MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • திரைப்பட விமர்சனம்: தயாரிப்பாளர் சங்கம் தொடுத்த வழக்கு ; நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

திரைப்பட விமர்சனம்: தயாரிப்பாளர் சங்கம் தொடுத்த வழக்கு ; நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

எந்த ஒரு திரைப்படமும் வெளியான 3 நாட்களுக்குப் பிறகே சினிமா விமர்சனங்கள் வெளியாக வேண்டும் என தயாரிப்பாளர் சங்கம் சார்பில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், இதற்க்கு நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.  

2 Min read
Author : manimegalai a
| Updated : Dec 03 2024, 04:53 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Movie Reviews

Movie Reviews

ஒரு திரைப்படத்தின் வெற்றிக்கு கதை எந்த அளவுக்கு முக்கியமோ? அதே அளவுக்கு விமர்சனங்களுக்கும் முக்கிய பங்கு வகிக்கிறது. மெகா பட்ஜெட் படங்கள், மற்றும் முன்னணி நடிகர்களின் படங்கள் விமர்சனங்களே இல்லாமல் ரசிகர்களை சென்றடைந்தாலும், சிறு பட்ஜெட் படங்களை ரசிகர்கள் மத்தியில் கொண்டு சேர்ப்பது விமர்சனங்கள் மட்டுமே. இதற்க்கு மிகப்பெரிய உதாரணம், ப்ளூ ஸ்டார், லப்பர் பந்து, லவ்வர் போன்ற படங்கள்.
 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
You Tube Channels

You Tube Channels

முன்பெல்லாம் பத்திரிகையாளர்கள் மட்டுமே திரைப்படங்களை விமர்சனம் செய்வார்கள். ஆனால் எப்போது யூடியூப் கல்ச்சர் வந்ததோ... அப்போதில் இருந்து போன் வைத்திருப்பவர்கள் அனைவருமே ஒரு விமர்சகராக மாறி விட்டனர். போதாத குறைக்கு, பேஸ்புக், ட்விட்டர், மூலம் சிலர் திரைப்படம் பார்த்து கொண்டே இருக்கும் போது தங்களின் விமர்சனங்களை கூறுகிறார்கள்.

விஜய் டிவி 'ஆஹா கல்யாணம்' சீரியலில் சம்பள விஷயத்தில் ஹீரோக்களை மிஞ்சிய ஹீரோயின்ஸ்! முழு விவரம்!
 

35
Kanguva and Indian 2 Negative Reviews

Kanguva and Indian 2 Negative Reviews

இதுபோன்ற விமர்சனங்களால் தான், பிக் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்தியன் 2,  கங்குவா, போன்ற படங்கள் எதிர்மறை விமர்சனங்களை கடந்து ரசிகர்களை சென்றடையவில்லை என ஒரு தரப்பினர் கூற, மற்றொரு தரப்பினர் விமர்சனங்களை கடந்து பல படங்களை ரசிகர்கள் வெற்றிபெற வைத்துள்ளனர் என கூறுகிறார்கள். 

45
Producer Council

Producer Council

இந்நிலையில் தீவிர ஆலோசனைக்கு பின்னர் நடப்பு திரைப்பட தயாரிப்பாளர் சங்கம்... திரையரங்கு உரிமையாளர்களுடன் பேசி ஒரு முடிவுக்கு வந்தது. அதன்படி ஏற்கனவே திரையரங்குகளில் திரைப்படம் குறித்து கருத்து கேட்க வருபவர்கள் யாரும் உள்ளே  அனுமதிக்கப்படாத நிலையில், ஒரு படம் வெளியாகி 3 நாட்களுக்கு பின்னரே அந்த படம் குறித்த விமர்சனம் வெளியாக வேண்டும் என கூறி, சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தனர்.

மணிரத்னம் முதல் அமீர் கான் வரை! நாக சைதன்யா - சோபிதா திருமணத்திற்கு வருகை தரும் பிரபலங்கள் லிஸ்ட் இதோ!

55
Court

Court

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், இதனை விசாரித்த நீதிமன்றம், "திரைப்படங்கள் வெளியான மூன்று நாட்களுக்கு விமர்சனங்கள் வெளியிட தடை விதிக்க மறுப்பு தெரிவித்துள்ளது. அவதூறு பரப்புவது குறித்து காவல்துறையில் புகார் அளிக்கலாமே தவிர, விமர்சகர்களின் விமர்சனம், கருத்து சுதந்திரம் என்பதால் பொத்தாம் பொதுவாக எந்த ஒரு உத்தரவையும் பிறப்பிக்க முடியாது என நீதிபதி சவுந்தர் தெரிவித்தார்.விமர்சனத்தை முறைப்படுத்த விதிகள் வகுக்கக் கோரிய வழக்கில், ஒன்றிய, மாநில அரசுகள், யூடியூப் நிறுவனம் பதிலளிக்க உத்தரவிட்டு இந்த வழக்கின் விசாரணை ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
திரைப்பட விமர்சனம்
 
3rd TEST • SA vs AUS
Stumps
SASA
329 & 387
AUSAUS
429
Day 4
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Enemy Of The Smuggler Review : எனிமி ஆஃப் தி ஸ்மக்ளர் மிரட்டலா? சொதப்பலா? முழு விமர்சனம் இதோ
Recommended image2
Akshitha : பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறுகிறாரா அக்‌ஷிதா? டாஸ்கின் போது திடீரென மயங்கி விழுந்ததால் பரபரப்பு
Recommended image3
Food: அனிருத் இளமையாக இருப்பதற்கு இதுதான் காரணமா? சைவ உணவின் ரகசியம் என்ன? 10 வயது குறைவாக தோற்றமளிக்க உதவும் உணவுகள்.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved