Breaking: 'வீர தீர சூரன்' படத்திற்கான தடை நீக்கம்; 6 மணிக்கு ரிலீஸ் உறுதி!
நடிகர் விக்ரம், இயக்குனர் அருண் குமார் இயக்கத்தில் நடித்துள்ள, 'வீர தீர சூரன்' படத்தின் ரிலீசுக்கு 4 வாரம் தடை விதிக்கப்பட்ட நிலையில், தற்போது சுமூக பேச்சுவார்த்தை எட்டியதை தொடர்ந்து படம் மீதான தடையை நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

நடிகர் விக்ரம் நடிப்பில், இன்று (27.03.2025) ரிலீஸ் ஆக இருந்த திரைப்படம் தான், 'வீர தீர சூரன்'. சியான் விக்ரம் ஹீரோவாக நடித்திருக்கும் இந்த படத்தில், துஷாரா விஜயன் கதாநாயகியாக நடித்துள்ளார். 'சித்தா' படத்தை தொடர்ந்து, இயக்குனர் எஸ்.யு.அருண்குமார் இப்படத்தை இயக்கி முடித்துள்ளார். கடந்த இரண்டு வாரமாக இந்த படத்தின் புரோமோஷன் பணிகள் பரபரப்பாக சென்று கொண்டிருந்தது மட்டும் இன்றி, இப்படத்தின் ப்ரீ புக்கிங்கும் வேகமாக நடந்து வந்தது.
வீர தீர சூரன் ரிலீஸில் வந்த சிக்கல்
ஆனால் நீதிமன்ற உத்தரவு காரணமாக, படத்தின் ரிலீஸில் கடைசி நேரத்தில் சிக்கல் ஏற்பட்டது. இப்படத்தின் டிஜிட்டல் மற்றும் சாட்டிலைட் உரிமைகளை வைத்திருக்கும் பி4யு எண்டர்டெயின்மென்ட் , நீதிமன்றத்தை அணுகியதால் 'வீர தீர சூரன்' படத்தை, 4 வாரம் ரிலீஸ் செய்ய கூடாது என டெல்லி உயர்நீதி மன்றம் தடை விதித்தது.
சமரச பேச்சுவார்த்தை; இன்று மாலை 6 மணிக்கு 'வீர தீர சூரன்' படம் வெளியாக வாய்ப்பு?
நீதிமன்றம் போட்ட உத்தரவு|:
இந்த பிரச்னையை தீர்க்க...தயாரிப்பாளர் தரப்பில் இருந்தும , பி4யு நிறுவனம் தொடர்ந்த வழக்கில் ரூ.7 கோடியை 24 மணிநேரத்தில் டெபாசிட் செய்ய வேண்டும் என ஐவிஒய் நிறுவனத்துக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
மாலை 6 மணிக்கு படம் ரிலீஸ்:
இதற்காக வழக்கறிஞர் ஆதித்யா குப்தாவை ஆணையராகவும் டெல்லி ஐகோர்ட் நியமித்தது. இது தொடர்பாக இருதரப்பிலும் சுமூக தீர்வு காண பேச்சு வார்த்தை நடந்து வந்த நிலையில், இன்று மாலை 3 மணிக்குள் இரு தரப்பு மத்தியிலும் சமரசம் ஏற்படும் பச்சத்தில் , இதுகுறித்து நீதிமன்றத்திலும் தெரிவிக்கப்படும் என கூறப்பட்டது. தற்போது இரு தரப்பு மத்தியிலும் சமரசம் எட்டியதாக 3 மணியளவில், நீதிபதியிடம் கூறியதை தொடர்ந்து, 4 வாரங்கள் படம் ரிலீஸ் செய்ய போட்டிருந்த தடை நீங்கி உள்ளது டெல்லி உயர்நீதி மன்றம். தடை நீங்கியதால், இன்று மாலை 6 மணிக்கு இப்படம், உலகம் முழுவதும் ரிலீஸ் ஆக உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் படக்குழுவினரும் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர்.
Breaking : வீர தீர சூரன் பட ரிலீசுக்கு 4 வாரம் தடை - ஐகோர்ட் அதிரடி உத்தரவு