விஜய் செய்தது தவறு; மன்னர் காலத்தில் கூட இப்படி நடக்கவில்லை - கொதிக்கும் பிரபலம்!
TVK Vijay : சென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களை தனது பனையூர் கட்சி அலுவலகத்திற்கு வரவழைத்து அத்யாவசிய பொருட்களை கொடுத்துள்ளார் த.வெ.க தலைவர் விஜய்.
TVK vijay
கடந்த சில நாட்களாகவே பெய்து வந்த கனமழையின் காரணமாக, சென்னையின் அனேக இடங்களில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. திருவண்ணாமலை பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி ஏழு பேர் பரிதாபமாக உயிரிழந்த சோகமும் அரங்கேறி உள்ளது அனைவரும் அறிந்ததே. தொடர்ச்சியாக தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த 300 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கிட்டத்தட்ட 500 மில்லி மீட்டர் மழை வெறும் 3 நாட்களில் பதிவாகியுள்ள நிலையும் ஏற்பட்டிருக்கிறது. இந்நிலையில் தமிழக அரசு உடனடியாக 2000 கோடி ரூபாய் நிதியை அளித்திட வேண்டும் என்று மத்திய அரசுக்கு கடிதம் ஒன்று எழுதியதும் குறிப்பிடத்தக்கது.
விஜய் மகன் சஞ்சய்யை வெயிட்டா கவனித்த லைகா; முதல் பட சம்பளமே இத்தன கோடியா?
Chennai Floods
இந்த சூழலில் நேற்று தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் தளபதி விஜய் ஒரு அறிக்கையை வெளியிட்டு இருந்தார். அதில் திருவண்ணாமலையில் ஏற்பட்ட திடீர் மண் சரிவினால் புதையுண்டு மூன்று வீடுகளில் சிக்கியவர்கள் சடலமாக மீட்கப்பட்ட செய்தி கேட்டு நெஞ்சு பதறியது. கடந்த காலத்திலும் சரி, தற்போதும் சரி, தங்களுடைய உயிரை பணயம் வைத்து மக்களின் உயிரை காப்பாற்றுகின்ற பேரிடர் மீட்பு மேலாண்மை படையினரின் அர்ப்பணிப்பு மிகப்பெரியது.
ஆனாலும் புயல், வெள்ளப்பெருக்கு உள்ளிட்ட காலங்களில் ஒன்றிய மற்றும் மாநில அரசுகள், உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதோடு. ஆபத்துகள் அதிகம் உள்ள இடங்களில் பேரிடர் மீட்பு படைகளை தயார் நிலையில் வைத்திருப்பது அவசியமாகும் என்று கூறியிருந்தார்.
Vijay
அதுமட்டுமில்லாமல் தற்பொழுது தன்னுடைய 69வது மற்றும் இறுதி திரைப்பட படப்பிடிப்பில் இருந்து வரும் தளபதி விஜய், பனையூரில் உள்ள தன்னுடைய அலுவலகத்தில் இன்று நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி ஒன்றை நடத்தினார். சென்னையின் பல்வேறு பகுதிகளிலிருந்து மக்கள் அங்கு வரவழைக்கப்பட்டு அவர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அரசியல் விமர்சகர் தமிழ் எழிலன் ஒரு கருத்தை வெளியிட்டு இருக்கிறார்.
Actor Vijay
மாநாட்டிற்கு நிலம் கொடுத்த விவசாயிகளை விக்கிரவாண்டியில் சந்தித்து அந்தப் பகுதியிலேயே விருந்தளிக்காமல் தனது பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்திற்கு வரவழைத்தார் விஜய். இப்போதும் புயலால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று சந்திக்காமல் பல கிலோமீட்டர் அவர்களை பயணிக்க வைத்து, தன்னுடைய அலுவலகத்தில் நிவாரண பொருட்களை வழங்கியிருக்கிறார். ஒரு பாதிப்பை நேரடியாக சென்றால் மட்டுமே அங்கு கள நிறுவனம் எப்படி இருக்கிறது என்பதை நம்மால் தெரிந்து கொள்ள முடியும். ஆனால் இப்படி ஏழை மக்களை சிரமப்படுத்தி நீண்ட தூரம் பயணிக்க வைப்பது. தன் இடத்திற்கு வரவழைப்பது மன்னர் காலத்தில் கூட நடக்காத ஒரு விஷயம். இவரா மக்களுக்கான அரசியலை செய்யப் போகிறார் என்ற கேள்வியை முன்வைத்திருக்கிறார்.