MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • 10 லட்சம் சம்பள பாக்கி; ஆனால் அதில் பைசா வாங்காமல் நடித்துக்கொடுத்த ரஜினி - ஏன் தெரியுமா?

10 லட்சம் சம்பள பாக்கி; ஆனால் அதில் பைசா வாங்காமல் நடித்துக்கொடுத்த ரஜினி - ஏன் தெரியுமா?

Rajinikanth : ஒரு திரைப்படத்தில் நடித்ததற்காக, தனக்கு வரவேண்டிய சம்பள பாக்கிய கூட வாங்காமல் விட்டிருக்கிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

2 Min read
Author : Ansgar R
| Updated : Dec 03 2024, 06:22 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Rajini

Rajini

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.. தமிழ் சினிமாவை பொருத்தவரை கடந்த 49 ஆண்டுகளாக முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் ஒரு மெகா ஹிட் நடிகர் ஆவார். கடந்த 1975 ஆம் ஆண்டு இயக்குனர் சிகரம் பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான "அபூர்வராகங்கள்" என்கின்ற திரைப்படத்தின் மூலம் தான் இவர் தன்னுடைய கலை பயணத்தை தொடங்கினார். தனக்கென தனியே ஒரு உடல் மொழி, ஸ்டைல் உள்ளிட்டவற்றை உருவாக்கிக் கொண்டு. கருப்பாக இருப்பவர்களும் சினிமாவில் சூப்பர் ஸ்டார் ஆக மாறலாம் என்பதை நிரூபித்த முதல் தென்னக நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்றால் அது மிகையல்ல.

விஜய் செய்தது தவறு; மன்னர் காலத்தில் கூட இப்படி நடக்கவில்லை - கொதிக்கும் பிரபலம்!

24
Rajinikanth

Rajinikanth

கிட்டத்தட்ட மூன்று தலைமுறை நடிகர்களோடு இணைந்து இவர் நடித்து வந்தாலும், இன்று வெளியாகும் இளம் நடிகர்களுடைய திரைப்படத்திற்கு போட்டியாக அமைகிறது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் திரைப்படம் என்றால் அது சற்று மிகையல்ல. 74 வயதிலும் துடிப்பான நடிப்பை வெளிப்படுத்தும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை பலரும் பாராட்டுவதற்கு காரணம், அவர் நடிப்பு என்பதை தாண்டி அவரிடம் உள்ள பல நல்ல குணாதிசயங்கள் தான். அந்த நல்ல குணாதிசியங்கள் குறித்து அண்மையில் பிரபல தயாரிப்பாளர் ஒருவர் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

34
Darbar

Darbar

1983 ஆம் ஆண்டு ஜெகநாதன் என்பவருடைய இயக்கத்தில் வெளியான திரைப்படம் தான் "தங்கமகன்". இந்த திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஹீரோவாக நடித்து அசத்தியிருப்பார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் கலை வரலாற்றில் வசூல் ரீதியாக பெரிய அளவில் சாதனை படைத்த பல படங்களில் தங்கமகன் திரைப்படமும் ஒன்று. ஆனால் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த பொழுது சுமார் இரண்டு மாத காலம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு பெரிய அளவில் உடல் நல குறைபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் தங்கமகன் திரைப்படத்தின் ஷூட்டிங் சுமார் ஒன்றரை மாதங்களுக்கு மேல் பாதிக்கப்பட்டது.

44
Thanga Magan

Thanga Magan

உடல் நலம் தேறிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மீண்டும் படபிடிப்பில் இணைந்து தங்கமகன் திரைப்படத்தை சிறப்பாக நடித்து முடித்து கொடுத்திருக்கிறார். படமும் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்ற நிலையில், அந்த தயாரிப்பு நிறுவனம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு கொடுக்க வேண்டிய சுமார் 10 லட்சம் ரூபாய் சம்பள பாக்கியை கொடுக்கச் சென்றுள்ளனர். அப்போது பொழுது, தான் இரண்டு மாத காலம் படப்பிடிப்பிற்கு வராததால் தயாரிப்பாளருக்கு பெரிய அளவில் நஷ்டம் ஏற்பட்டிருக்கும். ஆகையால் இந்த 10 லட்சம் ரூபாயை அவரிடமே திருப்பிக் கொடுத்து விடுங்கள். எனக்காக காத்திருந்து படத்தை எடுத்துக் கொடுத்ததற்கு நன்றி. இதற்காக நான் வாங்கிய அந்த அட்வான்ஸ் தொகை மட்டுமே எனக்கு போதும் என்று கூறி தயாரிப்பாளரின் கஷ்டத்தை புரிந்து கொண்டு நடந்திருக்கிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

திரைப்பட விமர்சனம்: தயாரிப்பாளர் சங்கம் தொடுத்த வழக்கு ; நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

AR
Ansgar R
ரஜினிகாந்த்
தமிழ் சினிமா

Latest Videos
Recommended Stories
Recommended image1
தங்கமயில் இருக்கும் நேரம் பார்த்து அஞ்சலியோடு கோவிலுக்கு வந்த சரவணன் - பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 எதிர்பாரா ட்விஸ்ட்
Recommended image2
திரிஷா ரசிகர்களுக்கு காத்திருக்கும் செமத்தியான ட்ரீட்! சர்ச்சைகளை தாண்டி சாதிக்கும் 'எவர் கிரீன்' நாயகி! என்ன சேதி தெரியுமா?
Recommended image3
சமையல் செய்து சினிமா கத்துக்கிட்ட கரகாட்டகாரன் பட இயக்குனர்.! அஜித் பிரியாணியை ஓரங்கட்டும் கங்கை அமரன் "டிஷ்" எது தெரியுமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved