MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • 2-ஆவது நாளில் முதல் நாளை விட 3 மடங்கு வசூலை அள்ளிய 'வீர தீர சூரன்' !

2-ஆவது நாளில் முதல் நாளை விட 3 மடங்கு வசூலை அள்ளிய 'வீர தீர சூரன்' !

நடிகர் விக்ரம் நடிப்பில் வெளியாகியுள்ள 'வீர தீர சூரன்' திரைப்படத்தின் இரண்டாவது நாள் வசூல் குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது. 

2 Min read
Author : manimegalai a
| Updated : Mar 30 2025, 09:54 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16

நடிகர் விக்ரம் நடிப்பில், 2012-ஆம் ஆண்டு வெளியான 'ஐ' படத்திற்கு பின்னர் வெளியான எந்த படமும் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றியை கொடுக்கவில்லை. மணிரத்னம் இயக்கத்தில் இரண்டு பாகமாக வெளியான, 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் ரூ.500 கோடிக்கு மேல் வசூல் செய்திருந்தாலும், இது ஒரு மல்டி ஸ்டார் படமாகவே பார்க்கப்பட்டது.

26
தங்கலான் தோல்வி:

தங்கலான் தோல்வி:

எனவே தன்னை ஒரு தனி ஹீரோவாக நிலைநிறுத்தி கொள்ள, பல வருடங்களாகவே விக்ரம் போராடி வந்தார். இவர் நடிப்பில் மிகவும் வித்தியாசமான கதைக்களத்தில் உருவான, இருமுகன், கோப்ரா, தங்கலான் போன்ற படங்கள் கூட அடுத்தடுத்து தோல்வியை சந்தித்தது. குறிப்பாக கடந்த ஆண்டு வெளியான தங்கலான் படத்திற்ல் விக்ரம் நடிப்பு வெகுவாக பாராட்டப்பட்டாலும், பா.ரஞ்சித் இந்த படத்தின் கதையை கொண்டு சென்ற விதமே படத்தின் தோல்விக்கு வழிவகுத்ததாக பார்க்கப்பட்டது.

லேட்டா ரிலீஸ் ஆனாலும் வசூலில் எம்புரானை ஓவர்டேக் செய்த வீர தீர சூரன் பாகம் 2!

36
'வீர தீர சூரன்' பார்ட் 2:

'வீர தீர சூரன்' பார்ட் 2:

இதைத் தொடர்ந்து, தற்போது விக்ரம் இயக்குனர் எஸ்.யூ.அருண் குமார் இயக்கத்தில் நடித்துள்ள திரைப்படம் தான் 'வீர தீர சூரன்' பார்ட் 2. இந்த படத்தின் முதல் பாகத்தை ரிலீஸ் செய்வதற்கு முன்பே இரண்டாவது பாகத்தை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. பல பிரச்சனைகளை கடந்து மார்ச் 27ஆம் தேதி, மாலை 6:00 மணிக்கு ரிலீஸ் செய்யப்பட்ட இந்த படத்தின் இரண்டாவது நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
 

46
நல்ல வரவேற்ப்பை பெற்று வரும் வீர தீர சூரன்:

நல்ல வரவேற்ப்பை பெற்று வரும் வீர தீர சூரன்:

முதல் நாளில் இருந்தே, 'வீர தீர சூரன்' 2 திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், வசூலும் அதிகரித்துள்ளது. அதன்படி 'வீர தீர சூரன்' பார்ட் 2 திரைப்படம், தமிழகத்தில் மட்டுமே இதுவரை சுமார் ரூ.350-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. 

சியான் விக்ரம் நடிப்பில் வெளியான 'வீர தீர சூரன் 2' சூப்பரா? சுமாரா? ட்விட்டர் விமர்சனம்!
 

56
வீர தீர சூரன் இரண்டாவது நாள் வசூல்

வீர தீர சூரன் இரண்டாவது நாள் வசூல்

இப்படத்தின் இரண்டாவது நாள் வசூல் குறித்து வெளியாகியுள்ள தகவலின் படி, 'வீர தீர சூரன்' திரைப்படம் முதல் நாளை விட மூன்று மடங்கு பாக்ஸ் ஆபிசில் வசூலை குவித்துள்ளதாம். முதல் நாளில் மாலை 6 மணி மற்றும் 10 மணி காட்சிகள் மட்டுமே போடப்பட்ட நிலையில்,  இரண்டாவது நாளில் மொத்தம் 4 காட்சிகள் போடப்பட்டுள்ளது.

66
வீர தீர சூரன் விடுமுறை நாட்களில் வசூல் அதிகரிக்கும்:

வீர தீர சூரன் விடுமுறை நாட்களில் வசூல் அதிகரிக்கும்:

இதன் மூலம் 2-ஆவது நாளில், 'வீர தீர சூரன்' திரைப்படம் உலக அளவில் சுமார் 10 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இன்று மற்றும் நாளை (சனி மற்றும் ஞாயிறு)  விடுமுறை நாள் என்பதாலும், படத்திற்கு தொடர்ந்து நல்ல விமர்சனங்கள் கிடைத்து வருவதாலும் வசூல் அதிகரிக்கும் என திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் பட குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Breaking: 'வீர தீர சூரன்' படத்திற்கான தடை நீக்கம்; 6 மணிக்கு ரிலீஸ் உறுதி!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
நடிகர் விக்ரம்
வீர தீர சூரன் திரைப்படம்
தமிழ் சினிமா

Latest Videos
Recommended Stories
Recommended image1
கார்த்திகை தீபம் அப்டேட்: அம்மாவுக்காக கருவை கலைக்கத் துணிந்த ரோகிணி! கார்த்திக்கிடம் சிக்கிய உண்மை - விறுவிறுப்பான எபிசோட்!
Recommended image2
அரிசி வாங்கக் கூட காசு இல்ல; இன்று கோடிகளில் சொத்து! வறுமையை வென்று சாதித்த நடிகர் சிங்கமுத்துவின் வாழ்க்கை கதை!
Recommended image3
அஜித் - விஜய் இருவரும் சேர்ந்து நடித்த 'அந்த' சூப்பர் ஹிட் படங்கள் எவை? இதோ முழு விவரம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved