வெற்றிமாறன் இயக்கும் கேஜிஎப் படம்! ஆனா ஹீரோ யாஷ் இல்லை; யார் தெரியுமா?
கேஜிஎப்பில் நடந்த சம்பவத்தை மையமாக வைத்து இயக்குனர் வெற்றிமாறன் தன்னுடைய அடுத்த படத்தை இயக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
Vetrimaaran
தமிழ் சினிமாவில் சக்சஸ்புல் இயக்குனராக வலம் வருபவர் வெற்றிமாறன். அவர் இயக்கத்தில் அண்மையில் வெளியான விடுதலை 2 திரைப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது. இப்படத்தை அடுத்து வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் திரைப்படம் உருவாக உள்ளது. அப்படத்தில் சூர்யா நாயகனாக நடிக்க உள்ளார். அப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்க இருக்கிறார். இப்படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்க உள்ளார்.
Director Vetrimaaran
வாடிவாசல் படத்திற்கான அனிமேஷன் பணிகள் லண்டனில் நடைபெற்று வருகிறது. சி.சு.செல்லப்பா எழுதிய வாடிவாசல் என்கிற நாவலை தழுவி தான் இப்படம் உருவாக உள்ளது. இப்படத்திற்கான அறிவிப்பு கடந்த 2020-ம் ஆண்டே வெளிவந்தாலும் அதற்கான ஷூட்டிங் இதுவரை தொடங்கப்படவில்லை. நடிகர் சூர்யா தற்போது ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் உருவாகி வரும் பேட்டைக்காரன் திரைப்படத்தில் பிசியாக நடித்து வருவதால், அப்படத்தை முடித்த பின்னரே அவர் வாடிவாசல் பட ஷூட்டிங்கில் பங்கேற்பார் என கூறப்படுகிறது.
இதையும் படியுங்கள்... வாடிவாசலில் சூர்யாவுக்கு ஜோடி இவரா? பொன்னியின் செல்வன் நாயகிக்கு அடித்த ஜாக்பாட்!
Dhanush, vetrimaaran
இதனால் தற்போது மற்றுமொரு மாஸ் படத்தை இயக்க இயக்குனர் வெற்றிமாறன் தயாராகி வருவதாக கூறப்படுகிறது. கேஜிஎப்-பை மையமாக வைத்து வெற்றிமாறன் அத்திரப்படத்தை எடுக்க உள்ளார். இதற்கான ஸ்கிரிப்ட் தயார் செய்யும் வேலைகளையும் அவர் செய்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இப்படத்தில் நடிகர் தனுஷ் ஹீரோவாக நடிக்க உள்ளதாகவும் விடுதலை படத்தை தயாரித்த எல்ரெட் குமார் இப்படத்தை தயாரிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.
vetrimaaran Next Movie
வெற்றிமாறன் இயக்கத்தில் இதற்கு முன்னர் நடிகர் தனுஷ் நடித்த பொல்லாதவன், ஆடுகளம், வட சென்னை, அசுரன் ஆகிய நான்கு திரைப்படங்களும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்ததால், அவர்கள் இருவரும் சுமார் 6 ஆண்டு இடைவெளிக்கு பின்னர் மீண்டும் இணைய உள்ள தகவல் தமிழ் சினிமா வட்டாரத்தில் ஹாட் டாப்பிக் ஆக பேசப்பட்டு வருகிறது. இதுவரை கேஜிஎப் கதைக்களத்தில் வந்த படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதால் இந்த படமும் கவனம் ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படியுங்கள்... போலீஸ் எப்படி பண்ணையார் ஆனாரு? விடுதலை 2-வில் இப்படி ஒரு லாஜிக் மிஸ்டேக்கா?