MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • போலீஸ் எப்படி பண்ணையார் ஆனாரு? விடுதலை 2-வில் இப்படி ஒரு லாஜிக் மிஸ்டேக்கா?

போலீஸ் எப்படி பண்ணையார் ஆனாரு? விடுதலை 2-வில் இப்படி ஒரு லாஜிக் மிஸ்டேக்கா?

Viduthalai 2 Movie Logic Mistake : வெற்றிமாறன் இயக்கிய விடுதலை 2 படத்தில் பலரும் கவனிக்கத் தவறிய லாஜிக் மிஸ்டேக் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

2 Min read
Author : Ganesh A
Published : Dec 22 2024, 04:17 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Logic Mistake in Viduthalai 2

Logic Mistake in Viduthalai 2

வெற்றிமாறன் இயக்கிய மாஸ்டர் பீஸ் படங்களில் விடுதலையும் ஒன்று. அப்படம் இரண்டு பாகங்களாக வெளிவந்துள்ளது. இதன் முதல் பாகம் கடந்த ஆண்டு ரிலீஸ் ஆன நிலையில், அதன் இரண்டாம் பாகம் கடந்த வாரம் திரைக்கு வந்தது. விடுதலை முதல் பாகம் அளவுக்கு அதன் இரண்டாம் பாகம் இல்லை என்பது தான் பெரும்பாலானோரின் கருத்தாக உள்ளது. இந்த படத்தில் உள்ள லாஜிக் மிஸ்டேக் ஒன்றும் தற்போது சோசியல் மீடியா மூலம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
Viduthalai 2 Vijay Sethupathi

Viduthalai 2 Vijay Sethupathi

விடுதலை படத்தில் சூரி, விஜய் சேதுபதி ஆகியோர் பிரதான கதாபாத்திரமாக இருந்தாலும். இந்த இரண்டு படங்களிலுமே ஏராளமான குணச்சித்திர கதாபாத்திரங்கள் உள்ளன. கெளதம் மேனன் தொடங்கி ராஜீவ் மேனன், சேத்தன், கென் கருணாஸ், இயக்குனர் தமிழ், இளவரசு என அந்த லிஸ்ட் நீண்டு கொண்டே செல்லும். அப்படி விடுதலை படத்தில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்திருந்த அப்படத்தின் ஒளிப்பதிவாளர் வேல்ராஜை இயக்குனர் வெற்றிமாறன் இரண்டு வெவ்வேறு விதமான கேரக்டர்களில் நடிக்க வைத்துள்ளார்.

35
Viduthalai part 2

Viduthalai part 2

விடுதலை படத்தின் முதல் பாகத்தில் போலீஸாக நடித்திருப்பார் வேல்ராஜ். கெளதம் மேனனுடன் பயணிக்கும் கதாபாத்திரமாக வேல்ராஜின் கேரக்டர் இடம்பெற்றிருக்கும். ஆனால் விடுதலை 2ம் பாகத்தில் அதே வேல்ராஜ், பண்ணையாராக நடித்திருப்பார். ஒரே நபரை இரண்டு வெவ்வேறு கேரக்டர்களில் நடிக்க வைத்திருப்பதை கண்டுபிடித்த நெட்டிசன்கள் அதை கலாய்த்து சமூக வலைதளங்களில் பதிவுகளை போட்ட வண்ணம் உள்ளனர்.

இதையும் படியுங்கள்... விடுதலை 2 கிளைமாக்ஸ்: 20 நிமிட காட்சிக்காக 100 நாட்களை வேஸ்ட் பண்ணிய வெற்றிமாறன்!

45
viduthalai 2 Vetrimaaran

viduthalai 2 Vetrimaaran

அதில் ஒருவர் வெற்றிமாறனுக்கு முட்டுக் கொடுப்போர் சங்கம் என குறிப்பிட்டு, போலீஸ் வேல்ராஜ், எப்படி பண்ணையார் ஆனார் என்பதற்கு ஒரு கதையை உருட்டி இருக்கிறார். அதில் அவர் பதிவிட்டிருப்பதாவது : “இரண்டாம் பாகத்துல வர்ற வேல்ராஜ் பண்ணையார் இருக்காரு இல்ல; அவருடைய பையன் தான் முதல் பாக போலீஸ் வேல்ராஜ். பண்ணையார் தன் கிட்ட வேலை செஞ்ச பெண்களில் ஒரு பெண்ணை பதம் பார்க்க; அந்தப் பெண்ணுக்கு பிறந்தது தான் போலீஸ் வேல்ராஜ்.

பண்ணையார் வேல்ராஜ், வேலைக்காரி கர்ப்பமாக இருப்பதை அறிந்து அவளால் சொத்து பத்தில் பெரிய பிரச்சினையாகும் என்று கருதி அவரை ஊரை விட்டு விரட்டிவிட்டார். போலீஸ் வேல்ராஜ் தனது அம்மா, பண்ணையாரால் விரட்டியடிக்கப்பட்டு சென்னையில் வாழ்ந்து தன்னை வளர்த்த கதையை பிறகுதான் தெரிந்து கொள்கிறார்.

55
velraj

velraj

அதன் பிறகு தன்னுடைய அம்மாவிடம் தான் பிறந்த கதையை கேட்ட போலீஸ் வேல்ராஜ். பண்ணையாரின் அடாவடித்தனங்களை எதிர்க்கவும், அவர் கொட்டத்தை அடக்கவும், பண்ணையார் கூலித் தொழிலாளிகளிடம் காட்டும் வர்க்கபேதங்களை ஒடுக்கவும், சமூக நீதி காக்கவும், முதல் பாக போலீஸ் வேல்ராஜ் போலீஸ் வேலையில் சேர்ந்து, சமூக நீதிக்காக அராஜகத்திற்கு எதிராக போராடினாலும்,  சிஸ்டம் அவருக்கு ஒத்துழைக்கவில்லை என்பதை லேட் ஆக புரிந்து கொள்கிறார். ஆனாலும் முதல் பாக போலீஸ் வேல்ராஜ் தனது பண்ணையாரப்பாவை தனது அப்பா தான் அவர் என்று பொது வெளியில் சொல்லிக் கொள்ள அவருக்கு விருப்பமில்லை” அதனால் தான் வேல்ராஜ் முதல் பாகத்தில் போலீஸாகவும், இரண்டாம் பாகத்தில் பண்ணையாராகவும் காட்டப்பட்டு இருக்கிறார் என்று சொல்லி உருட்டி இருக்கிறார்கள். வெற்றிமாறனுக்கு முட்டுக் கொடுப்போர் சங்கத்தின் இந்த பதிவு வைரலாகி வருகிறது.

இதையும் படியுங்கள்... ரஜினி படத்தின் லைஃப் டைம் வசூல் சாதனையை 2 நாளில் காலி பண்ணிய விடுதலை 2!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
வெற்றிமாறன்
 
3rd TEST • SA vs AUS
Stumps
SASA
329
AUSAUS
(90.0 ov)330/4
Day 2
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
NZNZ
Fri, 30 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›

Recommended Stories
Recommended image1
Actor Dhanush Political Entry: 234 தொகுதிகளிலும்... நடிகர் தனுஷ் அடுத்த திட்டம்.! அரசியலை நோக்கிய சைலன்ட் மூவ்?
Recommended image2
Ramayana First Review : பிரம்மாண்டத்தின் உச்சமா?... வெறும் பில்டப்பா? ராமாயணா முதல் விமர்சனம் வந்தாச்சு..!
Recommended image3
6 மணி காட்சி முதல் 100 ரூபாய் டிக்கெட் வரை அரசுக்கு பறந்த 13 கோரிக்கைகள்! அனுமதி கொடுப்பாரா முதல்வர்? காத்திருக்கும் திரையுலகம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved