பட்டைய கிளப்பும். அப்படி வேட்டையன் படம் வசூலை வாரிக்குவித்து வருகிறது.

இதையும் படியுங்கள்... Video: 'வேட்டையன்' படத்தில் மாஸ் காட்டினாரா தலைவர்? - ரசிகர்களின் கருத்து!

35
Vettaiyan Rajinikanth

Vettaiyan Rajinikanth

அந்த வகையில் முதல் நாளில் இப்படம் உலகளவில் 77.90 கோடி வசூலித்து இருந்தது. இதில் தமிழ்நாட்டில் மட்டும் ரூ.25.65 கோடி வசூலித்து இருந்த இப்படம். ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் 4.89 கோடியும், கர்நாடகாவில் 7.90 கோடியும், கேரளாவில் 4.72 கோடியும், இதர மாநிலங்களில் 2.34 கோடியும், வெளிநாடுகளில் 32.40 கோடியும் வசூலித்து ஒட்டுமொத்தமாக முதல் நாளில் 77.90 கோடி கலெக்‌ஷன் அள்ளி இருந்தது. 

45
Vettaiyan Breaks GOAT Movie Record

Vettaiyan Breaks GOAT Movie Record

இரண்டாம் நாளில் உலகளவில் ரூ.100 கோடி என்கிற இமாலய வசூலை கடந்துள்ள வேட்டையன் படம் மற்றுமொரு மாஸ் சாதனையையும் படைத்துள்ளது. அதன்படி புக் மை ஷோவில் இரண்டாம் நாளில் அதிக டிக்கெட் விற்பனையான படங்கள் பட்டியலில் கோட் பட சாதனையை வேட்டையன் முறியடித்து இருக்கிறது. கோட் படத்திற்கு 2ம் நாளில் 3 லட்சத்து 94 ஆயிரம் டிக்கெட் விற்பனை ஆகி இருந்த நிலையில், வேட்டையன் படத்திற்கு 35 ஆயிரம் டிக்கெட் கூடுதலாக விற்பனை ஆகி உள்ளது. அதாவது 4 லட்சத்து 29 ஆயிரம் டிக்கெட் விற்பனை செய்து கோட் பட சாதனையை சல்லி சல்லியாக நொறுக்கி இருக்கிறது வேட்டையன்.

55
Vettaiyan Box Office Collection

Vettaiyan Box Office Collection

முதல் நாளில் ரூ.77.90 கோடி வசூலித்திருந்த வேட்டையன் திரைப்படம் இரண்டாம் நாளான நேற்று ஆயுத பூஜை விடுமுறை தினம் என்பதால் தொடர்ந்து வசூல் வேட்டையாடி இருக்கிறது. இப்படம் இரண்டாம் நாளில் ரூ.45.26 கோடி வசூலித்து இதுவரை உலகளவில் ரூ.123.16 கோடி வசூலித்தி இருக்கிறது. இன்றும் நாளையும் விடுமுறை தினம் என்பதால் வேட்டையன் பட வசூல் மேலும் ஜெட் வேகத்தில் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்... Vettaiyan Review : ரஜினி வச்ச குறி தப்பியதா? தட்டி தூக்கியதா? வேட்டையன் படத்தின் விமர்சனம் இதோ

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ரஜினிகாந்த்

Latest Videos
Recommended Stories
Recommended image1
ஒரே நாளில் 2 கல்யாணம்! ராஷ்மிகா - விஜய் தேவரகொண்டாவின் 'மெகா' திருமண ஏற்பாடுகள் - முழு விவரம்
Recommended image2
மமிதா பைஜூ முதல் ஸ்ரீலீலா வரை: 2K ஹிட்ஸ்களின் மனதை கொள்ளை கொண்ட டாப் ஹீரோயின்கள்!
Recommended image3
2 வருடங்களாக ஒரு தமிழ் படம் கூட ரிலீஸ் இல்ல; மார்க்கெட்டை இழந்தாரா நயன்தாரா: இளம் ஹீரோயின்களை தேடும் தமிழ் சினிமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved