விடுதலை 2 கிளைமாக்ஸ்: 20 நிமிட காட்சிக்காக 100 நாட்களை வேஸ்ட் பண்ணிய வெற்றிமாறன்!
Viduthalai 2 Movie : விடுதலை 2 படத்தின் கிளைமாக்ஸ் காட்சியை படமாக்க 100 நாட்களை இயக்குனர் வெற்றிமாறன் வேஸ்ட் பண்ணியதாக தகவல் வெளியாகி உள்ளது.
Vijay Sethupathi
தமிழ் சினிமாவில் தோல்வியே சந்திக்காத இயக்குனர் என்றால் அது வெற்றிமாறன் தான். பொல்லாதவன் படத்தின் தொடங்கிய அவரின் வெற்றிப்பயணம், ஆடுகளம், விசாரணை, வடசென்னை, அசுரன், பாவக் கதைகள், விடுதலை என நீண்டு கொண்டே செல்கிறது. இந்த லிஸ்ட்டில் லேட்டஸ்டாக இணைந்துள்ள படம் தான் விடுதலை 2. இப்படத்தில் விஜய் சேதுபதி, சூரி, சேத்தன், தமிழ், கென் கருணாஸ், மஞ்சு வாரியர் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.
Soori
விடுதலை படம் முழுக்க சூரியை மையமாக வைத்து எடுத்த வெற்றிமாறன், அதன் இரண்டாம் பாகத்தை முழுக்க முழுக்க பெருமாள் வாத்தியாராக நடித்துள்ள விஜய் சேதுபதியின் கேரக்டரை முன்னிருத்தி எடுத்திருக்கிறார். முதலில் இப்படத்தில் 7 நாள் நடிக்க வருமாறு தான் வெற்றிமாறன் விஜய் சேதுபதியை அழைத்தாராம். போகப் போக பெருமாள் வாத்தியாரின் கேரக்டரை விரிவுபடுத்த முடிவெடுத்து சுமார் 3 வருடங்கள் விஜய் சேதுபதி உடன் இப்படத்தில் பணியாற்றி இருக்கிறார் வெற்றி.
இதையும் படியுங்கள்... ரஜினி படத்தின் லைஃப் டைம் வசூல் சாதனையை 2 நாளில் காலி பண்ணிய விடுதலை 2!
Viduthalai Part 2
வெற்றிமாறன் சிறந்த படைப்பாளி என்பது அனைவரும் தெரிந்ததே. எந்த ஒரு படமாக இருந்தாலும் அதற்காக அவர் மெனக்கெடும் விதம் பலருக்கும் பாடமாக இருக்கும். குறிப்பாக வட சென்னை படத்தில் எம்ஜிஆர் காலமாகிவிட்டார் என்று ரேடியோவில் ஒரு குரல் ஒலிக்கும் காட்சி இடம்பெற்றிருக்கும். இதற்காக எம்ஜிஆர் இறந்தபோது அதை வானொலியில் அறிவித்த நபரை தேடி கண்டுபிடித்து அவரையே அப்படத்திலும் பேச வைத்திருக்கிறார் வெற்றி. இப்படி ஒரு சின்ன சீன் ஆக இருந்தாலும் அதற்கு அவர் தன் 100 சதவீத உழைப்பை கொடுப்பார்.
Viduthalai 2 Climax
அந்த வகையில் விடுதலை 2 படத்திலும் பல சாவல்களை சந்தித்திருக்கிறார் வெற்றி. ஆனால் இம்முறை அவருக்கு தேவையானதை இயற்கையிடம் இருந்து எதிர்பார்த்தது தான் அவர் செய்த தவறு. விடுதலை 2 படத்தின் கிளைமாக்ஸ் காட்சி முழுக்க ரியலான பனிமூட்டத்திற்கு நடுவே படமாக்க ஆசைப்பட்டாராம் வெற்றிமாறன். இந்த பனி மூட்டத்திற்காக சுமார் 100 நாட்கள் காத்திருந்தாராம். ஆனால் அவரது காத்திருப்புக்கு இயற்கை எந்தவித பலனையும் தரவில்லையாம்.
Viduthalai Movie Director Vetrimaaran
இதனால் இறுதியாக வேறுவழியின்றி அந்த காட்சிகளில் பனிமூட்டத்தை கொண்டுவர சிஜி பயன்படுத்தினாராம். 20 நிமிட காட்சிக்காக அவர் 100 நாட்களை வேஸ்ட் பண்ணியுள்ள தகவல் பலரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது. விடுதலை 2 படம் சற்று தாமதம் ஆனதற்கு அதுவும் ஒரு காரணமாக கூறப்படுகிறது. இதனால் தான் விடுதலை படமே தனக்கு மிகப்பெரிய பாடம் என்று பல மேடைகளில் சொல்லி வருகிறார் வெற்றிமாறன்.
இதையும் படியுங்கள்... விடுதலை 2 படத்தை மறைமுகமாக தாக்கிய குணா இயக்குநர் – பார்ட் 2 படமே எடுக்க கூடாது: சந்தான பாரதி!