Breaking : வீர தீர சூரன் பட ரிலீசுக்கு 4 வாரம் தடை - ஐகோர்ட் அதிரடி உத்தரவு
விக்ரம் நடித்துள்ள வீர தீர சூரன் திரைப்படத்தின் ரிலீசுக்கு மேலும் நான்கு வாரம் தடை விதித்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Ban For Veera Dheera Sooran Movie : சியான் விக்ரம் நடிப்பில் எஸ்.யு.அருண்குமார் இயக்கிய "வீர தீர சூரன்" திரைப்படம் இன்று ரிலீஸ் ஆகவில்லை. நீதிமன்ற உத்தரவு காரணமாக படத்தின் ரிலீஸ் கடைசி நேரத்தில் நிறுத்தப்பட்டது. இப்படத்தின் டிஜிட்டல் மற்றும் சாட்டிலைட் உரிமைகளை வைத்திருக்கும் பி4யு எண்டர்டெயின்மென்ட் நீதிமன்றத்தை அணுகியதால் வெளியீட்டுக்கு சிக்கல் ஏற்பட்டது. பிவிஆர், சினிபோலிஸ் போன்ற பெரிய திரையரங்கு நிறுவனங்கள் திட்டமிடப்பட்ட காட்சிகளை ஏற்கனவே நீக்கியுள்ளன.
வீர தீர சூரன் பட ரிலீசில் சிக்கல்
பிரச்னையை தீர்க்க தயாரிப்பாளர்கள் பி4யு நிறுவனத்திற்கு 7 கோடி ரூபாய் வழங்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சுராஜ் வெஞ்சாரமூடும், எஸ்.ஜே.சூர்யாவும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மோகன்லாலின் எம்புரான் படத்துக்கு போட்டியாக வீர தீர சூரன் படம் வெளியாகும் என் அறிவிக்கப்பட்டு இப்படத்திற்கு மிகப்பெரிய புரமோஷனும் விளம்பரம் செய்யப்பட்டது. ஆனால் கடைசி நேரத்தில் நிதிப்பிரச்சனையால் இப்படத்தின் ரிலீஸ் தடைபட்டது.
இதையும் படியுங்கள்... வீர தீர சூரன் பட ரிலீசுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் வைத்த செக்
4 வாரங்களுக்கு தடை நீட்டிப்பு
பி4யு நிறுவனம் தொடர்ந்த வழக்கில் ரூ.7 கோடியை 24 மணிநேரத்தில் டெபாசிட் செய்ய வேண்டும் என ஐவிஒய் நிறுவனத்துக்கு நீதிமன்றம் உத்தரவிட்டு, இதற்காக வழக்கறிஞர் ஆதித்யா குப்தாவை ஆணையராகவும் டெல்லி ஐகோர்ட் உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து இந்த வழக்கு விசாரணையை அடுத்த மாதத்திற்கு ஒத்திவைத்த நீதிமன்றம், படத்தை வெளியிட மேலும் 4 வாரங்களுக்கு தடை விதித்து உள்ளது. இதனால் இப்படம் அடுத்த நான்கு வாரங்களுக்கு வெளியிட முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளது.
சம்பளத்தை விட்டுக்கொடுக்கும் விக்ரம்!
ஒரு வேளை இந்த வழக்கில் இரண்டு நிறுவனங்களும் கலந்துபேசி சுமூக தீர்வு கண்டால், படத்தின் மீதான தடையில் இருந்து தப்பிக்கலாம். தற்போது சுமூக தீர்வு காண்பதற்கான வேலைகளும் நடைபெற்று வருகிறதாம். விக்ரம் தன் சம்பளத்தில் ஒரு பகுதியை திருப்பி அளித்து இந்த நிதி நெருக்கடியை தீர்க்க தயாராக உள்ளதாக கூறப்படுகிறது. இந்த பேச்சுவார்த்தையில் சுமூக தீர்வு ஏற்பட்டால் மட்டுமே படத்தை இன்றோ அல்லது நாளையோ ரிலீஸ் செய்ய முடியும். இந்த பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தால் அடுத்த ஒரு மாதத்திற்கு படம் ரிலீஸ் ஆக வாய்ப்பே இல்லை. என்ன நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
இதையும் படியுங்கள்... விக்ரமின் ஆக்ஷன் விருந்து - வைரலாகும் வீர தீர சூரன் டிரெய்லர்